search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166412"

    ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பின்லாந்து வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டு அதிபர் சவுலி நீனிஸ்டோவை சந்தித்து உணவருந்தினார். #TrumpPutinmeeting #HelsinkiMeeting
    ஹெல்சின்கி:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்புக்கு பின்னர், உலகம் உற்றுநோக்கும் மற்றொரு நிகழ்வாக டிரம்ப் - புதின் சந்திப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா - ரஷியா இடையே இன்னும் பல விஷயங்களில் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் - புதின் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இன்னும் சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச இருக்கின்றனர். இதற்கான, ஹெல்சின்கி வந்துள்ள டிரம்ப், பின்லாந்து அதிபர் சவுலி நீனிஸ்டோவை இன்று சந்தித்தார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது சவுலியுடன் டிரம்ப் ஒன்றாக காலை உணவு அருந்தினார்.

    ஒன்றுபட்ட சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்த இடமான பின்லாந்தில் தற்போது ரஷியா - அமெரிக்கா சந்திப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    2020-ம் ஆண்டில் நடக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிட அனைவரும் விரும்புகின்றனர் என கூறிய டிரம்ப், ஜனநாயக கட்சியிலிருந்து தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என கூறியுள்ளார். #TrumpInUk
    லண்டன்:

    அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப்.  இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வருகிற 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன். 

    அனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதுபோல் தெரிகிறது. ஜனநாயக கட்சியில் தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என அவர் கூறியுள்ளார்

    பொதுவாக இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பேசும் விவரங்களை பற்றி தலைவர்கள் வெளியிடுவது வழக்கமில்லை. ஆனால், டிரம்பிடம் பேட்டி கண்ட பியெர்ஸ் மோர்கன் பிரெக்சிட் பற்றி ராணியிடம் ஆலோசனை மேற்கொண்டீர்களா? என எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.

    அவர், ஆம் ஆலோசனை மேற்கொண்டேன். அது ஒரு சிக்கலான விசயம் என அவர் கூறினார்.  அவர் கூறியது சரி.  அது எவ்வளவு சிக்கலான விசயம் ஆக போகிறது என்பது பற்றி யாரிடமும் எந்த கருத்தும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியை நியமிக்க பலரை நேர்காணல் செய்திருந்த டிரம்ப், பிரெட் கவனாக்கை பரிந்துரை செய்துள்ளார். #Trump #BrettKavanaugh #SCOTUS
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வந்தார்.

    முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்து அதில் 4-பேரிடம் கடந்த 2-ந் தேதி நேர்காணல் நடத்தினார். இதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் நேர்காணல் நடத்திய டிரம்ப், நீதிபதி பதவிக்கு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்தார். 

    அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாக தேசிய பொது வானொலி செய்தி கூறியிருந்தது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என தகவல்கள் வெளிவந்தன. 

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார். 

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தேர்வாகியிருக்கும் 53 வயதான பிரெட் கவனாக், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ளவர்களுக்கு ஓய்வு வயது கிடையாது. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நீதிபதியாக இருக்கலாம். தாங்களாக முன்வந்து மட்டுமே ஓய்வை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடகொரியா உடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் தங்களால் வர்த்தக தடைக்கு உள்ளான சீனா குறுக்கே நிற்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். #Trump #NorthKorea #China
    வாஷிங்டன்:

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது. வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது. வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    சமீபத்தில், பியாங்யாங் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் வலதுகரமாக விளங்கிவரும் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் அந்நாடின் உயரதிகாரிகளுடன் தொடர்ந்து இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ, அங்கிருந்து இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.



    இருப்பினும், அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை வடகொரியா மதித்து நடந்து கொள்ளும் அதிலுள்ள ஷரத்துகளை நிறைவேற்றும் என இன்னும் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை மதித்து கவுரவிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், குறிப்பாக எங்கள் கைக்குலுக்கலை அவர் மறக்க மாட்டார். அதே வேளையில், இந்த ஒப்பந்தத்தின் மீது அமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ள சீனா ஆதிக்கம் செலுத்தும் என கருதுகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரத்யேக விமானத்தில் இருந்து காமெடி நடிகருக்கு போன் செய்து குடியேறிகள் விவகாரம், சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமிப்பது என பல விஷயங்களை அப்பாவியாக விவாதித்துள்ளார். #Trump #JohnMelendez
    வாஷிங்டன்:

    அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் ஜான் மெலெண்டெஸ். காமெடி நடிகர், ரேடியோ ஜாக்கி என பன்முகத்தண்மை கொண்டவர். அடிக்கடி பிரபலங்களுக்கு போன் செய்து கலாய்ப்பது இவரது வேடிக்கையான பணி. இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு ஜான் போன் செய்துள்ளார். அப்போது, எதிர்முனையில் அதிபர் டிரம்ப் மருமகன் ஜரேட் குஷ்னர் பேசியுள்ளார்.

    அவரிடம், தன்னை ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூ ஜெர்சி மாகாண செனட்டர் பாப் மெலெண்டெஸ் பேசுவதாக தன்னை ஜான் அறிமுகப்படுத்தியுள்ளார். டிரம்பிடம் பேச வேண்டும் என தனது கோரிக்கையும் ஜான் முன் வைத்துள்ளார். இதனை அடுத்து, உங்களது விருப்பத்தை டிரம்பிடம் தெரிவிப்பதாக குஷ்னர் கூறியுள்ளார்.

    சில மணி நேரம் கழித்து, அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக விமானத்தில் இருந்து டிரம்ப், ஜானுக்கு போன் செய்துள்ளார். செனட்டர் பாப் மெலெண்டெஸிடம் பேசுவதாக நினைத்து ஜான் மெலெண்டெஸிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து டிரம்ப் மிக தீவிரமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ பதிவை ஜான் மெலெண்டெஸ் தனது இணையதளத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.

    பாப் மெலெண்டெஸ் சமீபத்தில் பரிசுப்பொருள் பெற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு, தனது வாழ்த்துக்களை டிரம்ப் தெரிவித்தார். குடியேறிகள் விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் புதிய நீதிபதியை நியமிப்பது என பல விவகாரங்கள் தொடர்பாக டிரம்ப் ஜானிடம் விவாதித்துள்ளார். 

    இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, சில நேரங்களில் அதிபரின் தொடர்பு எல்லைக்குள் இது போன்ற பிரச்சனைகள் வந்து விடுகின்றன என கூறியுள்ளது. அதிபரை ஏமாற்றியதற்காக ஜான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் ‘நான் இன்னும் கைது செய்யப்படவில்லை’ என ஜான் மெலெண்டெஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
    கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு டிரம்ப் வரியை அதிகரித்ததை அடுத்து, அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு கனடா வரியை அதிகரித்துள்ளது. #TrumpTaxPolicy #Canada
    ஒட்டாவா:

    கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட வரி விலக்கு சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். 

    இதற்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்து இருந்தார். அமெரிக்காவின் வரி விதிப்பு ஏற்க முடியாத ஒன்று என்றும், தங்களது தொழிலாளர்கள் மீது தங்களுக்கும் அக்கறை இருப்பதாக தெரிவித்த  ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தார். 

    இதன்படி, வரி விதிக்கப்படும் பொருட்களுக்கான பட்டியலை கனடா வெளியிட்டது. இதில், சில பொருட்களுக்கான வரிப்பட்டியல் 10 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.86 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. 
    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் அடுத்த மாதம் ஜூலை 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். #TrumpPutinSubmmit #HelsinkiSummit
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே ரஷியாவும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷிய உளவுத்துறை வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

    எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மூன்றாம் நாட்டில் சந்திப்பு நடத்த இரு தலைவர்களும் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

    இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ள இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-5 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால், பின்லாந்தில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பு விரிவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய டிரம்ப், வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக 45 சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். #TrumpImmigrantPolicy
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த சுமார் 2,300 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார். இருப்பினும், இன்னும் பல குழந்தைகள் பெற்றோருடன் ஒப்படைக்கப்படவில்லை. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கும் நடமுறையை முடிவுக்கு கொண்டு வர அனைத்து மாநிலத்திலும் உள்ள 45 சட்ட அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

    சட்டவிரோத குடியேறிகளை குடும்பத்தோடு கைது செய்து காவலில் வைத்திருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    கைது நடவடிக்கைக்கு பதிலாக, ஒரு குடும்பத்தினர் சட்டவிரோதமாக குடியேறுகிறார் என்றால், குடும்ப தலைவரின் கையில், ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் அடங்கிய கருவியை பொருத்திவிட்டால், அந்த குடும்பத்தை எளிதாக கண்காணிக்க முடியும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக குடியேறிகள் குடும்பத்தோடு கைது செய்யும் நடவடிக்கையை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரும் எதிர்த்து கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்காவில் அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை 30 நாட்களில் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #USmigrantchildren #USzerotolerance
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த சுமார் 2,300 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் தலைவர் ஸைட் ராட் அல் ஹுசைன் டிரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார். இதைதொடர்ந்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அகதியாக வந்த பெண்ணிடமிருந்து 6 வயது குழந்தை பிரிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சார்பாக அமெரிக்கன் மக்கள் உரிமை யூனியன் சான் டியேகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபடி டான சப்ரா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    அதில், அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை 14 நாட்களில், 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை 30 நாட்களில் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  #USmigrantchildren #USzerotolerance
    சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. #TrumpTravelBan
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த பயணத்தடை உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி விமர்சிக்கப்பட்ட நிலையில், வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

    வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல மாகாண கோர்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.

    பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டிரம்ப்பின் பயணத்தடை சரியே என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
    ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அமெரிக்காவில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, ஐரோப்பாவில் இனி உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்துள்ளது டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. #Trump #HarleyDavison
    வாஷிங்டன்:

    அமெரிக்க தயாரிப்பு பொருட்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இறக்குமதி பொருட்கள் பலவற்றுக்கு வரியை அமெரிக்கா சமீபத்தில் அதிகரித்தது. அலுமினியம் மற்றும் ஸ்டீஸ் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்திய டிரம்ப்பின் நடவடிக்கை கனடா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை கொடுத்தது.

    இதனால், போட்டிக்கு போட்டியாக அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீதான வரியை  சீனா உயர்த்தியது. இதனால், வணிக யுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க தயாரிப்பு இரு சக்கர வாகனங்களுக்கு 6 சதவிகிதமாக இருந்த வரி விதிப்பு 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனால், முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. 

    இதனை சரிகட்டும் வகையில்,  ‘ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள வரி விதிப்புக்காக அமெரிக்காவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளில் வேலைகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளில் இருக்கும் ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கப் போகிறோம். அது தான் ஐரோப்பாவில் இருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே வழியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிலவி வரும் பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்’ என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அறிவித்தது.



    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிரம்ப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது காரசாரமான விமர்சனத்தை டிரம்ப் வைத்திருந்தார். 

    இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஹார்லி டேவிட்சன் முதல் நிறுவனமாக வெள்ளைக் கொடி காட்டியுள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களுக்காக நான் அதிகமாக போராடினேன். அவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்காது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.
    பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையுடன் டிரம்ப் இருக்கும் புகைப்படத்தை டைம் பத்திக்கை தனது அட்டைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trump #MelaniaTrump #Timemagazine
    நியூயார்க்:

    அமெரிக்க எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

    இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்படும் டிரம்பின் சட்டத்தினை எதிர்க்கும் வகையில் டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் டிரம்ப் , ஒரு குழந்தையுடன் இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. வெல்கம் டூ அமெரிக்கா என்ற வாக்கியத்துடன் உள்ள டிரம்ப் புகைப்படம் அந்த புகைப்படத்தில்  உள்ள குழந்தை தனது தாயை தேடி அழுகிறது. அது டிரம்ப் அரசின் குடியேற்ற விதிகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



    டிரம்பின் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளை காண செல்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ ரியலி டோண்ட் கேர். டூ யு? என்ற இந்த வாக்கியம் அடங்கிய சர்ட் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. #Trump #MelaniaTrump #Timemagazine

    ×