search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்குமார்"

    • நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.





    • இயக்குனர் ராஜ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லோக்கல் சரக்கு’.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லோக்கல் சரக்கு'. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் இயகியுள்ளார். மேலும், இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார்.


    லோக்கல் சரக்கு

    இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் 'லோக்கல் சரக்கு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குடியால் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை விளக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



    ராஜ்குமார், ஸ்ரிஜிதா, நடிப்பில் வெங்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கூத்தன்’ படத்தின் விமர்சனம். #Koothan #KoothanMovieReview
    சென்னையில் ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டிங்கை அகற்றாமல், சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அப்பகுதியில் வசித்து வரும் துணை நடிகையான ஊர்வசியின் மகன்தான் நாயகன் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நடன குழுவை நடத்தி வருகிறார். 

    இந்நிலையில், கலைஞர்களுக்காக கொடுத்த இடத்தை கேட்கிறார் தயாரிப்பாளரின் மகன். தான் பண நெருக்கடியில் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுத்தால் பணப்பிரச்சனை தீரும் என்றும் கூறுகிறார். ஆனால் சினிமா கலைஞர்களுக்கோ அந்த இடத்தை விட்டு போக விருப்பம் இல்லை. அதேசமயம், தங்களுக்கு இடம் கொடுத்த தயாரிப்பாளர் மகனையும் அப்படியே அனுப்ப மனம் இல்லை. அதனால், தங்களால் முடிந்த பணத்தை கொடுக்கிறோம் என்று நாயகன் ராஜ்குமார் கூறுகிறார்.

    அதன்படி பணத்தை திரட்ட தயாராகும் ராஜ்குமார், உலகளவில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றால் கோடிக் கணக்கில் பணம் கிடைப்பதை அறிந்து அதில் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.



    மற்றொரு புறத்தில் பரத நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர் நாயகி ஸ்ரிஜிதா. இவரின் ஒரே உரிக்கோள் பெரிய நடன கலைஞராக இருக்கும் நாகேந்திர பிரசாத்தை தோற்கடிப்பது. நாயகன் ராஜ்குமாருக்கும் நாயகி ஸ்ரிஜிதாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஸ்ரிஜிதாவும் பணப்பிரச்சனையில் சிக்குகிறார். இதற்கு ஒரே வழி நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

    இறுதியில் நாயகன் ராஜ்குமார் அந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று கலைஞர்களுக்கான குடியிருப்பு பகுதியை தக்க வைத்தாரா?  நாயகி ஸ்ரிஜிதா, நாகேந்திர பிரசாத் மீது கோபமாக இருக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார், சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடன திறமையை திறம்பட செய்திருக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் வலம் வரலாம்.  நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். 

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகேந்திர பிரசாத் திரையில் தோன்றி ரசிகர்களை நடனத்தால் கவர்ந்திருக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்.



    நடனத்தை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி. படத்தில் ஒரு சில காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக டி.ஆர். பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கூத்தன்’ ஜித்தன்.
    ×