search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைவரிசை"

    திருப்பூரில் கைவரிசை காட்டிய திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் செந்தில்பிரபு என்பவர் மீது அரிப்பு மருந்தை தூவி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்தது. தென்னம்பாளையம் பகுதியில் மூதாட்டியிடம் திருடர்கள் நடமாட்டம் உள்ளது என்று எச்சரிப்பது போல் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை பறிக்கப்பட்டது. 

    பூ மார்க்கெட்டில் காரில் வந்த தம்பதி பூ வாங்க சென்றபோது காரில் இருந்த 8 ½ பவுன் நகை மற்றும் லே-டாப் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசில் புகார்கள் வந்தன. நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க திருப்பூர் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று சந்தேகப்படும்படி 3 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கிரிநாதன் (வயது 41), பிரசாத் (39), அசார் அலி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் தான் திருப்பூரில் நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த 30 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    புதுவையில் சுற்றுலா பயணியிடம் பணப்பையை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் கவுர் கோபால்ஷா. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி அமிதஷா (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வேலூருக்கு வந்திருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க புதுவை வந்தார்.

    புதுவை விடுதி அறையில் தங்கி சுற்றுலா இடங்களை பார்க்க வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் அமிதஷா புதுவை ரோமண்ட் ரோலண்ட் வீதியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென அமிதஷா தோளில் மாட்டி சென்ற கைப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

    அமிதஷா அந்த பையில் 2 செல்போன், ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை வைத்திருந்தார்.

    இதுகுறித்து அமிதஷா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டு இருந்த சி.சி.டி. கேமராக்களை ஆய்வு செய்து பணப்பையை பறித்து சென்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    உறையூரில் கோவிலுக்கு சென்ற தொழிலதிபர் மனைவியிடம் 10 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
    திருச்சி:

    திருச்சி உறையூர் சாலைரோடு பகுதியை சேர்ந்தவர் மனோகர், தொழிலதிபர். இவருடைய மனைவி பிந்து (வயது 44). இவர் நேற்று மாலை உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். உறையூர் நியுகாலனி அருகே நடந்து சென்ற போது, அவ்வழியாக எதிரே வந்த பைக் திடீரென பிந்து மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால் அவர் சாலையை விட்டு இறங்கி செல்ல முயன்றுள்ளார்.

    அதற்குள் பைக்கை ஓட்டி வந்த மர்ம நபர் பிந்துவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அவர் திருடர்கள் என கூச்சலிட்டுள்ளார். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவர் வந்ததும் இருவரும் உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், பைக்கில் வந்து தொழிலதிபர் மனைவியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×