search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164241"

    • பயனர்கள் இலவச லேப்டாப் பெற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
    • பிரதமர் நரேந்திர மோடி இலவச லேப்டாப் திட்டம் 2023-24 எனும் தலைப்பு கொண்ட போஸ்டர் வைரல்.

    இந்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏமாற்றுவதை குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள், இந்திய அரசு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல்கள் அடங்கிய வலைதளத்தை உருவாக்கியுள்ளனர்.

    மேலும் பயனர்கள் இலவச லேப்டாப் பெற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இந்த வலைதளம் மற்றும் வைரல் தகவலை நம்ப வேண்டாம் என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்த பதிவுகளில்- பிரதமர் நரேந்திர மோடி இலவச லேப்டாப் திட்டம் 2023-24 எனும் தலைப்பு கொண்ட போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரை பத்திரிகை தகவல் மையம் கண்டறிந்து, அதனை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வில் மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தை அறிவிக்கவே இல்லை என்று தெரியவந்துள்ளது.

    இந்தியா முழுக்க எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று வைரல் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று பத்திரிகை தகவல் மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.

    • கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
    • இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.

    கொழும்பு :

    கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.

    இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.

    அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.

    இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

    இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

    இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • கம்போடியா மன்னர் ஒருவர் இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

    புதுடெல்லி:

    கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடந்த 1963-ம் ஆண்டு, தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக் இந்தியா வந்தார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பின்பேரில், மன்னர் நாரோடம் சிஹாமோனி வருகிறார். அவர் 30-ம் தேதி இந்தியாவில் தனது அலுவல்களை தொடங்குகிறார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருடன் கம்போடிய மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    ஜனாதிபதி மாளிகையில் கம்போடிய மன்னருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். மன்னருடன் அரண்மனை மந்திரி, செனட் துணைத்தலைவர், வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது.

    இந்தியா, கம்போடியா இடையிலான தூதரக உறவு 70 ஆண்டுகளை எட்டி இருப்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
    • இதே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    லண்டன்:

    9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஹாக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய சுற்று ஆட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    இந்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான பெல்ஜியம், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் திபாயு ஸ்டாக்புரோக்ஸ் பந்தை கோல் வலைக்குள் திணித்தார்.

    21-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் திருப்பினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    இதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியினர் அடிக்கடி இந்திய அணியின் கோல் எல்லையை நோக்கி படையெடுத்து கடும் குடைச்சல் கொடுத்தனர். இதன் பலனாக அந்த அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை கோலாக்க அவர்கள் எடுத்த முயற்சியை இந்திய அணியின் பின்கள வீரர்கள் மற்றும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் அபாரமாக தடுத்து முறியடித்தனர்.

    கடைசி 2 நிமிடம் இருக்கையில் பெல்ஜியம் அணியின் எல்லா வீரர்களும் இந்திய அணியின் கோல் எல்லைப்பகுதியை சுற்றி வளைத்து நெருக்கினர். அந்த சமயத்தில் பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை இந்திய வீரர் ஜர்மன்பிரீத் சிங் மட்டையின் பின்பகுதியை வைத்து தடுத்ததாக நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த நடுவர் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் (59-வது நிமிடம்) வாய்ப்பை வழங்கினார். இதனை கச்சிதமாக பயன்படுத்தி அந்த அணியின் நெல்சன் ஒனானா கோலடித்தார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது.

    முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய பெல்ஜியம் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பின்பேரில், மன்னர் நாரோடம் சிஹாமோனி வருகிறார்.
    • கடைசியாக, 2010-ம் ஆண்டு, இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பட்டீல் கம்போடியா சென்றுள்ளார்.

    புதுடெல்லி:

    கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி, 3 நாட்கள் பயணமாக 29-ந் தேதி இந்தியா வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

    கடைசியாக, கடந்த 1963-ம் ஆண்டு, தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக் இந்தியா வந்தார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பின்பேரில், மன்னர் நாரோடம் சிஹாமோனி வருகிறார். அவர் 30-ந் தேதி இந்தியாவில் தனது அலுவல்களை தொடங்குகிறார்.

    அன்று காலை, ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருடன் கம்போடிய மன்னர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திக்கிறார்.

     ஜனாதிபதி மாளிகையில் கம்போடிய மன்னருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்கிறார்.

    மன்னருடன் அரண்மனை மந்திரி, செனட் துணைத்தலைவர், வெளியுறவுத்துறை மந்திரி உள்பட 27 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் வருகிறது. இந்தியா-கம்போடியா இடையிலான தூதரக உறவு, 70 ஆண்டுகளை எட்டி இருப்பதால், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சவுரவ் குமார் தெரிவித்தார்.

    கடைசியாக, 2010-ம் ஆண்டு, இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பட்டீல் கம்போடியா சென்றுள்ளார். அதற்கு முன்பு, 1959-ம் ஆண்டு, ராஜேந்திர பிரசாத் சென்றுள்ளார்.

    • கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
    • கோஹினூர் வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது.

    லண்டன் :

    உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, கோஹினூர் வைரம்.

    இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதன் எடை 105.6 கேரட்.

    இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த வைரத்தைத் திரும்பத்தர முடியாது என்று இங்கிலாந்து கூறிவிட்டது.

    இந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான் மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்தார். ஆனால், இந்த வைரத்தை இந்தியா சொந்தம் கொண்டாடுவது உள்பட பல்வேறு சர்ச்சைகள் உள்ளதால், இது பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிவதை இங்கிலாந்து ராணி கமீலா பார்க்கர் தவிர்த்து விட்டார். அவர் அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் அணிந்தார்.

    இருப்பினும் இந்த வைரம், இங்கிலாந்து அரசின் சொத்தாகத்தான் இருக்கிறது.

    லண்டன் நகரில் உள்ள லண்டன் டவரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற நவம்பர் மாதம் வரை நடைபெறுகிற புதிய ஆபரணக் கண்காட்சியில் இந்த வைரம் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்தியா சொந்தம் கொண்டாடுகிற வைரத்துக்கு, இது வெளிப்படையான அங்கீகாரமாக அமைகிறது.

    கோஹினூர் வைரம் மட்டுமின்றி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆபரணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

    இதுபற்றி லண்டன் டவரின் உறைவிட கவர்னர் ஆண்ட்ரூ ஜாக்சன் கூறும்போது, "மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இந்த புதிய ஜூவல் ஹவுஸ் கண்காட்சியைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆபரணக் கண்காட்சி, வரலாற்றை முன் எப்போதையும் விட விரிவாக ஆராய்கிறது" என தெரிவித்தார்.

    • டி20 தரவரிசையை பொறுத்தவரை இந்தியா முதலிடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் 3-வது இடத்தில் தான் இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்ததை தொடர்ந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்தியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா தனது புள்ளிப்பட்டியலில் 113-ல் இருந்து 118 ஆக உயர்த்தியது. பாகிஸ்தான் (116 ரேட்டிங்) மற்றும் இந்தியா (115 ரேட்டிங்) ஆகியவற்றில் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன.

    பாகிஸ்தான் 3-வது இடத்தில் தான் இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்ததை தொடர்ந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்தை பாகிஸ்தான் ஒயிட் வாஷ் செய்திருந்தால் அந்த அணி முதலிடத்தை பிடித்திருக்கும்.

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி நியூசிலாந்து 5 டி20, 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றது. ஓர் ஆட்டத்தில் முடிவில்லை. இதனால், டி20 தொடர் சமன் ஆனது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடரை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வீழ்த்தியது. நியூசிலாந்து 104 ரேட்டிங்குடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 101 ரேங்கிங்குடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

    டி20 தரவரிசையை பொறுத்தவரை இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    டெஸ்ட் தரவரிசையிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி.
    • சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி.

    பீஜிங் :

    உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது.

    இது குறித்து, பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் பேசிய சீன வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    மக்கள் தொகை பங்களிப்பு அளவைச் சார்ந்தது அல்ல அது தரத்தைச் சார்ந்தது. மக்கள் தொகை முக்கியம், அதே போன்றுதான் திறமையும். சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தாண்டும். தரமான பணியாளர் வர்க்கத்தினர் 90 கோடி பேர் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை சீன ராணுவம் அளித்து வருகிறது.
    • அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள இலங்கை தீவு தேசம் சீனாவுக்கு நட்பு நாடாக விளங்கி வருகிறது. இதனால் சமீப காலமாக சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளையும் சீன ராணுவம் அளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள காடுகளில் சீன அறிவியல் அகாடமியின் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் ரேடார் தளத்தை அமைக்க பரிசீலித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

    மேலும் இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் உதவும் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க சீனாவுக்கு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.

    மேலும் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள இந்தியாவின் நிறுவனங்கள் ரேடாரின் வரம்பிற்குள் இருக்கும் என விஷயத்தை நன்கு அறிந்த நபர்கள் தெரிவிக்கின்றனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லும் இந்தியக் கடற்படை கப்பல்களின் இயக்கத்தை ரேடார் கண்காணிக்க முடியும். கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை ரேடார் கண்காணித்து இந்த வசதிகளில் எரிபொருள் நிரப்பும் என்ற அச்சமும் உள்ளது.

    தொன்ட்ரா விரிகுடா இலங்கையின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது. இலங்கை வரலாற்றில் மேற்கண்ட பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒரு காலத்தில் இலங்கையின் தலைநகராக இருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது.

    அதன் மூலம் கடந்த ஆண்டு சீனா பி.எல்.ஏ. உளவுக் கப்பலின் வருகை, பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டது. அவர்கள் எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன் பின்னர் வந்த யுவான் வாங் 5 சீனா உளவு கப்பல் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அப்போதும் சீனா கடற்படையினர் தானியங்கி அடையாள அமைப்பை இயக்கியதாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்துவதற்கும், எரிபொருள் நிரப்புவதற்கும் மற்ற பொருட்களை எடுத்துக் கொள்வதற்கும் 6 நாட்கள் தங்குவதற்கு இலங்கை அனுமதித்தது.

    அம்பாந்தோட்டை துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு முதல் 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 வருட குத்தகைக்கு எடுத்து சீனர்கள் நடத்தி வருகின்றனர். முன்னதாக துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக சீன நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்கள் இலங்கை அரசால் வழங்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அவ்வப்போது இலங்கை ஆட்சியாளர்கள் அணி சேராமை, நடுநிலைமை, இந்தியா ஜெல் பஸ்ட் போன்ற வெளிவிவகாரக் கொள்கை நிலைப்பாடுகளைப் பற்றி வாய்ச்சவடால் பேசி வருகின்றனர்.

    தற்போது இலங்கையில் சீனா ரேடார் தளத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்ற செய்தி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது என்று இலங்கையை தளமாகக் கொண்ட சுயாதீன அரசியல் ஆய்வாளர் ஏ.ஜதீந்திர கூறினார். மேலும் திரிகோணமலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெய்ஜிங்கின் நடமாட்டம் அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகித்துள்ளது.

    • உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்திருந்தது.
    • மனநிலை சார்ந்த விஷயமான மகிழ்ச்சியை வரையறுப்பது கடினம்.

    புதுடெல்லி :

    ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.

    தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு, சமூக, பொருளாதார தகவல்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது.

    மேலும், சமூக ஆதரவு, வருவாய், ஆரோக்கியம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழலின்மை ஆகிய 6 முக்கிய காரணிகளும் கணக்கில்கொள்ளப்பட்டிருந்தன.

    இவ்வாறு மூன்றாண்டு காலத்தில் திரட்டப்பட்ட தகவல்களில் சராசரி அடிப்படையில் மகிழ்ச்சி மதிப்பெண் அளிக்கப்பட்டிருந்தது.

    அந்த வகையில், உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் 146 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடமே கிடைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நம் நாடு பெற்ற 136-வது இடத்துடன் ஒப்பிடும்போது இது 10 இடங்கள் முன்னேற்றம் என்றபோதும், பிரச்சினைகளில் தவிக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (108-வது இடம்), இலங்கையைவிட (112) பின்தங்கியே உள்ளது.

    இந்நிலையில், உலகின் மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு தவறாக 126-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 48-வது இடம்தான் இந்தியாவுக்கு சரியானதாக இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் குழும தலைமை பொருளாதார ஆலோசகர் சவும்யா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், 'மனநிலை சார்ந்த விஷயமான மகிழ்ச்சியை வரையறுப்பது கடினம். இந்நிலையில், உலகம் முழுவதும் ஒரே கண்ணாடியைக் கொண்டு மகிழ்ச்சியை அளவிடுவதும், எல்லா நாட்டு ஆண்கள், பெண்களும் ஒரு மாதிரியாகவும், ஒரு விஷயத்தில் ஒரே அளவிலும்தான் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கணக்கிடுவதும் சரியாக இருக்காது. உலகின் ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஒவ்வொரு தனித்தன்மையை பரிணாமம் வழங்கியுள்ளது.

    மனிதனின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமான, குடும்பத்தினர், நண்பர்கள் என்ற சமூக உறவுகளில், உலகின் பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா முன்னணியில் இருப்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்' என்றார்.

    • ஒரு புதிய இந்தியா உருவாகி வருகிறது.
    • பில்கேட்ஸ் இந்தியாவை வெகுவாக பாராட்டி இருந்தார்.

    டேராடூன் :

    உத்தரகாண்டில் ரூ.180 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் 4 சுகாதாரத்துறை திட்டங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற அவர் பேசும்போது கூறியதாவது:-

    கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா உள்நாட்டில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது மட்டுமின்றி 150-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் அந்த நாடுகளும் கொரோனாவை எதிர்த்து போரிட உதவியது.

    இந்த சிறப்பான பங்களிப்புக்காக சர்வதேச அளவில் இந்தியா பாராட்டப்பட்டது. உதாரணமாக, தவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் பில்கேட்ஸ் இந்தியாவை வெகுவாக பாராட்டி இருந்தார்.

    சர்வதேச அளவில் தடுப்பூசி டோஸ் ஒன்று 16, 18, 20 டாலர் என விற்பனையாகி வந்தபோது, நாம் 78 நாடுகளுக்கு வெறும் 3 டாலருக்கு ஏற்றுமதி செய்தோம்.

    நம்மை பொறுத்தவரை ஆரோக்கியம் என்றால் சேவைதான், வர்த்தகமோ, வணிகமோ அல்ல. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற நமது மரபுக்கு ஏற்ப இந்தியாவின் செயல்பாடுகள் இருந்தன.

    பிரதமர் மோடியின் தலைமையில், சுகாதாரத்துறையுடன் முதல்முறையாக வளர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் ஒரு முழுமையான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

    நமக்கு மருத்துவமனைகள் தேவை என்றால், அதை திறம்பட வழிநடத்த டாக்டர்களும் வேண்டும். அதற்கு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும், அதில் உள்ள இடங்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும்.

    கடந்த 2014-ம் ஆண்டில் வெறும் 56 ஆயிரமாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்கள் தற்போது 1.3 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இதைப்போல மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் 350-ல் இருந்து 664 ஆக உயர்ந்துள்ளன.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையும் 6-ல் இருந்து 42 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன.

    ஒரு புதிய இந்தியா உருவாகி வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் மாநிலங்களில் உத்தரகாண்டும் ஒன்றாகும்.

    இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

    • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.


    கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்த்த அனிருத்

    இந்நிலையில் இந்த போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ×