search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164241"

    இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளது மிகவும் சிறப்பான செய்தி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது #IndPakTalks #US
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை அடுத்து, ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்திருந்தார். 

    இதன்படி, நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கும்  இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக வெளியான செய்தி சிறப்பு மிக்கது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. 

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “ இந்தியா- பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதாக வெளியான தகவல்கள் எங்கள் கவனத்துக்கு வந்தது. மிகவும் சிறப்பான செய்தி இது என்று நான் கருதுகிறேன்” என்றார். 
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் நடக்க உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில், இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #IndPakTalks #UNGA
    புதுடெல்லி:

    எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், இந்தியாவின் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் முடங்கியே உள்ளது. இதனால், இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  

    சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். 

    மேலும், இம்மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தின் போது, இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச வேண்டும் என கடிதத்தில் இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசுகையில், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ராவீஷ் குமார் தெரிவித்தார். 
    இந்தியா முழுவதும் உள்ள சுமார் 7.71 லட்சம் கிராமங்களில் 13 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகள் இல்லை என ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #India #VillageSchools
    புதுடெல்லி:

    நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன. 

    பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 107452 கிராமங்களில் 3474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை, அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. அடுத்து மேற்கு வங்க மாநிலம் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. தொடர்ந்து  கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை , மத்திய பிரதேசம்  ராஜஸ்தான் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.



    தென்னிந்தியாவில் கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை. தமிழகத்தில் 170891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை. 

    தெலுங்கானாவில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. ஆந்திராவில் 28293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. 
    வடகிழக்கு மாநிலங்களுக்கு எளிதாக சரக்குகளை கொண்டு செல்வதற்காக வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #Bangladesh #India
    டாக்கா:

    நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள 7 மாநிலங்களை இணைக்க ஒரே ஒரு தரை வழி மட்டுமே உள்ளது. இதனால், அங்குள்ள திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம், இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கண்ட இரண்டு துறைமுகங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலைகள், நீர்வழி மூலம் எளிதாக இந்திய பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    இந்த ஒப்பந்தத்தின் வரைவுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இந்த துறைமுகம் மூலம் சரக்குகள் அனுப்பலாம் எனவும் வரைவில் கூறப்பட்டுள்ளது. 
    அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் (NSG) இந்தியா இணைய சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு முழு தகுதியும் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. #NSG #US #India #China
    நியூயார்க்:

    அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் (NSG) தற்போது 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த குழுவில் இடம் பெற இந்தியாவும், பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளன.அணுசக்தி வினியோகக் குழுவில் இடம் பிடிப்பதன் மூலம் இந்தியாவில் அணு மின் உற்பத்தியை மேம்படுத்த முடியும். 

    அது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் கை கொடுக்கும் என்பதால், அந்த குழுவில் இடம் பெற இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக நாடு, நாடாக சென்று இதற்கு ஆதரவு திரட்டி வந்தார்.

    அதன் பயனாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், அர்ஜெண்டினா, தென்கொரியா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ரஷியா உள்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. என்றாலும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அதில் புதிய உறுப்பினரை சேர்க்க முடியாது என்பதால் எதிர்ப்பு நாடுகளின் ஆதரவைப் பெற இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. இந்த குழுவில் உள்ள சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவை சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதை காரணம் காட்டி, இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு காட்டி வருகிறது. 

    இந்த நிலையில், அணுசக்தி விநியோக குழுவில் இடம் பெற இந்தியாவுக்கு முழு தகுதி இருப்பதாகவும், சீனாவின் எதிர்ப்பால் இந்தியாவில் இடம் பெற முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், இந்தக்குழுவில் இந்தியா இடம் பெற ஆக்கப்பூர்வமாக வாதாடுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest
    ஓவல்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

    5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.

    சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 
    ரஷியாவில் நடந்து வரும் பயங்கரவாத தடுப்பு போர் பயிற்சி முகாமில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். #SCO2018 #India #Pakistan
    மாஸ்கோ:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சார்பில் ரஷ்யாவின் செபர்குல் நகரில் தீவிரவாத தடுப்பு போர் பயிற்சி நடந்து வருகிறது. இந்த ராணுவ பயிற்சியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக பங்கேற்றுள்ளது. இந்தியா சார்பில் சுமார் 200 வீரர்களும் மற்ற நாடுகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பயிற்சி முடிந்த பின்னர் இரவு ராணுவ வீரர்கள் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். பாலிவுட் பாடல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர்.
    சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் அந்நாட்டு தேசியக்கொடியை அவமதிக்கும் வண்ணம் போட்டோ பதிவிட்டு தனது வேலையை இழந்துள்ளார். #India #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாலிபரான அவிஜித் தாஸ் பட்நாயக் அங்குள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இந்திய சுதந்திர தினத்தின் முதல் நாளன்று ‘சிங்கப்பூர் இந்தியர்கள்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டார்.

    சிங்கப்பூரின் தேசிய கொடியை இரண்டு கைகள் கிழிப்பது போலவும், அதனுள் இந்திய கொடி தெரிவது போலவும் அந்த போட்டோவில் இருந்துள்ளது. மேலும், ‘இன்னும் எந்தன் இதயத்தில்’ என்ற அர்த்தம் தரும் இந்தி பாடல் வரிகளையும் அவிஜித் பதிவிட்டிருந்தார்.

    இதனை பார்த்த சிங்கப்பூர் வாசிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான புகார் போலீசுக்கும் சென்றது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவிஜித் பணியாற்றும் வங்கியும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

    தனது செயலுக்கு அவிஜித் மன்னிப்பு கோரியிருந்தாலும், அந்நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், அவர் சட்ட ரீதியிலான விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
    சிங்கப்பூரில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் அந்நாட்டு தேசியக்கொடியை அவமதிக்கும் வண்ணம் போட்டோ பதிவிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார். #India #Singapore
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாலிபரான அவிஜித் தாஸ் பட்நாயக் அங்குள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இந்திய சுதந்திர தினத்தின் முதல் நாளன்று ‘சிங்கப்பூர் இந்தியர்கள்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டார்.

    சிங்கப்பூரின் தேசிய கொடியை இரண்டு கைகள் கிழிப்பது போலவும், அதனுள் இந்திய கொடி தெரிவது போலவும் அந்த போட்டோவில் இருந்துள்ளது. மேலும், ‘இன்னும் எந்தன் இதயத்தில்’ என்ற அர்த்தம் தரும் இந்தி பாடல் வரிகளையும் அவிஜித் பதிவிட்டிருந்தார்.



    இதனை பார்த்த சிங்கப்பூர் வாசிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான புகார் போலீசுக்கும் சென்றது. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவிஜித் பணியாற்றும் வங்கியும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியது வரும். மேலும், வேலையும் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், தனது செயலுக்கு அவிஜித் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
    கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேவைப்பட்டால் உதவி செய்ய தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #Pakistan #KeralaFlood
    இஸ்லாமாபாத்:

    கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது. 

    இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
    பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு வாகா - அட்டாரி எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். #EidMubarak #EidAlAdha #Pakistan #India
    சண்டிகர்:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி அளித்து வருகின்றனர்.

    இருப்பினும், இருநாடுகளின் சுதந்திர தின விழாக்களின்போது அட்டாரி, வாகா, ஆட்ராய் எல்லைக்கோட்டுப் பகுதியிலும், எல்லையோர கண்காமிப்பு முகாம்களிலும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மரபாக உள்ளது. இதேபோல், ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.
    கடந்த வாரம் சுதந்திர தினத்தை ஒட்டி இரு நாட்டு ராணுவத்தினரும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்கள் கூறிக்கொண்டனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத்தை ஒட்டி வாகா - அட்டாரி எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
    பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மோடி வாழ்த்து கடிதத்தில் கூறியிருந்ததாக பேசிய பாகிஸ்தான் மந்திரி தெரிவித்த நிலையில், தற்போது மோடி அப்படி கூறவில்லை என மறுத்துள்ளது. #Pakistan #PMModi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பதவியேற்றது. இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார்.

    பாகிஸ்தான் அரசை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதி பேச்சுக்கு அழைத்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முன்னர் கூறியிருந்தார். 

    ஆனால், தற்போது அதிலிருந்து பின்வாங்கியுள்ளது பாகிஸ்தான். தங்கள் அமைச்சர் அப்படி ஏதும் கூறவில்லை என்று, ஊடகங்களில் பரவி வரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

    பிரதமர் மோடி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியதாக சொல்லப்பட்ட கடிதத்தில் “ இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவு முறை நீடிக்க வேண்டும்” என எழுதி இருந்ததாக தகவல்கள் கூறின.

    இந்திய அரசு தரப்பில் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தீவிரவாதமும், அமைதிப் பேச்சும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று இந்திய அரசு தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தொலைபேசி மூலம் பேசிய பிரதமர் மோடி “ அமைதி மற்றும் வளத்தை பெருக்குவதன் மூலம், தீவரவாதத்தை கட்டுப்படுத்தி, முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவோம்” என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

    பிரதமர் மோடி அனுப்பியதாக கூறப்பட்ட அந்த கடிதம் பற்றி பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி “வெளியுறவு செயலாளர், இந்திய பிரதமர் இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால், இன்று பாகிஸ்தான் இதற்கு விளக்கம் அளித்துள்ளது அதில் “ எங்கள் வெளியுறவு அமைச்சர், இந்திய பிரதமர் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாக கூறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஊடகங்களால் தேவை இல்லாமல் கிளப்பி விடப்பட்ட வதந்தி என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மோடி, இம்ரான் கானுக்கு எழுதிய கடிதத்தில், “இரு நாடுகளின் பங்களிப்பு தான், முன்னோக்கி செல்ல வாய்ப்பு” என்ற தொணியில் எழுதியிருந்ததாக, குரேஷி முன்னதாக விளக்கியதாகவும், பாகிஸ்தான் கூறி மறுத்துள்ளது.

    முன்னதாக இந்தியாவுடன் நட்புறவில் ஈடுபட தயாராக இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இந்தியா எங்களுடன் பேச ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் என்றும் இம்ரான் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×