search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலம்"

    • குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்பட்டு வருகிறது.
    • தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் குடிநீர் தேவைகள் முடங்கின.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் பகுதியில் வாண்டையார் இருப்பு கிராமம் அமைந்துள்ளது.

    இங்கு கொள்ளிடம் ஆற்றில் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு நாகை மாவட்டத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 2006-ம் ஆண்டு சுமார் 450 கோடி மதிப்பில் இப்பாலம் கட்டப்பட்டது.

    நாகை மாவட்டம் கடற்கரை பகுதி என்பதால் அங்கு நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக இருப்பதால் இங்கிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இதற்காக அணைக்கரை அம்மையப்பன் பகுதி, வாண்டையார் இருப்பு பகுதிகளில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு 2 ராட்சத மோட்டார்கள் அமைத்து 24 மணி நேரமும் தண்ணீர் இறைத்து வருகின்றனர்.

    3 மணி நேரத்திற்கு ஒரு தடவை மோட்டார் நிறுத்தப்படும்.

    இதற்காக 3 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருப்பன ந்தாள் அருகே உள்ள வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட பாலத்தின் ஒரு தூண் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.

    கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் திறக்க ப்பட்ட உபரிநீர் வரத்தால் பாலம் உள்வாங்கியது.

    இப்பாலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் லேசாக சேதமடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது.இதனால் நாகை மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியா மல் குடிநீர் தேவைகள் முடங்கின.

    இதனால் சுமார் 587-க்கும் மே ற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டுசெல்ல முடியாததால் பொது மக்கள் பெரும்அவதிக்குஆளாகி உள்ளனர்.

    எனவே அதிகா ரிகள் குடிநீர்திட்டப்பணிகளை உடனடியாக ஆய்வு செய்து அதனைசீர மைத்து தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    நிலக்கோட்டை அருகே மழையினால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்ககோரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கருத்தாண்டிபட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளி அருகே இருந்த பாலம் மழையினால் சேதமடைந்தது. இதனை சீரமைக்கவேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் நேற்று அப்பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோசமிட்டனர். இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    பாளையம் கிராமத்தில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், பாளையம் அண்ணா நகரில் உள்ள 3 தெருக்களில் போக்குவரத்துக்காக 3 பாலங்கள் இருந்தன.

    தற்போது கழிவுநீர் செல்வதற்காக பாலங்களை இடித்து விட்டு கால்வாய் கட்டி விட்டனர். ஆனால் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் கழிவுநீர் செல்ல வசதியும், காவிரி கூட்டு குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக குரும்பலூர் பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பாளையம் அண்ணா நகரில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவும், காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் புவனேந்திரன் மற்றும் அதன் நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மோகனூர் அல்லது ஈரோட்டில் இருந்து காவிரி நீரை நாமக்கல், தா.பேட்டை, துறையூர் வழியாக பெரம்பலூர் லாடபுரம் ஏரிக்கு கொண்டு வந்தால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இந்த காவிரி நீரை மருதையாற்றுடன் இணைத்தால் கொட்டரை, ஆதனூர் அணை வரை தண்ணீர் செல்லும். இதனால் பெரம்பலூர் நகர மக்களின் குடிநீர் பிரச்சினையும் முழுமையாக தீர்ந்து விடும் என்று கூறப்பட்டிருந்தது.

    குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஒதியம் கிராமத்தில் உள்ள கத்துக்குளத்திற்கு கிராம மக்கள் செலவில் புதிதாக வெட்டிய வரத்து வாய்க்காலை ஒதியம் மெயின் ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரமுள்ள வரைபட கணக்கில் அளந்து கணக்கில் சேர்க்க வேண்டும். பழைய வரத்து வாய்க்காலை சில பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பினை அகற்றி பழைய வரத்து வாய்க்காலை கிராம மக்கள் சார்பில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பாடாலூர் அ.தி.மு.க.வினர் சார்பில் கொடுத்த மனுவில், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சி பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதற்கான ஆயத்த பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. ஜவுளி பூங்கா அமையவுள்ள நிலத்தை சிப்காட் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பஞ்சாயத்து மூலம் ஜவுளி பூங்கா இடத்திற்கு செல்லும் அணுகுசாலையும் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜவுளி பூங்காவில் தொழில் தொடங்க தொழில் முனைவோர்கள் முன்வந்துள்ளனர். இதன் மூலம் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே மாவட்ட ஜவுளி பூங்காவை விரைந்து அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    நீடாமங்கலம் அருகே கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாததால் ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்து சென்று மக்கள் அடக்கம் செய்யும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலப்பூவனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் வெள்ளாம்பூவனூர், கீழத்தெரு, தெற்குத்தெரு பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்தால் பிணத்தை பாடையில் வைத்து சுமந்து அந்த கிராம பகுதியில் உள்ள கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு எடுத்து சென்று மக்கள் அடக்கம் செய்து வருகிறார்கள். இதனால் பிணத்தை அடக்கம் செய்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த மயானத்துக்கு செல்ல வேறு பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் கோவில் உள்ளதால் பிணத்தை அந்த வழியாக எடுத்து செல்வதில்லை என்றும் கொண்டியாற்றில் இறங்கி பிணத்தை எடுத்து செல்வதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.

    இந்தநிலையில் மேலப்பூவனூரை சேர்ந்த அமிர்தவள்ளி(வயது 65) என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். அவருடைய இறுதிச்சடங்குகள் நேற்று மாலை நடந்தது. அவரது உடலை பாடையில் வைத்து கொண்டியாற்றில் இறங்கி சுமந்து கரையைக்கடந்து சென்று இறுதிச் சடங்குகளை உறவினர்கள் செய்தனர். கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்டினால் இறந்தவர்கள் உடலை பாலம் வழியாக எடுத்து சென்று அடக்கம் செய்ய வசதியாக இருக்கும். மேலும் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும். எனவே கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    உடன்குடி அருகே கடலுக்குள் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் படகில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த‌ அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்காக கடலினுள் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அமைந்தால் மீன்வளம் பாதிக்கப்படும், இயற்கை வளங்கள் அழியும் என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று(திங்கட்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்லை.

    பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுப்படகு மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி பகுதிக்கு திரண்டு வந்தனர். அங்கு கடலுக்குள்ளேயே படகுகளில் நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அனல்மின் நிலைய திட்டத்திற்கு எதிராகவும், கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். மீனவர்களின் படகுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லாமொழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடலோர காவல் படையினரும் கடலுக்குள் அரண் போல நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    மேலும் கல்லாமொழி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் புன்னக்காயல் முதல் வேம்பார் வரை அந்தந்த பகுதியில் திரண்டு நாட்டுப் படகுகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் படகு களில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 190 படகுகளுடன் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூட்டப்பனை, இடிந்தகரை, கூடுதாழை, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த‌ 8000 நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மேலும் மீனவர்கள் கடலில் இறங்கி முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். #tamilnews
    குரோம் பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாம்பரம்:

    சென்னை குரோம் பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (18). அதே பகுதியை சேர்ந்தவர் விஜய்பிரகாஷ் (18).

    இவர்கள் இருவரும் ¼ கிலோ கஞ்சா வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர். குரோம்பேட்டை எம்.ஐ.டி. பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற விஜய்பிரகாஷ் தூக்கி வீசப்பட்டார். அவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் உடல் சிதறி விஜய்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த சம்பவத்தில் மதிவண்ணன் படுகாயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மதிவண்ணனிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். #TamilNaduCM #EdappadiPalanisamy
    சென்னை:

    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும் 95 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் காவிரி கழிமுகப் பகுதியில் பருவநிலை மாறுதல்களை தழுவல் திட்டத்தின் கீழ், திருவாரூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திட்ட செயலாக்க அலுவலக கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

    நாகப்பட்டினத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திட்ட செயலாக்க அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து, இத்திட்டப்பணிக்காக பொறியாளர்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கார் மற்றும் 16 ஜீப்புகளையும் வழங்கினார். மேலும் பொதுப்பணித் துறையில் 95 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், பாடிக்குப்பம் திட்டப்பகுதியில், தமிழ்நாடு அரசின் சி‘ மற்றும் டி‘ பிரிவு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின்கீழ் ரூ.69 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 236 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

    வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.70 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 602 அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்துவைத்தார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், நடேசன் கொட்டாய் சவுளுக்கொட்டாய் சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தையும், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உயர்மட்ட பாலங்கள் மற்றும் ஒரு பாலத்தையும் திறந்துவைத்தார்.

    மொத்தம் ரூ.148 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
    பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால் காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மேட்டுப்பாளையம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை. நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைபெய்தது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்த தொடர்மழை காரணமாக. பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் தொடர்ந்து நாளுக்குநாள் உயர்ந்து வந்தது. அணையின் நீர்த் தேக்கப்பகுதியில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது.

    அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியதால் கோவைமாவட்டம் சிறு முகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்டப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 4 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் விவசாய கூலி தொழிலாளிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசல் மற்றும் படகு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக மாற்றுப்பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் லிங்காபுரம் வந்த சப்-கலெக்டர் கார்மேகம் தண்ணீரில் மூழ்கிய உயர் மட்டப்பாலத்தை பார்வையிட்டார். தண்ணீரில் மூழ்கிய பாலத்தின் மீது பரிசலில் பயணம் செய்தார். அதன்பின்னர் லிங்காபுரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இருந்து காந்தவயலுக்கு செல்ல 6 கிலோ மீட்டர் தொலைவில் தற்காலிமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையை பார்வையிட்டார்.

    அப்போது அங்கிருந்த கிராமமக்கள். தண்ணீரில் மூழ்கும் உயர் மட்டப்பாலத்தை உயர்த்திக் கட்டித்தர வேண்டும். மாற்றுப்பாதைக்கு செல்லும் வழியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான உப்புப்பள்ளம் பகுதியில் மழைநீர் செல்ல குழாய் அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட சப்-கலெக்டர் கார்மேகம் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார். அவருடன் தாசில்தார் புனிதா சென்றிருந்தார். #tamilnews
    ×