search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #RahulGandhi #Thirunavukkarasar
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.  

    முன்னதாக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். 

    இந்த நிலையில்,  கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 

    ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு அளிக்காத தமிழக காவல்துறைக்கு  கண்டனம் தெரிவிப்பதாகவும்,  ராஜாஜி அரங்கத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #RahulGandhi #Thirunavukkarasar
    மந்திரிகள் மற்றும் அதிகரிகள் கூட பிரதமரை நெருங்க கூடாது என பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், நான் மக்களை நெருங்கி செல்வதை யாரும் தடுக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடிக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அவருக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டன. மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கூட பாதுகாவலர்களின் உரிய அனுமதி இல்லாமல் பிரதமரை நெருங்க கூடாது என கெடுபிடி விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஸ்வராஜ் பத்திரிகைக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில்:-

    நான் சர்வ வல்லமை படைத்த தலைவர் இல்லை. மக்களின் பலமே எனக்கான பாதுகாப்பு. வெளியூர்களுக்கு செல்லும் போது எல்லா தரப்பு மக்களும் சாலையோரம் நின்று என்னை வரவேற்கின்றனர். காரின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர்களை என்னால் பார்க்க முடியாது. அதனால், காரிலிருந்து இறங்கி அவர்களை சந்தித்து என்னால் ஆன வரை உரையாற்றுகிறேன்

    என அவர் தெரிவித்துள்ளார்.

    ×