search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம்"

    • பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்கு சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார், அண்ணா, ஆகியோரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரியார் சுப்பிரமணி தலைமை வகித்தார். அங்ககுமார், குமாரவேல், முன்னிலை வகித்தனர். திருமூர்த்தி வரவேற்றார். இதில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

    பெரியாரின்,அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் கத்துகின்றன.பயந்து நடுங்கும் கட்சியல்ல தி.மு.க. இந்த நாட்டில் நன்றாக உள்ள கட்சியை உடைத்து,அதில் உள்ள குள்ள நரிகளை வைத்து ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க.வின் நரித்தனம் தமிழகத்தில் பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் மு.சுப்பிரமணியம், காவி.பழனிச்சாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முளகுமூட்டில் தொடங்கி களியக்காவிளை சென்றடைகிறார்
    • வழி நெடுக செல்பி எடுத்து தொண்டர்கள் உற்சாகம்

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

    கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாதயாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று இரவு முளகுமூடு பகுதியில் தங்கினார். இன்று 4-வது நாளாக முளகுமூட்டில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரை யாடியதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து காலை 7.05 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. வெள்ளை சீருடையுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு நிர்வாகிகள் முன் சென்றனர். தொடர்ந்து செண்டை மேள கலைஞர்கள் முன் செல்ல ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக் விஜய் சிங், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், விஜய்வசந்த் எம்.பி., ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.முளகுமூடு பகுதியில் ஏராளமான சிலம்பாட்ட கலைஞர்கள் ராகுலை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் ராகுல்காந்தியை கண்டதும் சிலம்பம் ஆடினர்.

    அதனை ரசித்த ராகுல் காந்தி பின்னர் சிலம்ப கலைஞர்களை அருகில் அழைத்து பாராட்டினார். இதுபோல சாலையோரம் நின்ற சிறுமி ஒருவரை அழைத்து ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்ட சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வீடுகளின் மாடிகளில் இருந்தும் பெண்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை பார்த்து கை அசைத்தனர். ராகுல்காந்திக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் செண்டை மேளம், சிங்காரி மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ராகுல்காந்தி பயணம் செய்த பாதையோரம் ஏராள மான பள்ளி மாணவிகளும் அவரை பார்க்க காத்திருந்தனர். ராகுல்காந்தி வந்ததும் அவர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். அவர் களில் சிலர் செல்போன்களை உயர்த்திக் காட்டி செல்பி எடுக்க வேண்டுமென்று கேட்டனர்.

    அவர்களை பார்த்து புன்முறுவல் செய்த ராகுல்காந்தி, பாதுகாப்பு அரணை தாண்டி சென்று மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

    இன்று காைல முளகுமூட் டில் தொடங்கிய ராகுலின் பாத யாத்திரை மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஓய்வு எடுக்கும் ராகுல்காந்தி இன்று மாலை 3 மணிக்கு களியக்காவிளை சென்று அடைகிறார்.

    ராகுல்காந்தி மேற்கொண் டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் 4 நாட் கள் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய பாத யாத்திரை இன்று குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சென்று அடைகிறது. இன்றிரவு களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியான செறுவாரக்கோணத்தில் நிறைவு செய்கிறார். அதன்படி, ராகுலின் தமிழக சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    நாளை முதல் ராகுல்காந்தியின் கேரள பாத யாத்திரை தொடங்கு கிறது. அங்கு 18 நாட்கள் அவர், பாத யாத்திரை மேற் கொள்கிறார். இன்று கேரள எல்லையை நெருங்க நெருங்க ராகுலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • பணி சுமையை குறைக்க வேண்டும் ,கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • 12-ம் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது .

    நாகர்கோவில்:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 12-ந் தேதி முதல் 3- நாள் தொடர் விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர்.

    ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சிகளில் வரி வசூல் செய்தல், மின்விளக்குகள் பராமரித்தல் ,100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் ,முழு சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஊராட்சி செயலாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் ,கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தினை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் 12-ம் தேதி முதல் 14-ந் தேதி வரை 3- நாள் ஊதியம் இல்லா விடுப்பு போராட்டம் நடைபெற உள்ளது .

    இதையடுத்து குமரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் 3- நாள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதையடுத்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்த விடுப்பு கடிதத்தை ஊராட்சி செயலாளர்கள் சங்க குமரி மாவட்ட துணைத் தலைவர் காளியப்பன் தலைமையில் ஒன்றிய நிர்வாகி டேனியல் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.

    • மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசியிருக்கிறார்.
    • கொள்ளையடிப்பதற்காகவே கூட்டாட்சி கொள்கை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தது. நேற்றிரவு மாநகரம் முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆலங்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது அவர் பேசியதாவது:- கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசியிருக்கிறார். 2004 - 2014 மத்தியில் கூட்டாட்சியின் போது இந்தியா பின்னோக்கி சென்றது .கொள்ளையடிப்பதற்காகவே கூட்டாட்சி கொள்கை.

    2014-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளில் பெரும்பான்மையோடு ஒரு கட்சி ஆட்சி செய்ததால் சுயசார்பு பாரதம் சாத்தியமானது.மாநிலத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்ற மத நிகழ்வுக்கு முதல்நபராய் வாழ்த்து சொல்லும் முதல்-அமைச்சர் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காப்பதுதான் மதசார்பா ?. ஆனால் பிரதமர் இஸ்லாமிய பண்டிகை,கிறிஸ்துவ பண்டிகைக்கு என அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்தை சொல்லுகிறார். ஆனால் அவரைப்பார்த்து ஒரு மதத்திற்காக ஆட்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    இந்தியாவிலேயே ராமர் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்த 3 மாநிலங்களில் தமிழகம் உள்ளது . இது ஆன்மீக பூமியாகவே இருக்கிறது.மக்களுக்கான ஆட்சியாக இந்து வாழ்வியல் முறையிலான ஆட்சி தேவைப்படுகிறது . யோகா , ஆயுர்வேதம் , சித்தா என கொண்டு வந்த பிறகு நம் இந்து வாழ்வியல் முறையை முறியடிக்க ஆன்டி இந்து அலையன்ஸ் என்பது அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு பத்திரிகைகளில் இந்திய அரசுக்கு எதிராக எழுதி வருகின்றனர் .இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பிறகு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.இதையொட்டி திருப்பூர் மாநகரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. 

    • பட்டைய கணக்காளர்கள் குழுமம் நாடு முழுவதும் 165 கிளைகளை கொண்டுள்ளது.
    • தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களால் செய்ய இயலும்.

    திருப்பூர் :

    சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு, எனும் மண்டல மாநாடு திருப்பூரில் நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டார். அந்த வகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதார சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் வகையில், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்ட் இந்தியா (இந்திய பட்டைய கணக்காளர்கள்) என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து, இந்திய பட்டைய கணக்காளர்கள் குழும நிர்வாகி ராஜேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய பட்டைய கணக்காளர்கள் குழுமம் நாடு முழுவதும் 165 கிளைகளை கொண்டுள்ளது. நாங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமைகளை குறைக்க பாடுபடுகிறோம். மேலும் அரசுக்கு தேவையான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். தற்பொழுது இந்த நிகழ்வில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களால் செய்ய இயலும். மேலும் எம்.எஸ்.எம்.இ.குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பஸ் யாத்திரை ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரை கடந்த ஆகஸ்ட் 18ந் தேதி மும்பையில் தொடங்கியது. வரும் நவம்பர் 3-ந் தேதி தமிழகத்திற்கு இந்தப் பேருந்து வருகிறது .இதனை குறு சிறு நடுத்தர தொழில் துறை நிறுவன அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். என்றும் அரசோடு நாங்கள் இருப்போம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் முதல் கட்ட பணியாக அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் பயிற்சி வழங்கும் பொருட்டு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    • பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளது.
    • விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் பறிபோகும்.

    அவிநாசி :

    தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் அவிநாசி சி .ஐ. டி. யு. அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எம் . சந்திரன், மாநில பொருளாளர் எம். அசோகன் உட்பட மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அரசின் தவறான கொள்கை காரணமாக விசைத்தறி தொழில் பெறும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது காரணமாக பெரும் போராட்டங்களுக்கு பின்பு ஓரளவு குறைந்த நிலையில், தற்பொழுது பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.. 15,000 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நூல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தொழில் நெருக்கடியும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் உருவாகியுள்ளது.

    இதில் ஒன்றிய அரசும் மாநில அரசும் உடனடியாக தலையிட்டு பஞ்சு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மசோதாவால் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் பறிபோகும். கைத்தறி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மின்சாரம் தனியாருக்கு வழங்கப்படும்.

    அதேபோல மின்சாரத்துறையில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஆகவே ஒன்றிய அரசு இந்த சட்டத்தின் முன் வடிவை திரும்ப பெற வேண்டும். அதே போல தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளி மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 5 முதல் 10ந் தேதி வரை தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
    • தரமான இலவச மருத்துவம், தரமான இலவச கல்வி தர வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரையில் இருந்து மணல் அள்ளுவதற்காக 1144 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அர சின் அருமணல் ஆலைக்கு அளிக்க இருக் கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திங்கள் சந்தை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தலைமை ஒருங்கிைண ப்பாளர் சீமான் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியி னர் திரளாக கலந்து கொண்டனர்.

    தேங்காப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடித் துறைமுக நுழைவு வாயிலை சீர மைத்து மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க வேண் டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    குமரி மாவட்டம், மார்ஷல் நேசமணி, ஜீவா னந்தம், அய்யா வைகுண்டர் போன்ற போராளிகளை கண்ட பூமி. நாங்கள் வணங்குகிற சாமியை விட பூமியை மேலாக கருதுவதால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்து கிறோம்.

    குமரி மண்ணின் மலை வளத்தையும் கடல், மண் வளத்தையும் காப்பாற்ற வேண்டும். தமிழக கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    தேங்காப்பட்டணம் துறைமுகம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு முழுமை யாக கட்டமைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டது. இதனால் உயிர் பாதுகாப்பு க்காக கேட்ட துறைமுகம் உயிரை எடுத்துக் கொண்டது. இதுவரை 27 மீனவர்கள் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துறைமுகம் சீரமைக்கப்பட வேண்டும்.

    இலவசம் கொடுக்கக் கூடாது என்று இப்பொது அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பேசி வருகிறேன். இலவசத்தை தவிர்த்து விட்டு தரமான இலவச மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இலவச பஸ் பாசை நிறுத்திவிட்டு இலவச தரமான கல்வியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், மாணவர் பாசறை ஆலிஸ்பாத்திமா, மகளிர் பாசறை காளியம்பாள், மாநில மகளிர் பாசறை சீத்தா, ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன், கொள்கை பரப்பு செயலாளர் சரவணன், இளைஞர் பாசறை ஹிம்லர் உள்ளிட்டோரும் பேசினர்.

    • தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர் ராஜா மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதி மொழியை வாசித்தார். போதை நமக்கு பகை, போதையே பழகாதே, புன்னகையை இழக்காதே, ஆயுளை அழித்திடும் போதை பழக்கம் வேண்டாமே , பாதையை மாற்றுவோம், போதையை வெறுப்போம் என்று அவர் வாசிக்க மாணவ- மாணவிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது. இதற்காக கலெக்டரை பாராட்டி அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் ஆணைப்படி இன்று பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி தொடர்ந்து கூறப்படும். தஞ்சை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டம் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி‌. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவி அலுவலர்கள் பழனிவேலு (மேல்நிலை), மாதவன் (இடைநிலை) மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த விழாவை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.
    • இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சூரம்பட்டி:

    மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் 18-வது ஆண்டு புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

    விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.அமைச்சர் முத்துசாமி, முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார்.

    இந்த விழாவை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது

    அரசின் உதவியோடு புத்தக கண்காட்சி அனைத்து மாவட்டங்களிலும் நடக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு ரூ. 4 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பழமை சிறப்பும் இலக்கிய இலக்கண வளமையும் தமிழ் மொழிக்கு உண்டு.

    இந்த தமிழ் மொழி தான் தமிழினத்தை காக்கும் காப்பானாக அமைந்திருக்கிறது. எத்தகைய படையெடுப்பு கள் வந்தாலும் அத்தனை படை எடுப்புகளையும் தாங்கி நிற்கும் வல்லமை நமது தாய் மொழிக்கு உண்டு. பட்டங்கள் வாங்கு–வதற்கு மட்டுமல்லாமல் அறிவின் கூர்மைக்காகவும் நம்முடைய சிந்தனையை வளர்த்து கொள்வதற்கா–கவும் நாம் கடந்து வந்த பாதையை அறிந்து கொள்வதற்காகவும் நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காகவும் அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.

    புத்தகம் வழங்குவது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே தமிழ் நாட்டில் மாறி இருக்கிறது. இந்த இயக்கம் விரிவடைய வேண்டும். வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அறியாமை என்னும் இருட்டில் தத்தளிப் பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச்சுடர் தான் புத்தகங்கள்.

    பொய்யும் புரட்டும் கலந்த பழமை வாதம் என்னும் கடலில் சிக்கித் தவிக்காமல் நாம் கரைசேர உதவு கிற பகுத்தறிவு கப்பல்கள் தான் புத்தகங்கள்.

    தமிழ்நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது புத்தகங்களை பரிமாறிக் கொள்ளும் பண்பாடு வளர வேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இதனால் சிந்தனையில் தெளிவு ஏற்படும் புத்தகங்களை வாசிக்க தூண்டுங்கள் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியை இளைஞர்கள் கேட்க வேண்டும்.

    ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால் அதனை முழுமையாக நம்பி விடாதீர்கள் அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள். எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்.

    இட்டுக்கட்டி கட்டுக்கதைகளை அவிழ்த்து தேர்ந்தவர்கள். அந்தக் கலையில் தேர்ந்தவர்கள் ஆண்டாண்டு காலமாக கட்டுக் கதைகளை நம்ப வைக்கும் திறமையை பெற்றவர்கள். தமிழ் சமூகம் பகுத்தறிவு சமூகம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம். தமிழகம் அறிவு புரட்சி மாநிலமாக பகுத்தறிவு புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

    • இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    தஞ்சாவூர் :

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1200 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக சென்னை கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
    • மாநில தலைவர் ராஜேந்திரன் அரசுக்கு கோரிக்கை

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    குமரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் மோகன், இணை செயலாளர் மது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் நாகேஸ்வர காந்த் வரவேற்று பேசினார்.

    மாநில பொதுச் செயலா ளர் சுரேஷ் விளக்கவுரை ஆற்றினார். பொருளாளர் முத்துச்செல்வன், செய லாளர் விஸ்வநாதன், துணை தேர்தல் ஆணையர் விஜய பாஸ்கர், சங்க ஆலோ சனை குழு உறுப்பினர் குமார், ஜீவரத்தினம் சசி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    முன்னதாக மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள 800- க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #TNRain #ChennaiRain
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இது ஒரிசா அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் பரவலான மழை பெய்யும். வடகிழக்கு பருவ மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. 

    என கூறினார்.
    ×