என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 166233
நீங்கள் தேடியது "அஜய்"
மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம். #Maragathakkaadu
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.
ஒளிப்பதிவு - நட்சத்திர பிரகாஷ், படத்தொகுப்பு - சாபு ஜோசப், சண்டைப் பயிற்சி - மிராக்கிள் மைக்கேல், கலை இயக்குநர் - மார்டின் டைட்டஸ், நடன இயக்குநர் - ஜாய் மதி, இசை - ஜெயப்பிரகாஷ், பாடலாசிரியர்கள் - விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன், ஆடை வடிவமைப்பாளர் - செல்வம், தயாரிப்பு: கே. ரகுநாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மங்களேஸ்வரன்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது,
" இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார் " என்றார். #Maragathakkaadu
மரகதக்காடு படத்தின் டிரைலர்:
கமல் அழகாக இருந்ததால் தான். அவரை சப்பாணி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாகவும், அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு பிடிக்கிறது என்றும் படவிழாவில் பாரதிராஜா பேசினார். #Maragathakkaadu
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்சியில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது,
" இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.
இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன். அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.
மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்" என்றார்.
விழாவின் முடிவில் `மரகதக்காடு' படத்தின் இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார். #Maragathakkaadu #BharathiRaja
நானும் கமல் ரசிகன் என்ற முறையில், அவர் மீது எனக்கு சிறிய வருத்தம் இருப்பதாக படவிழாவில் பேசிய சுரேஷ் காமாட்சி சமூக மாற்றத்திற்கான மரகதக்காடு படத்தை பாராட்டும்படி கோரிக்கை விடுத்தார். #Maragathakkaadu
கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மங்களேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது,
"ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன. தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நன்றி.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால், அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே, இப்போது வரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார் செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா, இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.
நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன், உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து, இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்யுங்க. வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி" என தனது மனக்குமுறலை கொட்டினார். #Maragathakkaadu #KamalHaasan #SureshKamatchi
பதிமூன்று உயிர்களை விலைகொடுத்து தானே ஒரு ஆலையை மூட முடிந்திருக்கிறது. என் பிணத்துமேல ஏறி உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று பசுமை வழிச்சாலைக்கு மரகதக்காடு இயக்குநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.
‘மரகதக்காடு’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது காடுகளின் வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசாங்கம் முழு மூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் மரகதக்காடு படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் பசுமை வழிச்சாலை மற்றும் இயற்கை அழிப்பு குறித்து தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் பகிர்ந்து கொண்டார்.
வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது என்கிற கருத்தை மையமாக வைத்தே மரகதக்காடு படத்தை இயக்கியுள்ளேன். பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுக்கிறோம் என்கிற பெயரில் நடந்து வரும் இயற்கை அழிவைப் பற்றி தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.
ஒரு காட்டை உருவாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம்பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும்.
இதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அது தான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்லுவது தான் சரியாக இருக்கும். பசுமை வழிச் சாலையின் அறுபது சதவீதம் சாலை காடுகளுக்குள் தான் அமைய இருக்கிறது.
காடுகளை ஒட்டி நகரங்களும், சாலைகளும் உருவாகும்போது யானைகளும், வன விலங்குகளும் ஊருக்குள் வருவது அதிகரிக்கத்தான் செய்யும்.
ஒன்றை அழித்து இன்னொன்று வளர்ந்தால் அது வளர்ச்சி அல்ல. இருப்பதை அழித்துவிட்டு அதன் மேல் புதிதாக ஒன்றை உருவாக்கி அதை நாட்டின் வளர்ச்சி என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இயற்கையை பாதுகாக்காமல் வருகின்ற எந்த வளர்ச்சியும் மனிதனைப் பாதுகாக்காது. அழிவுக்குத் தான் அழைத்துச் செல்லும்.
சாலைகளோ தொழிற்சாலைகளோ வேண்டாம் எனக் கூறவில்லை. இயற்கையை அழிக்காமல் மாற்று வழிகளில் அதை அமைக்க வேண்டும். ஒரு அரசாங்கமே காடுகளை அழிக்கும் செயலை முன்னின்று செய்யக்கூடாது. ஆள்பவர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கான நீண்ட காலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு விசுவாசமாக இல்லை. ஒரு திட்டத்தால் யாருக்கு எவ்வளவு வருமானம் என்ற வியாபாரம் நோக்கம் சார்ந்து செயல்படக்கூடாது. அரசாங்கம் இயற்கையை வணிகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதன் காரணமாகத்தான் விளை நிலங்களில் கூட தொழிற்சாலை கட்ட கிளம்பி வருகிறார்கள்.
தண்ணீர் வருகின்ற கிணற்றை மூடிவிட்டு உனக்கு வாட்டர் பாக்கட் தருகிறேன் என்று சொன்னால், அது எவ்வளவு அபத்தமோ அப்படிதான் இயற்கையை அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சியும்.
இதைவிட கொடுமை என்னவென்றால் காகிதமற்ற பரிவர்த்தனை செய்வோம், அதன் மூலம் மரங்களைக் அழிக்காமல் காப்போம் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை அழிப்பது அரசாங்கத்தின் இரு முகங்களை அப்பட்டமாக காட்டுகிறது.
இயற்கையைக் காக்க வேண்டும் என்றால் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அதற்காக சமூக விரோதிகள் என பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை.. பதிமூன்று உயிர்களை விலைகொடுத்து தானே ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிந்திருக்கிறது. என் பிணத்துமேல ஏறி உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
உலகத்திலேயே மலிவானது ஏழையின் உயிர் தான். மனித உயிருக்கு விலைவைக்க நீங்கள் யார்? என்கிற அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இயற்கை அழிப்புக்கு எதிரான குரலை "மரகதக்காடு" படத்தில் பதிவு செய்துளேன்.
படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். காரணம் மரகதக்காடு படத்தில் சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் உண்மை. படம் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. படம் பார்க்கும்போது அது சொல்லும் செய்தியும், அதன் வலியும் உங்களுக்குப் புரிய வரும் என்றார். #Maragathakkaadu #Mangaleshwaran
கொரதலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு - கியாரா அத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் பரத் எனும் நான் படத்தின் விமர்சனம். #BharathEnnumNaan #MaheshBabu
அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் சரத்குமாரின் மகன் மகேஷ் பாபு. மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கும், சரத்குமாரால், தனது மனைவி, மகனுடன் நேரம் செலவிட முடியவில்லை. சிறுவயதில் இருந்தே மகேஷ் பாபு, அப்பா பாசத்திற்காக ஏங்குகிறார். இப்படி இருக்க மகேஷ் பாபுவின் அம்மாவும் இறந்துவிடுகிறார்.
இதையடுத்து தனது மகனுக்காக அரசியல் வேலைகளை சரத்குமார் தள்ளிவைக்க, சரத்குமாரின் நெருங்கிய நண்பனும், அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜ் மகேஷ் பாபுவுக்காக, சரத்குமாரை புதிய திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். சரத்குமாரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். தனது அம்மாவை இழந்து அம்மா பாசத்திற்காக ஏங்கும் மகேஷ் பாபுவின் சித்தி, அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தனது நண்பனுடனேயே நேரத்தை செலவிடுகிறார். மேலும் தனது நண்பனின் வீட்டில் லண்டன் செல்ல முடிவெடுக்க, அவர்களுடன் மகேஷ் பாபுவும் லண்டன் செல்கிறார். படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட மகேஷ் பாபு ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை பெறுகிறார். இந்த நிலையில், தனது தந்தை இறந்த செய்தியறிந்து, பல வருடங்களுக்கு பிறகு மகேஷ் பாபு மீண்டும் சென்னை திரும்புகிறார். அவர் வருவதற்கு முன்பே சரத்குமாருக்கு இறுதிச்சடங்குகள் முடித்து வைக்கப்படுகிறது.
முதலமைச்சராக இருந்த சரத்குமார் இறந்ததால், அவரது கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட, யார் முதல்வராவது என்பதில் குழப்பமும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில், மகேஷ் பாபு மீண்டும் லண்டன் செல்ல தயாராகிறார். அவரை சென்னையிலேயே தங்க சொல்லி பிரகாஷ் ராஜ் வற்புறுத்துகிறார். மேலும் கட்சி உறுப்பிகர்களை சமாளிக்க, மகேஷ் பாபுவை வற்புறுத்தி முதல்வராக்குகிறார் பிரகாஷ் ராஜ்.
முதல்வராக பொறுப்பேற்ற முதலே தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக களையெடுக்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையே நாயகி கியாரா அத்வானியை சந்திக்கும் மகேஷ் பாபுவுக்கு அவள் மீது காதல் வருகிறது.
மகேஷ் பாபு தான் சொல்வதை கேட்டு அனைத்தையும் செய்வார் என்று பிரகாஷ் ராஜ் நினைத்த நிலையில், எது சரியோ அதை மட்டுமே செய்யும் மகேஷ் பாபு மீது பிரகாஷ் ராஜுக்கு கோபம் வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளும் மகேஷ்பாவுக்கு எதிராக சதி செய்கின்றன.
கடைசியில், எதிர்க்கட்சிகளின் சதியை மகேஷ் பாபு சமாளித்தாரா? கோபத்தில் இருந்த பிரகாஷ் ராஜ் என்ன செய்தார்? தமிழக மக்களின் பிரச்சனைகளை மகேஷ் பாபு தீர்த்து வைத்தாரா? முதல்வராக நீடித்தாரா? கியாரா அத்வானியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு இளம் முதல்வராக, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார் மகேஷ் பாபு. முதல்வராக இருக்கும் மகேஷ் பாபு, தனது காதலை வெளிப்படுத்துவதும், நாயகியுடன் பழக நினைக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஏற்கனவே தோனி படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கியாரா அத்வானி, இந்த படத்தின் மூலம் மேலும் கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ஈர்க்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியுடன் கவர்கிறார்.
சரத்குமார் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார்.
பி.ரவிசங்கர், அஜய், அனிஷ் குருவில்லா, பூசாணி கிருஷ்ண முரளி, ராவ் ரமேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.
மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒருவர் முதல்வரானால் என்ன செய்வார், மக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைப்பார், இந்த மாதிரி ஒரு முதல்வர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கும் ஒரு முதல்வராக மகேஷ் பாபுவின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் கொரதலா சிவா. அதேநேரத்தில் தமிழக அரசியலையும் ஆங்காங்கே கலாய்த்து, பாசம், காதல், சண்டை என அனைத்தும் கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். முதல்வன் படத்தின் புதிய வெர்ஷனை பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரவி கே.சந்திரன், எஸ்.திரு ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பரத் எனும் நான்' முதல்வன். #BharathEnnumNaan #MaheshBabu
Bharath Ennum Naan Bharath Ennum Naan Review Mahesh Babu Bharath Ane Nenu Kiara Advani Anish Kuruvilla P Ravi Shankar Posani Krishna Murali Rao Ramesh பரத் எனும் நான் பரத் எனும் நான் விமர்சனம் கொரதலா சிவா மகேஷ் பாபு கியாரா அத்வானி பாரத் அனே நேனு சரத்குமார் பிரகாஷ்ராஜ் பி.ரவிசங்கர் அஜய் அனிஷ் குருவில்லா பூசாணி கிருஷ்ண முரளி ராவ் ரமேஷ்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X