search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்கலப்பதக்கம்"

    15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய பேட்மின்டன் போட்டியில் சென்னை வீரர் சங்கர் முத்துசாமி வெண்கலப்பதக்கம் பெற்றார். #AsianJuniorBadminton
    15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய பேட்மிண்டன் போட்டி மியான்மர் நாட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை வீரர் சங்கர் முத்துசாமி வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன்மூலம் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    சங்கர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நேபாள வீரரையும், கால்இறுதியில் மலேசிய வீரரையும் தோற்கடித்தார். அரை இறுதியில் கொரியா வீரரிடம் போராடி தோற்றார்.

    அவர் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார். #AsianJuniorBadminton
    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் குர்னிஹால் சிங் வெண்கலப்பதக்கத்தை வென்றார். #JuniorShooter #India ##ISSFWCH
    சாங்வான்:

    52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்திய வீரர் 19 வயதான குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

    இத்தாலி வீரர் எலியா ஸ்ட்ருச்சியோலி தங்கப்பதக்கமும் (55 புள்ளி), அமெரிக்காவின் நிக் மாஸ்செட்டி வெள்ளிப்பதக்கமும் (54 புள்ளி) பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் குர்னிஹால் சிங், அனட்ஜீத்சிங் நருகா, ஆயுஷ் ருத்ராராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 355 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

    செக்குடியரசு தங்கப்பதக்கமும் (356 புள்ளி), இத்தாலி வெண்கலப்பதக்கமும் (354 புள்ளி) வென்றது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 22 பதக்கங்களுடன் 4-வது இடம் வகிக்கிறது.  #JuniorShooter #India ##ISSFWCH
    ×