search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலணி"

    ஒடிசா மாநிலம், பூரி நகரில் உள்ள ஜகநாதர் ஆலயத்துக்குள் துப்பாக்கி மற்றும் காலணிகளுடன் போலீசார் நுழைய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PuriJagannathtemple #SC #PolicemanShoes
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம், பூரி நகரில் 12-ம் நூற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு புதிய வரிசை முறையை உருவாக்க நிர்வாகம் தீர்மானித்தது.

    இந்த வரிசை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ம் தேதி 12 மணிநேர கடையடைப்புக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், பின்னர் வன்முறையாக மாறியது.

    பூரி ஜகநாதர் ஆலயத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தகர்த்தபடி பலர் ஆலயத்தின் நிர்வாக அலுவலகத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் காயமடைந்தனர்.

    வன்முறைய கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி 47 பேரை கைது செய்தனர்.



    இந்த சம்பவத்தின்போது போலீசார் துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் உள்ளே நுழைந்ததால் பூரி ஜகநாதர் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டதாக ஒரு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகுர்ம் தீபக் குப்தா ஆகியோர் பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள்  துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் போலீசார் நுழைய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர். #PuriJagannathtemple #SC #PolicemanShoes

    ×