search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மனு அளித்தனர்.
    • மழைநீர் மற்றும் கழிநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக மனுவில் கூறியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 51-வது வார்டு இந்திராநகர், திரு.வி.க.நகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் மற்றும் கழிநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    ஆகையால் பருவ மழைக் காலத்திற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் முறையான வடிகால் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், பொதுச்செயலாளர் உமரிசத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர்கள் வாரியார், தங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தெற்கு மண்டல தலைவர் மாதவன், வடக்கு மண்டலம் வினோத், மேற்கு மண்டலம் சிவகணேஷ், 51-வது, வார்டு தலைவர் சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரஞ்சனா, செல்வராணி, காளிராஜா, முருகன், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் மகேஷ் பாலகுமார் துணை தலைவர் பொய் சொல்லான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், ரெக்ஸ் பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி, இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், மாணவரணி செயலாளர் அகஸ்டின், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், விவசாய அணி செயலாளர் சரவணன், மீனவர் அணி செயலாளர் விக்ரம், தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார் மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகரச் செயலாளர் உதயசூரியன் அவைத்தலைவர் மதியழகன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமரன் ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பொன்மணி, ஜேசு செல்வி, சுந்தர், காமராஜ், சசிகுமார், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 30-ந்தேதி தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் மரணம் அடைந்த இளைஞர் சாம்ராஜ் மரணத்திற்கு காரணமான தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் ரூ.2 கோடி இழப்பீடு பெற்று மரணம் அடைந்த சாம்ராஜ் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அந்த நிறுவனங்கள் மீது நேரடி விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சாம்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வருகின்ற ஜூலை 15-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தூத்துக்குடிக்கு வருகை தரும் சமத்துவ தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கி பாராட்டு விழா நடத்துவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்கள் அனைத்தும் அமலைச் செடிகள் ஆக்கிரமித்து காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என கடந்த ஒரு வருடமாக மாவட்ட கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வருகின்ற மழைக்காலத்திற்கு முன்பாக குளங்களில் உள்ள அமலை செடிகள், காட்டுச் செடிகளை அப்புறப்படுத்தி குளங்களை தூய்மைப்படுத்த வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மத்திய அரசு அலுவலகமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ் , மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஐ.என்.டி.சி. ராஜ்,மண்டல தலைவர்கள் பிரபாகரன், ஜசன்சில்வா, சேகர்,செந்தூர்பாண்டி, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா,

    மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன்,அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.ராஜன் , ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி,மாணவர் காங்கிரஸ் மாநகர் தலைவர் பிரவீன்துரை, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்,மீனவரணி மாநகர தலைவர் ரொனால்டு, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்,

    மகிளா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட நிர்வாகிகள் கோபால்,ராதாகிருஷ்ணன்,சாமுவேல்ஞானதுரை, கதிர்வேல், மகாலிங்கம், வாசிராஜன், கனகராஜ், சித்திரைபால்ராஜ், தனுஷ், நிர்மல் கிறிஸ்டோபர், சின்னகாளை,சண்முகசுந்தரம், சுசைவியாகுலம், ஜெயகிங்ஸ்டன், ஜெயராஜ், மகாராஜன், கருப்பசாமி, முருகன்,குமாரமுருகேசன், புஷ்பராஜ், ராஜரத்தினம், முனியசாமி இசக்கிபாண்டியன், நெப்போலியன், நவ்ரோஜ், நடேஷ்குமார், கிருஷ்ணன்,கணேசன்,உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருச்செந்தூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் திருச்செந்தூரில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் இந்திரா, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், திருவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, சமூக நல்லிணக்கப்பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளரக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் தமிழ்குட்டி, தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அரசின் செலவில் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மணி கண்டராசா, திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் செஞ்சுடர், ஆட்டோ கண்ணன், திருவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் கனிபாண்டியன், ஆழ்வை ஒன்றிய பொருளாளர் செல்வக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக நல்லி ணக்கப்பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர்முத்து நன்றி கூறினார்.

    • தமிழக கடலோர பகுதிகளில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

    தூத்துக்குடி:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று தமிழக கடலோர பகுதிகளில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை போலீசார், மத்திய, மாநில உளவுத்துறையினர், கியூ பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சுமார் 1,000 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மரைன் டி.எஸ்.பி. தலைமையில் கடலோர போலீசார் 2 குழுக்களாக பிரிந்து படகுகள் மூலம் கடலோர பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

    வழக்கமாக இந்த ஒத்திகையையொட்டி கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருவுவார்கள். அவர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும் என்பது தான் இந்த ஒத்திகையின் முக்கிய உத்தரவு ஆகும்.

    அதன்படி தூத்துக்குடி கடற்கரை பகுதி வழியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 10 பேர் நகருக்குள் ஊடுருவ முயன்றனர்.

    அவர்களை கடலோர பாதுகாப்பு படை டி.எஸ்.பி. பிரதாபன், இன்ஸ்பெக்டர் ரேனிஸ் மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை வரை நடைபெறுகிறது.

    • கடந்த ஆண்டு இதே நாளில் சிவகண்ணனின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
    • தந்தை தற்கொலை செய்த அதே இடத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் சிவகண்ணன் ( வயது 27). இவர் நேற்று இரவு வீட்டு மேற்கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    தகவல் அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    கடந்த ஆண்டு இதே நாளில் சிவகண்ணனின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.தந்தை மறைந்த பிறகு தாயுடன் வசித்து வந்த அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் தந்தை நினைவு நாளான நேற்று அவர் தற்கொலை செய்த அதே இடத்தில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஞானதீபா தற்போது 4 மாதகர்ப்பமாக உள்ளார்.
    • அந்தோணிமுத்து இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் திருமாஜிநகரை சேர்ந்தவர் அந்தோணிமுத்து (வயது 25). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ஞானதீபா (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    ஞானதீபா தற்போது 4 மாதகர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்தோணிமுத்து வேலைக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் ஞானதீபா இல்லை.

    அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அருப்புக்கோட்டை தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணிமுத்து இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானதீபா எங்கு சென்றார்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்த இந்த புத்தாக்க பயிற்சி நடந்தது.
    • ஆயிரத்து 141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் 10 ஆண்டுகளாக நிரப்ப படாமல் இருந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமையில் புத்தாக்க பயிற்சி நடந்தது.

    தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கூட்ட அரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

    பயிற்சிக்கு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ முன்னிலை வகித்தார்.

    பயிற்சியை தொடங்கி வைத்து பின்னர் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் பேசியதாவது:-

    தமிழக அரசு சிறப்பு திட்டங்கள் மூலம் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகளை கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குகிறது. இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமும், கிராமிய பொருளாதார நிலையும் உயர்கிறது. தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

    தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் 3 ஆயிரத்து 30 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் ஆயிரத்து 141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் 10 ஆண்டுகளாக நிரப்ப படாமல் இருந்தது.

    இந்த நிலையில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ஆகியோரின் முயற்சியால் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, ஆயிரத்து 89 கால்நடை உதவி மருத்துவர்களக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழி காட்டுதல்களை வழங்கும் புத்தாக்க பயிற்சி நடந்து வருகிறது.

    அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் புதிதாக பணியில் சேர்ந்த 48 கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்த இந்த புத்தாக்க பயிற்சி நடக்கிறது.

    மேலும் 20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழிகள் என மொத்தம் 12 லட்சத்து 37 ஆயிரத்து 764 கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது குறித்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்பட்டது என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய துணை வேந்தர் சுகுமார், கால்நடை பராமரிப்புத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் ராஜன் மற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கேற்றது.
    • பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் போட்டியினை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக தென் மண்டல அளவிலான மாவட்டங்களுக்கிடையேயான கைப்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கு கொண்டன. போட்டியில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். கல்லூரி இரண்டாம் இடத்தையும்,

    பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மூன்றாம் இடத்தையும், நாகர்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி நான்காம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் சந்திரகுமார், தென்காசி மாவட்ட செயலர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நடை பெற்ற தொடக்க விழாவில் பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் செய்திருந்தார்.

    • 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான யு.டி.ஐ. அடையாள அட்டை சுமார் 50 பேருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய யு.டி.ஐ. அடையாள அட்டை என்பது ஆதார் அட்டை போன்றது. முதல்-அமைச்சர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சொர்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
    • உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கந்தசாமிபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அந்தோணி கண்ணன்,

    தொண்டரணி துணை செயலாளர் ராமர், மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் , விஜயராஜ், கவுன்சிலர்கள் கற்பக கனிசேகர், ஜான்சிராணி, நாகேஸ்வரி, அந்தோனி பிரகாஷ்மார்சல், தெய்வேந்திரன், வட்டச் செயலாளர் சதிஷ் குமார், சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ்,

    போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் அல்பர்ட், பிரதிநிதிகள் பிரபாகர் லிங்க ராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மணி, ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி முழுவதும் 400 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    • அம்மோனியா இறக்குமதி முனையத்தில் அவசரகால ஒத்திகை
    • அம்மோனியா கசிந்தால் அதனை எவ்வாறு தடுப்பது?

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் அம்மோனியா இறக்குமதி முனையத்தில் அவசரகால ஒத்திகை தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குநர் நிறைமதி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் டி-401 அம்மோனியா சேமிப்பு கொள்கலனிலிருந்து வெளிவரும் குழாயில் அம்மோனியா கசிந்தால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.

    இதை கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் அம்மோனியா இறக்குமதி முனையத்தின் துறைத்தலைவர் சிக்கந்தர்பாஷா அம்மோனியா கசிவை கட்டுப்படுத்த தனது குழுவிற்கு ஆலோசனை வழங்கினார்.

    அவரது அறிவுரையின்படி தொழிற்சாலை ஊழியர்கள் பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொண்டு அம்மோனியா கசிவினை தடுத்து நிறுத்தும் ஒத்திகையை செய்து காண்பித்தனர்.

    பின்னர் சுற்றுசூழல் நிலை சரிபார்க்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி முடித்துக்கொள்ளப்பட்டது. இதில் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஒத்திகைக்கு தூத்துக்குடி துறைமுக தீ அணைப்பு வீரர்களும், டி.சி.டபிள்யூ. நிறுவன அதிகாரிகளும் வந்திருந்தனர். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் ரவிச்சந்திரன் ஒத்தகை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    அவசரகால ஒத்திகை முடித்தபின் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குனரான நிறைமதி ஒத்திகையை நடத்திய அனைவரையும் பாராட்டினார். மேலும் ஒத்திகையை சிறப்பாக நடத்த கருத்துகளையும் தெரிவித்தார்.

    ×