search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாஜி"

    சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு, சிவாஜியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். #VikramPrabhu #Sivaji
    60 வயது மாநிறம் படத்தின் வெற்றிக்கு பிறகு அதிரடி போலீசாக விக்ரம் பிரபு நடிக்கும் படம் துப்பாக்கி முனை. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். பொதுவாகவே வாரிசாக சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு சினிமாவில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

    சிவாஜி குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் விக்ரம் பிரபுவுக்கு அதிகமாகவே இருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறும்போது, ‘எனக்கான பாதையை நானே உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 



    ஏன்னா, எது பண்ணாலும் இப்போலாம் கம்பேர் பண்றாங்க. ‘துப்பாக்கி முனை’ படத்துக்கும் ‘தங்கப்பதக்கம்‘ படத்துக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கான்னு என்கிட்டயே கேட்குறாங்க. சிவாஜியோட நடிப்பை யாராலும் கொண்டு வரமுடியாது. அவர் வேற, நான் வேற’ என்று கூறி இருக்கிறார்.
    சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai
    சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது.

    இதில் கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, மயக்கம் என்ன..., கலைமகள் கைபொருளே..., இரண்டு மனம் வேண்டும்..., ஏன் ஏன் ஏன்... ஆகிய பாடல்களை டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது.



    இந்த படத்தை அன்று டி.ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். இப்படம் வி.சி.குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.



    மேலும், பழம்பெரும் அரசியல்வாதியான ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ராமசாமி படையாச்சி, தமிழகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TNAssembly
    ×