search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166361"

    பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு வாகா - அட்டாரி எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். #EidMubarak #EidAlAdha #Pakistan #India
    சண்டிகர்:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி அளித்து வருகின்றனர்.

    இருப்பினும், இருநாடுகளின் சுதந்திர தின விழாக்களின்போது அட்டாரி, வாகா, ஆட்ராய் எல்லைக்கோட்டுப் பகுதியிலும், எல்லையோர கண்காமிப்பு முகாம்களிலும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மரபாக உள்ளது. இதேபோல், ரம்ஜான் மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.
    கடந்த வாரம் சுதந்திர தினத்தை ஒட்டி இரு நாட்டு ராணுவத்தினரும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்கள் கூறிக்கொண்டனர். இந்நிலையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத்தை ஒட்டி வாகா - அட்டாரி எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
    நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை ஒட்டி சிக்கிமில் உள்ள நாது லா எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். #IndependenceDayIndia
    சிக்கிம்:

    நாட்டின் 72-வது சுதந்திரம் இன்று நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்தார். அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றினர்.

    இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லையான நாது லா பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர். அப்போது, இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடந்தது. 
    மணிப்பூரில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவம் மற்றும் போலீசாரால் போலி என்கவுண்டர் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்கும் சிபிஐ-யிடம் சுப்ரீம் கோர்ட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. #ManipurFakeEncounterCase #CBI
    புதுடெல்லி:

    கடந்த 1979 மற்றும் 2002-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை கிளர்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட சட்ட விரோதக் கொலைகளை போலி என்கவுண்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிகழ்த்தியது என அந்த மாநிலத்தின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்திய பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, இது போன்ற படுகொலைகளில் இந்திய ராணுவம், அசாம் ரைபிள் படைப்பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், வழக்கு எந்த விசாரணையும் இன்றி இருப்பதாக மீண்டும் ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராக உத்தரவிட்டனர். இந்நிலையில், இன்று இந்த மனு நீதிபதிகள் லோகுர், லலித் ஆகியோர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை வழக்கறிஞர் வேனுகோபால், சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வெர்மா ஆஜராகினர்.

    போலி என்கவுண்டர் வழக்கு ஓராண்டாக நடந்து வந்த நிலையில் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்? என நீதிபதிகள் சிபிஐ இயக்குநரிடம் கேள்வி எழுப்பினர். வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    வழக்கில் யாரை கைது செய்ய வேண்டும் என்பதை சிபிஐ மற்றும் சிறப்பு புலனாய்வுக்குழுவின் விருப்பத்துக்கே விட்டு விடுகிறோம் என நீதிபதிகள் கூறினர். மேலும், 5 குற்றப்பத்திரிகைகள் அடுத்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ இயக்குநர் உறுதியளித்தார்.

    இந்த வழக்கில் சிபிஐ-யின் விசாரணை பரமபத விளையாட்டை போல இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து வழக்கை அடுத்த மாதம் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைக்கும் சிபிஐ இயக்குநர் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கார்கில் போரின் மகனை பறிகொடுத்து 19 ஆண்டுகளாகியும் இன்னும் நிவாரணம் வரவில்லை அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். #KargilVijayDiwas
    டேராடூன்:

    கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கார்கில் பகுதியை மீட்டது. இந்த போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களில் உத்தரகாண்டை சேர்ந்த ராஜேஷ் கரங் என்பவரும் ஒருவர். கரங்கின் நினைவாக கிராமத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கார்கில் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் மகனின் சிலைக்கு மாலை அணிவித்த கரங்கின் பெற்றோர், “எங்களது மகனை இழந்து 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் நிவாரணம் எங்களது கைக்கு வந்து சேரவில்லை. இன்னொரு மகனுக்கு வேலை மற்றும் நிலம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதிகள் அப்படியே உள்ளது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    குழந்தை கடத்தல் வதந்திகள் பரவியதால் அசாமில் 3 சாதுக்களை அடிக்க நூற்றுக்கணக்கானோர் கூடிய நிலையில், ராணுவம் வந்து மூன்று பேரையும் மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
     கவுகாத்தி:

    நாடு முழுவதும் சமீபத்தில் குழந்தை கடத்தல் வதந்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில போலியான வீடியோக்களின் உதவியுடன் பரவும் இந்த வதந்தியை பலர் உண்மை என நம்பி சந்தேகத்துக்கு இடமான வகையில் காண்பர்வர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

    கடந்த சில வாரங்களில் இது போன்ற தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பல தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள மஹுர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 3 சாதுக்கள் காவி உடையுடன் வந்துள்ளனர்.

    அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என யாரோ கிளப்பிவிட, அதை உண்மை என நம்பி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சாதுக்களை தாக்க ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்கள் சிலர் கூட்டத்தை சமாளித்து மூன்று சாதுக்களையும் மீட்டு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். 

    இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. 
    ×