என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 161880
நீங்கள் தேடியது "கோபிகாந்தி"
கோபி காந்தி தயாரித்து நடித்துள்ள ‘வைரமகன்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘சர்கார்’ படத்துடன் மோத இருக்கிறது. #Vairamagan #Sarkar
கோபி காந்தி ‘முதல் மாணவன்’ வெற்றியைத் தொடர்ந்து தனது ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்துள்ள ‘வைரமகன்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
'வைரமகன்' படம் 'அம்மா' விற்கு பாச மகனான விவசாயத் தொழிலாளிக்கு திருமணத்திற்கு பெண் தேடி அலையும் 'அம்மா' ஒரு விபத்தில் சுய நினைவை இழந்து தனக்கு மகன் இருப்பதையே மறந்து பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறாள். அந்த மகன் தனது தாயைத் தேடி பல்வேறு இடங்களுக்கு அலைகிறான். அதற்காக ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான். காணாமல் போன தாயை கண்டுபிடித்தானா? காதலியை கரம் பிடித்தானா? என்பதை குடும்பத்துடன் ரசிக்கும் அளவிற்கு சென்டிமென்டாகவும், நகைச்சுவையாகவும் கலந்து 'வைரமகன்' உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் ஒரு பாடல் விவசாயிகளின் கஷ்டத்தையும், பெருமைகளையும் சொல்லும்படி வரிகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அப்பாடலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். 'வைரமகன்' படப்பிடிப்பு நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.
'வைரமகன்' படத்தை ஒரு வழியாக நிறைவு செய்து வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிடுகிறார் கோபி காந்தி. 'வைரமகன்' படத்தில் 'கோல்டு ஸ்டார்' கோபிகாந்தியுடன் சுகன்யாஸ்ரீ, சுதா என்ற இரண்டு புது முகங்கள் நடித்துள்ளனர். நெல்லை சிவா,
போண்டா மணி, விஜய கணேஷ், அப்பு போன்ற காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர். ராஜுகீர்த்தி எடிட்டிங் செய்துள்ளார். எஸ்.எஸ். சூர்யா இசையமைத்துள்ளார். முருகவேல் இயக்கியுள்ளார். 'வைரமகன்' படத்தை கோபி காந்தியே வெளியீடு செய்கிறார்.
மேலும் 'வைரமகன்' தீபாவளி அன்றே டி.வி.டியும் இணையதளத்திலும், தொலைக்காட்சியிலும் வெளியிடுவதாகவும் கோபி காந்தி தெரிவித்துள்ளார்.
×

X