search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • பார்வதி நாதன் தூத்துக்குடியில் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
    • லோடு ஆட்டோ பார்வதிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் பார்வதி நாதன்(வயது 25). இவர் நெல்லை சட்டக் கல்லூரியில் படித்து முடித்து தூத்துக்குடியில் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த பார்வதிநாதனை அவரது அப்பா அய்யப்பன் வீட்டிற்கு சாப்பிட வருமாறு செல்போனில் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்த பார்வதிநாதன் ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டி சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த பார்வதிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்- இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பெற்றோர்களே பொறுப்பாவார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இன்று பீச், பூங்கா மற்றும் அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அமைதியான முறையில் எவ்வித இடையூறும் இல்லாமல் மகிழ்ச்சிகரமாக சென்று வருவதற்கு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் லைசன்சரில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய அளவில் மாற்றம் செய்து வைத்துக்கொண்டு பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்களில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ் செல்லுதல், பைக்கில் சாகசம் செய்தல், விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அத்துடன் அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

    அதே போன்று 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி அதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பின் விளைவுகளுக்கு பெற்றோர்கள் பொறுப்பாவார்கள்.

    பொது இடங்களில் தேவையில்லாமல் அமர்ந்து மது அருந்திக் கொண்டு கலகத்தை உண்டு பண்ணு பவர்கள்,பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ஆண் மற்றும் பெண் போலீசார் சீருடை அணியாமல் பொதுமக்களில் ஒருவரோடு, ஒருவராக ஆங்காங்கே ரோந்துப் பணி மேற்கொள்வார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    மேலும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.அதனால் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க பல்வேறு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொண்டு சட்டப்படி தீர்வு கண்டு கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உதவுவதற்கு காவல்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொண்டு காவல் துறையின் அவசர உதவிக்கு எண். 100 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண். 95141 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குரங்கணி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கி பரிசு தொகுப்பினை வழங்கினார்

    தென்திருப்பேரை:

    குரங்கணி ஊராட்சியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்க பணம் ரூ.1,000 ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பயனாளிகள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கி சென்றனர்

    • துரைப்பாண்டி நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கில் வீடு சென்று கொண்டிருந்தார்.
    • பலத்த காயம் அடைந்த துரைப்பாண்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் துரைப்பாண்டி ( வயது 25). கூலித்தொழிலாளி. நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கில் வீடு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது துரைப்பாண்டியின் மோட்டார் சைக்கிள் மோதியது. பின்னர் சாலையின் தடுப்புசுவரின் மீது மோதி கீழே விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் சிவசங்கரன், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநகர பகுதிகளில் பொங்கல் விடுமுறையில் பொதுமக்கள் பயன்படுத்து வதற்காக பல பூங்காக்களை செப்பனிட்டு வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதன் ஓரு பகுதியாக டூவிபுரத்தில் உள்ள சங்கர நாராயணன் பூங்கா மற்றும் குறிஞ்சி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் கரிசல் இலக்கிய பூங்காவையும் முழுமையாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களிடம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்க ளையோ, பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வைத்திருக்கவோ, விற்கவோ வேண்டாம் என்று மேயர் கேட்டுக் கொண்டார்.

    • டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 27-வது ஆண்டு விழா நடந்தது.
    • விழாவுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், பள்ளி கமிட்டி உறுப்பினருமான பிரம்மசக்தி வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாமோதர நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 27-வது ஆண்டு விழா நடந்தது.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி

    விழாவுக்கு தட்சணமாற நாடார் சங்க செயலாளர் டி.ராஜகுமார் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் மற்றும் தாளாளர் உமரிசங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், பள்ளி கமிட்டி உறுப்பினருமான பிரம்மசக்தி வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் எஸ்.பி.மாரியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தாரணி, தமிழக பனை மரத் தொழிலாளர் நலவாரிய தலைவரும், சமத்துவ மக்கள் கழக தலைவருமான எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு, 10, 11, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் கோப்பைகளையும் வழங்கி பாராட்டி பேசினர்.

    சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்

    விழாவில் நீதிபதி தாரணி பேசும் போது, நம் முன்னேற்றம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். மாணவர்கள் செல்போனை நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி கற்று கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    பனை மரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசும் போது, பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்று கூறினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க செயலாளர் முருகன், எம்.ஜெகதீசன், பாலமுரளி, தட்சணமாற நாடார் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏ.அசோகன், பி.எஸ்.கனிராஜ், எஸ்.எஸ்.எஸ். சிவசங்கர், ரகுநாதன், மாணிக்கவாசகம், எஸ்.கே.செல்லப்பாண்டி, ராகவன், கே.லிங்கசெல்வன், கல்யாணசுந்தரம், ஏ.டி.சுரேஷ், ராமசுப்பு, முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளி துணை முதல்வர் சி.வாசுகி நன்றி கூறினார். நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை வி.இனிகோ கர்டோசா தொகுத்து வழங்கினார். 

    • விக்னேஷ் தூத்துக்குடி-நெல்லை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
    • பொருட்கள் வாங்குவது போல வந்த வாலிபர் ஒருவர் பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது40). இவர் தூத்துக்குடி-நெல்லை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    பணம் மாயம்

    நேற்று வழக்கம் போல விக்கேஷ் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில இரவில் வியாபாரம் முடிந்து கணக்குகளை சரிபார்த்தனர்.

    அப்போது ரூ. 2¼ லட்சம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடையின் ஊழியர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    துணிகர கொள்ளை

    அப்போது கடையில் பொருட்கள் வாங்குவது போல வந்த வாலிபர் ஒருவர் ஊழியர்கள் கவனிக்காத நேரத்தில் கல்லாவில் இருந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

    இது தொடர்பாக விக்னேஷ் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஊழியர்கள் இருக்கும் போதே வாலிபர் கல்லாவை திறந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
    • விழாவில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர தி.மு.க.துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை தாங்கினார்.

    அவைத்தலைவர் அந்தோணி முத்துராஜா, செயலாளர் முருகன், ஞானக்கண், லெட்சுமி, பொருளாளர் செல்வகுமார், வட்ட பிரதிநிதிகள் மகேஸ்வரன், பாலமுருகன், ஆட்டோ குமார், படையப்பா, கிருஷ்ணன் பிள்ளை, நிர்வாகிகள் முத்துராஜ், முருகேசன், மாரியப்பன், கிருபை மணி, முத்துச்சாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தையல் எந்திரம், அயர்ன் பாக்ஸ், சேலை, ஆட்டோ ஓட்டுநர்கள் 20 பேருக்கு சீருடை உள்பட 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெறுகிறது. தமிழக மக்கள் நல்ல உழைப்பாளிகள், கல்விதிறன் உள்ளவர்கள். இந்தியாவில் தொழில்துறையில் 24-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. தொலைநோக்கு திட்டத்தோடு முதல்வர் பணியாற்றி வருகிறார். ஊட்டச்சத்து குறைவை தடுக்கும் வகையில் காலையில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வித்திறன் அதிகரித்துள்ளது. வருகைப் பதிவேடும் கூடியுள்ளது.

    பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 40 சதவீதம் வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வழங்கப்பட்டு வருகிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் துணை யாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் ஜெகன் பெரிய சாமி பேசியதாவது:-

    1¾ வருடம் ஆட்சியில் இந்தியா திரும்பி பார்க்கும் வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது. எல்லா துறைகளிலும் 100 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

    இந்த பகுதி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர துணைச் செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமன், மகளிரணி நிர்வாகள் ரேவதி, சந்தனமாரி, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, இசக்கிராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மகளிரணி துணை அமைப்பாளர் பார்வதி மற்றும் மணி, அல்பர்ட், பிரபாகர், வட்ட செயலாளர்கள் பாலு, ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்.இ.டி. டி.வி. வழங்கப்பட்டது.

    • ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • சித்த மருத்துவ முகாமை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா புஷ்பம் தலைமை தாங்கி நடத்தினார்.

    செய்துங்கநல்லூர்:

    கிள்ளிகுளம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கடந்த 3-ந்தேதி முதல் நாளை வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமின் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு, சித்த மருத்துவ பிரிவு ஆரம்ப சுகாதார நிலையம், வல்லநாடு இணைந்து ஆழ்வார்கற்குளத்தில் பொதுமக்களுக்கு நடத்தும் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது.

    இதனை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா புஷ்பம் தலைமை தாங்கி நடத்தினார். இதில் சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார், சித்த மருத்துவத்தின் தொன்மை மற்றும் சிறப்பினைப் பற்றி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மேலும், மருந்தாளுனர் வெங்கடேசன் பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கினார். முடிவில் நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
    • தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது.

    எட்டயபுரம்:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. பயிறுவகைகள், சிறுதானியங்கள், பணப் பயிர்கள், எண்னை வித்துக்கள் என பயிரிட்டு உள்ளனர்.

    அவை தற்போது கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. தமிழர் திருநாள் தைப்பொங்கல் மற்றும் அதன் மறுநாள் மாட்டுப்பொங்கலன்று நிலத்தில் பாடுபட்ட கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    உடன்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், கருப்பூர், அயன்வடமலாபுரம், வேடப்பட்டி, குளத்தூர், பெரிய சாமிபுரம், பனையடிப்பட்டி ஆகிய கிராமங்களில் லட்சக்க ணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதன் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம் வரையாகும்.

    நுங்கு அதன்பின் பழமாகிறது. உதிர்ந்த பனம்பழ பனை விதைகளை நிலத்திற்கடியில் தோண்டி புதைத்து மண்ணால் மூடிவிடுவார்கள். மழைக்காலத்தில் முளைத்து கிழங்காக உருவெடுக்கும். தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது. தற்போது பொங்கலுக்கு விற்பனை செய்ய பனங்கிழங்கு தயாராகி வருகிறது.

    கடந்த வருடம் 25 கிழங்கு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. போதிய மழை இல்லாததால் 1½ அடி வளரவேண்டிய பனங்கிழங்கு தற்போது அடிப்பாகம் மட்டும் விரிவடைந்து அதிகம் வளராமல் உள்ளது. இருப்பினும் நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    தைப்பொங்கலுக்கு ரேசன்கடைகளில் பச்சரிசி, வெல்லம், கரும்புடன் பனங்கிழங்கு வரக்கூடிய காலங்களில் வழங்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 

    • கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதனை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில்100 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் அறுசுவையுடன் கூடிய மதிய உணவை வழங்கி பிறந்தநாள் விழாவை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

    முன்னதாக கனிமொழி எம்.பி.யின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிரமாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வ ராஜ்,விண்மீன் டிரஸ்ட் பாலா, பகுதி செயலா ளர்கள் சுரேஷ், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ஜான்சிராணி, விஜயலட்சுமி துரை வானி மார்ஷல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்தரன், பாலன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் செல்வக்குமார், அருண், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜபிரபுக்கு தகவல் கிடைத்தது.
    • சிவக்குமாரிடம் இருந்து 87 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடு படக்கூடிய நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை யில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் ராஜ பிரபுக்கு தகவல் கிடைத்தது.

    உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு மதுபாட்டில் களை விற்பனை செய்து கொண்டிருந்த காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(வயது 52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 87 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி வடபகம் போலீஸ் சரக பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×