search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ்"

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டனர்.

    மேலூரில் இருந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வலியால் துடித்த பரமேஸ்வரியை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. முசுண்டகிரி பட்டி அருகில் வரும்போது பரமேஸ்வரிக்கு வலி அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் முத்தையா வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தினார்.

    தொடர்ந்து பரமேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளர் விமல், பெண்ணுக்கும் குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    • தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
    • ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிகம்பம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி சித்ரா. கர்ப்பிணியான இவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆம்புலன்ஸ் வந்ததும் கர்ப்பிணி சித்ராவை ஏற்றிக்கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது.

    வலி அதிகமானதால் அவருக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் ஈஸ்வரி சிகிச்சை அளித்தார். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே சித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு இருவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

    • மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது
    • 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்த விட்டால் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பீச் ரோடு பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.

    அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்த போது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருடப்பட்ட அதே இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நம்பர் பிளேட் மாற்றி வைத்திருந்ததை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் கொள்ளையனை பிடிக்க அவர் முடிவு செய்து மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றார். இதையடுத்து மோட்டர் சைக்கிள் உரிமையாளர் அந்த வாலிபரை பிடித்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

    பின்னர் கொள்ளையன் பிடிபட்டது குறித்து போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்கள் பிடியிலிருந்த கொள்ளையனை மீட்டனர். மீட்கப்பட்ட நபருக்கு பொதுமக்கள் தாக்கியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டி ருந்தது. பிடிபட்ட வாலிபர் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்த விட்டால் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். உடனே டிரைவர் 108 ஆம்புலன்சை நிறுத்தினார். ஆம்புலன்சில் இருந்து இறங்கி தப்பிச் சென்று விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • திருமங்கலம் அருகே விபத்தில் பலியான ராணுவ வீரர் நினைவாக ஆம்புலன்ஸ் சேவை தி.மு.க. மாவட்ட செயலாளர் தொடங்கி வைத்தார்.
    • ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள உலகாணி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து-மீனாட்சி தம்பதியரின் மகள் பாலமுருகன். இவர் ராணுவ வீரராக பணியாற்றினார். 6 வருடத்திற்கு முன்பு ஊருக்கு வந்திருந்த நிலையில் பாலமுருகன் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

    பாலமுருகனின் 29-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சகோதரர் பால்பாண்டி மற்றும் குடும்பத்தினர் சார்பில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைக்கு ஏற்பாடு செய்தனர்.

    இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை தொடக்க விழா சின்ன உலகாணி கிராமத்தில் நடந்தது. இதில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் லாவண்யா, எஸ்.கே.ஜி. மருத்துவமனை மருத்துவர் அமுதகுமார், வேலு மருத்துவமனை மருத்துவர் சரவணன், கூடக்கோவில் தலைமை ஆசிரியர்கள் ஞானம்மாள், மோகன், ஆசிரியர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அவசர உதவிக்கு தொடர்புகொள்ளும் 108 எண் சேவை அரை மணி நேரமாக தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தொடர்பு சீராகியுள்ளது. #108 #Emergency
    சென்னை:

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர வசதிக்கு நாடு முழுவதும் 108 என்ற தொலைபேசி எண் அமலில் உள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் இணைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தது. 
    இதனால், தற்காலிகமாக 044-40170100 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது, கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து 108 எண் சேவை சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ×