என் மலர்
நீங்கள் தேடியது "பெற்றோர் புகார்"
- சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார்.
- வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது.
பரமத்திவேலூர்:
தேனி மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி (வயது 20). பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையத்தில் உள்ள அவருடன் பயின்று வரும் சக கல்லூரி மாணவர் வாசுதேவன் என்பவரது வீட்டில் கடந்த 6 மாதமாக தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
சிரஞ்சீவி நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது சிரஞ்சீவி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ராஜா வாய்க்காலில் மூழ்கி உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த அவருடன் வந்த சக மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். பின்னர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் ராஜவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர்.
வெகுநேரத்துக்கு பின்னர் தண்ணீரில் மூழ்கிய சிரஞ்சீவியை பிணமாகவே மீட்க முடிந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜேடர்பாளையம் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு நீடிக்கிறது.
- டேனியல்பாபு, அந்தோணியம்மாள் கூலி வேலை செய்து வருகி ன்றனர்.
- வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த டேனியல்பாபு, அந்தோணியம்மாள். கூலி வேலை செய்து வருகி ன்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். முதல் 2 பெ ண்களுக்கு திருமணமாகி விட்டது. 3-வது பெ ண்ணான ஆஷா (19). இவர் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியி ல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று பெற்றோருடன் வழக்கம்போல் இரவு தூங்கிக் கொண்டிருந்த ஆஷாவை அதிகாலையில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஷாவை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஆஷாவை தேடி வருகின்றனர்.
- கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ.கே. பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். விவசாயி. இவருக்கும் அழகியநத்தத்தை சேர்ந்த காந்தி பிரியாவிற்கும் திருமணமாகி தஸ்விக் ராஜ் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. காந்தி பிரியா தனது தாய் வீடான அழகியநத்தத்தில் தனது குழந்தையுடன் தங்கி இருந்தார்.
நேற்று கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக்ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் காந்தி பிரியா தனது குழந்தை தஸ்விக்ராஜை வீட்டுக்கு கொண்டு வந்தார். நேற்று இரவு திடீரென்று குழந்தைக்கு வயிறு உப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த காந்திபிரியா தனது உறவினர்களுடன் குழந்தை தஸ்விக்ராஜை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தஷ்விக் ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை தஸ்விக் ராஜுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்3 மாத ஆண் குழந்தை திடீரென்று இறந்தது அந்த கிராமத்து மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் திருப்பதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்ப வில்லை.
சிறுமியை அவர்கள் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து குடியாத்தம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
- புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஷாஹாபூரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பதிலாக மருத்துவர்கள் தவறாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அதிகாரி உறுதியளித்தார். மேலும், விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
அவர் ஜூன் 15ம் தேதி அன்று ஷாஹாபூரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
காயமடைந்த காலுக்குப் பதிலாக மகனின் அந்தரங்கப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
பின்னர், அவர்களது தவறை உணர்ந்த மருத்துவர்கள், காயமடைந்த காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்" என்றனர்.
மேலும் இதுகுறித்து சஹாப்பூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
- மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
- புகாரின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் மாடல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவரின் காது துண்டிக்கப்பட்டது.
அந்த மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நிலையில், மாணவர்கள் மோதலை விடுதி வார்டன் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மறைக்க முயன்றதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவரின் சிகிச்சை தாமதப்படுத்தப்பட்டதாகவும் பெற்றோர் புகார் கூறி உள்ளனர். இது தொடர்பாக அவர்களது புகாரின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
- இவர்கள் மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ராமர், லட்சுமணன். இவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி பகுதியில் தோட்டம் உள்ளது.
இந்த இருவர் மற்றும் தந்தை மீது கால்நடை திருடியதாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் மலை அடிவாரப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வாலிபர்கள் இருவரும் சென்றனர். அங்கு வந்த வனத்துறையினரான பாரதி, பெரியசாமி உள்ளிட்ட 3 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை பிரதான சாலையில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 2 வாலிபர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வாலிபர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் ராமர், லட்சுமணன் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள அங்கேரி பாளையத்தை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி. இவரது மகன் முருகவேல் (வயது 30). பனியன் தொழிலாளி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் முருகவேலுக்கும் திருமண நிச்சயம் நடந்தது. மேலும் வருகிற 3-ந் தேதி திருமணம் செய்வது எனவும் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 14-ந் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முருகவேல் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது பெற்றோர் மாயமான தனது மகனை கண்டுபிடித்து தரும்படி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பனியன் தொழிலாளி முருகவேலை தேடி வருகிறார்கள்.
கோபி:
கோபி அடுத்த புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பேபி. இவரது மகள் தாரண வள்ளி. இவர் கோபியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பி வர வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரின் பெற்றோர் கோபி போலீசில் புகார் செய்தார்.
புகாரில் மாணவியை கணக்கம் பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வகுமார் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கும், நாகை மாவட்டம் வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த அனுசுயா (23) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அனுசுயா எம்.ஏ. படித்துள்ளார். தற்போது அனுசுயா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டதால் அனுசுயா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இருவீட்டினரும் சமாதானம் பேசி செல்வகுமாருடன் அனுசுயாவை அனுப்பி வைத்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும், அவரது மனைவியும் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று விட்டனர். வீட்டில் அனுசுயாவும், செல்வகுமாரும் இருந்தனர்.
அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து செல்வகுமார் தனது தந்தை மூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். உடனே மூர்த்தி, அனுசுயாவின் பெற்றோருக்கு இது குறித்து கூறியுள்ளார்.
அனுசுயா இறந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பழஞ்சநல்லூர் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையே இந்த தகவல் காட்டுமன்னார் கோவில் போலீசுக்கு தெரிந்தது. சேத்தியாத் தோப்பு துணை சூப்பிரண்டு ஜவகர்லால், காட்டு மன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அனுசுயாவின் உடலை கைப்பற்றி காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் செல்வகுமாரை தேடினர். அவரை காணவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அனுசுயாவின் பெற்றோர் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து அனுசுயாவின் பெற்றோர், உறவினர்கள் காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்றனர்.
அவர்கள் அனுசுயாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இந்த பிரச்சினையில் போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்துகின்றனர். எனவே, அனுசுயாவின் சாவுக்கு காரணமான அவரது கணவர் செல்வகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அனுசுயாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அனுசுயாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் தலைமறைவாகி விட்ட அனுசுயாவின் கணவர் செல்வகுமாரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் உத்தரவின் பேரில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்ட செல்வகுமாரை தேடிவருகின்றனர்.
செல்வகுமார் பிடிபட்டால்தான் அனுசுயாவின் சாவில் உள்ள உண்மை நிலை தெரியவரும்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நடுபட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45) விவசாயி. இவரது மனைவி பிரியா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை பிரியா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வெங்கடேசன் பிரியாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வெங்கடேசனின் வீட்டுக்கு வந்து பிரியாவில் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதில் பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அருகே உள்ள பரவை விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் நந்தினி (வயது 20). மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரியில் நந்தினி இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.
இது குறித்து அவரது தாயார் காளீஸ்வரி சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் கக்கன் காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் ஆகாஷ் (14), அதே பகுதியைச் சேர்ந்த மீரான் மைதீன் மகன் முகம்மது ஆரீப் (14), நாகூர்கனி மகன் முகம்மது ஆசிக் (13) ஆகியோர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இவர்கள் 3 பேரும் பள்ளிக்குச் சென்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதே போல திருமங்கலம் ஜவகர் நகரைச் சேர்ந்த மணி மகன் மணி கூடலிங்கம் (13) பசுமலை பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரும் வீடு திரும்பவில்லை.
அவர்கள் 4 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவர் களின் பெற்றோர்கள் திரு மங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து மாயமான 4 மாணவர்களை தீவிரமாக தேடி வந்தார்.
மேலூர் கருத்த புளியம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகன் யோகேஸ்வரன் (15) மதுரையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
விடுதியில் தங்கி படித்து வந்த யோகேஸ்வரன் தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்குச் சென்றார். மீண்டும் பள்ளிக்கு வரவில்லை.
பெற்றோரிடம் விசாரித்த போது கடந்த 7-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்று விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா சதுக்கம் பகுதியில் 4 சிறுவர்கள் சுற்றித்திரிவதை போலீசார் பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் 4 பேரும் திருமங்கலத்தில் மாயமானவர்கள் என்பது தெரியவந்தது.
இது குறித்து திருமங்கலம் போலீ சாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மாணவர்களை அழைத்து வருவதற்காக போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.