search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
    • தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் திருமஞ்சன வீதி கீழ சந்தில் வசித்து வருபவர் கணேசன் (வயது 59).

    இவரது மனைவி சாவித்ரி.

    கணேசன் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இன்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.

    இந்நிலையில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.

    பின்னர் சிறிது நேரத்தில் வீடு தீபிடித்து எரிந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது.

    இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    • இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக்கூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் ராஜபாளையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் செயல்பட்டு வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த ஆட்சியாளர்களால் ராஜபா ளையம் தொகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- கிருஷ்ணன்கோவில் அருகில் கொண்டு செல்லப்பட்டது,

    இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற மிகவும் அவதிப்படுவதாக என்னிடம் பொது மக்களும், வாகன ஓட்டுநர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், உடனடியாக நான் ராஜபாளையம் தொகுதிக்கு புதிதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்க வேண்டி முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்து தொடர்ந்து வலியுறுத்தியதின் பலனாக போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்கு வரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியா கியுள்ளது.

    இந்த அறிவிப்பு வெளி யாக நடவடிக்கை எடுத்த முதல்- அமைச்ச ருக்கும், போக்கு வரத்துத்துறை அமைச்ச ருக்கும், வருவாய்த்துறை அமைச்ச ருக்கும், தொழில் துறை அமைச்சருக்கும், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டிக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ராஜபா ளையம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்ப டுத்தி வருகிறார்.

    அதில் சிறப்பு வாய்ந்த திட்டமான சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்த ராஜபா ளையம் வட்டத்தை மீண்டும் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் திட்டம், செயல்படுத்தப்பட்டு தற்போது டெண்டர் விட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் சக்தி கண் மருத்துவமனை வரை இணைப்பு சாலை அமைக்கும் திட்டம்,செயல்படுத்தப்பட்டு இந்த திட்டத்திற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையம் தொகுதிக்கு புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கும் திட்டம் என மேற்கண்ட 4 சிறப்பு வாய்ந்த திட்டங்களை ராஜபாளையம் தொகுதிக்கு வழங்கிய முதல்-அமைச்சருக்கு ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும், பொதுமக்களும் உறுது ணையாக இருப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர்

    கடலூர்:

    :கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் உயர்கல்வி பயி லும் அரசு பள்ளி மாணவி களின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை அதிகரிக்கவும், பொருளா தாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மாணவி களுக்கு உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் வாயி லாக மாணவிகளுக்கு உயர் கல்வி வழங்குவதால், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகி தத்தை குறைத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவி களுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், மேலும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாது காப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல சமுதாயத்தை உரு வாக்க வழிவகை செய்யப்படு கிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    • கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கண்டன உரையாற்றினார்.


    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காரைக்கால் திருநள்ளாறு தேரடி அருகே, காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில், திருநள்ளாறு கொம்யூன் முன்னாள் தலைவர் சிங்காரவேலு, மகிளா காங்கிரஸ் மாநில பொது செயலாளர் நிர்மலா, இளைஞர் அணி தலைவர் ரஞ்சித், திருநள்ளாறு தொகுதி தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தின் முடிவில், முன்னாள் அமைச்சர் கமல க்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-  4 தலைமுறைகளாக இந்தியாவிற்காக தியாகம் செய்த அரசியல் வாரிசான இளம் தலைவர் ராகுல்காந்திய அப்புறப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த பலர், பல வகைகளில் இறங்கி பார்த்தார்கள். முடியாமல், இப்போது, திட்டமிட்டு சிறை தண்டனை வழங்கியும், எம்.பி பதவி நீக்கம் செய்தும் புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நாளிலிருந்து, ராகுல் காந்தியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற வன்ம எண்ணத்துடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார். ஜனநாயகத்தின் குரல்வ லையை நெறிக்கும் பிரதமர் நரேந்திரமோடியின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது, இத்தகைய ஜனநாயக விரோத செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். என்றார்.

    • மணல் கடத்திய 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் டிராக்டர்களில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சார்பு ஆய்வா ளர்கள் அசோக்சக்ரவர்த்தி, கார்த்திக், முனியாண்டி ஆகியோர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிராக்டர்களை பிடித்தனர். அதிலிருந்த 11 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உச்சிப்புளி காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சுகுமார்,கார்த்திக், பாக்கியராஜ், ராஜா கார்த்திக், பழனிசுவரன், ஜெகதீஸ்வரன், முனியசாமி, பிரகாஷ், உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகரில் நில விவரங்களை விவசாயிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விவசாயிகள் பயன்பெ றும் வகையில் தமிழக அரசு மூலம் 1.4.2023 முதல் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான வேளாண் அடுக்ககம் (AGRI STACK) மூலம் நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமை வாரி யாக புவியியல் குறியீடு செய்தல், நில உடைமை வாரியாக சாகுபடி பயிர் விவரம்-இனங்களை குறித்து அறிந்து கொள்ள இயலும்.

    இதில் முக்கியமாக நில விவரங்களுடன் இணைக் கப்பட்ட விவசாயிகள் விவரம் அறிய உருவாக்க பட்டுள்ள GRAINS வலைதளத்தில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை, வேளாண் மைத்துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சித்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட்டு ள்ளதால் அரசு திட்டங்க ளின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்ற டைவதை உறுதிப்படுத்த முடியும்.

    மேலும் இது ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    விவசாயிகள் தாங்களே நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் அரசு திட்டங்கள் மூலம் பயன்பெ றலாம். விவசாயிகள் தாங்கள் இதுவரை அரசு திட்டங்களின் மூலம் பெற்ற பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

    திட்டங்க ளின் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் GRAINS வலைதளத்தில் தங்களது ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் மற்றும் நில பட்டா விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    AGRISTACK/GRAINS Project-தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் விவசாயிகள் தரவு தளத்திற்கான சேகரிப்பு தொடர்பாக விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர்கள், மின்னணு மாவட்ட மேலாளர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோருக்கு வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளம் பற்றி மாவட்ட அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு, மாவட்ட அளவிலான பயிற்சி பெற்ற அலுவலர்கள், அனைத்து கிராம நிர்வாக அலுவ லர்கள், வருவாய் ஆய்வா ளர்கள், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை சார்ந்த களப்பணி யாளர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு பதிவேற்றப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விவரங்களை தங்களது கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் மூலம் வேளாண் அடுக்கு மற்றும் GRAINS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் 13-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அறிவிக்கையின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதிவரை நடைபெற உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்ட த்தில் 44 தேர்வுமையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வுமையங்களும், 1 தனித்தேர்வர்களுக்கான தேர்வுமையத்திலும் தேர்வு நடைபெற உள்ளது.

    இந்த தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் 12-ம் வகுப்பில் 23 ஆயிரத்து 368 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 22 ஆயிரத்து 36 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் மாற்றுத்தி றனாளி மாணவர்களாக 12-ம் வகுப்பில் 105 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 102 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் 104 முதன்மை கண்காணிப்பா ளர்களும், 104 துறை அலுவலர்களும், 1236 அறைக்கண்கா ணிப்பா ளர்ளும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுப வர்களாக 110 ஆசிரியர்களும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு 15,808 போ் எழுதுகின்றனர்
    • முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து கூறியதாவது:-

    பிளஸ்-2 அரசு பொதுத்தோ்வு மாா்ச் 13-ந் தேதி தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 37 அரசு உதவி பெறும் பள்ளிகள், 52 மெட்ரிக் பள்ளிகள், மாதிரி பள்ளி ஒன்று என 160 பள்ளிகளிலிருந்து 7,805 மாணவா்கள், 8,003 மாணவிகள் என மொத்தம் 15,808 போ் தோ்வு எழுதவுள்ளனா். இதற்காக 63 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பிளஸ் 1 பொதுத்தேர்வை 14,181 போ் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 161 பள்ளிகளிலிருந்து, 6,687 மாணவா்கள், 7,494 மாணவிகள் என மொத்தம் 14,181 போ் தோ்வு எழுதவுள்ளனா். 63 தோ்வு மையங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன.

    பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதும் தனித் தோ்வா்க ளுக்கு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் செய்யது அம்மாள் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திலும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையத்திலும் தோ்வு நடைபெற உள்ளது.

    தனித் தோ்வா்களாக பரமக்குடி மையத்தில் பிளஸ்-2 வகுப்பில் 130 பேரும், பிளஸ்-1 வகுப்பில் 94 பேரும், ராமநாதபுரம் மையத்தில் பிளஸ் 2- வகுப்பில் 139 பேரும், பிளஸ் 1- வகுப்பில் 146 பேரும் தோ்வு எழுத உள்ளனா்.

    பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வுகளுக்காக 70 போ் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டு உள்ளது. தலைமை கண்காணிப்பா ளா்களாக 65 பேரும், அறை கண்காணிப்பாளா்களாக 1500 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனா்.

    மேலும், தோ்வை கண்காணிக்கவும், வினாத்தாள் கொண்டு செல்பவா், வினாத்தாள் காப்பாளா், விடைத்தாள் பொறுப்பாளா் என 100-க்கும் மேற்பட்ட ஆசிரி யா்கள், அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டை அருகே கருவேப்பிலான் கேட் பகுதியில் ேமம்பாலம் அமைய உள்ளது
    • புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்பியுமான சு. திருநாவுக்கரசா். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலை சிபிஐ அதிகாரி போலவும், அமலாக்கத் துறை அதிகாரி போலவும் பேசுகிறாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த ஆட்சியை அச்சுறுத்தும் வகையில் அண்ணாமலை பேசுகிறாா். கைது செய்ய வேண்டிய சட்டப்பிரிவுகளில்தான் கைது செய்வாா்கள். கைது செய்து பாா் என அவா் சவால் விடுக்கிறாா்.ராகுல்காந்தியின் நடைப்பயணம் சட்டப்பேரவைத் தோ்தல்களில் எதிரொலிக்கவில்லையே எனக் கேட்கிறாா்கள். அந்தப் பயணம் நாடாளுமன்றத் தோ்தலுக்காக நடத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தோ்தலில் வேறு பல அரசியல் அம்சங்கள் இருக்கும். வெயில், மழை கடந்து நடந்திருக்கிறாா். எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு விமா்சிக்கக் கூடாது.மதுரை மற்றும் திருச்சி ெரயில்வே கோட்டங்களில் ெரயில் சேவை குறித்த கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. புதுக்கோட்டையை பொறுத்தவரை புதுக்கோட்டை- தஞ்சை புதிய தடம் அமைக்க நில அளவை குறித்தும், கீரனூரில் ெரயில்கள் நிறுத்தம் குறித்தும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதிய ெரயில் தடம் அமைப்பது குறித்தும், புதுக்கோட்டை நகரில் கருவேப்பிலான் கேட் மற்றும் திருவப்பூா் கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது.இவற்றில் கருவேப்பிலான் கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க ெரயில்வே துறை அனுமதித்துள்ளது. திருவப்பூா் மேம்பாலம் அமைப்பதில், எத்தனை வண்டிகள் கடந்து செல்கின்றன என்பன குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதையும் மேற்கொள்ளக் கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் தகவல்
    • தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கும் வழங்கப்படுவதாக உறுதி

    கரூர்,

    கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் நெசவு மற்றும் பின்னலாடை தொழிற்சாலை உரிமையாளர் சங்கம், கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் சார்பில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களின் சார்பு நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் வெளி மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.இவர்கள் அனைவரும் ஜவுளி நிறுவனங்களினுடைய தங்கு விடுதியிலோ அல்லது தனிப்பட்ட முறையில் தங்கி தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஜவுளி நிறுவனங்களின் சார்பாகவும், அவர்களின் சார்பு நிறுவனங்களின் சார்பாகவும், சரியான முறையில் செய்து தரப்படுகிறது.வெளி மாநிலத்தில் இருந்து வருகை புரிந்திருக்க கூடிய தொழிலாளர்கள் தகுந்த உடல் நலத்துடனும், மன நலத்துடனும், குடும்ப நலத்துடனும் இருப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அனைத்து நிறுவனங்களும் செய்து வருகின்றன.வெளி மாநில தொழிலாளர்களும், தமிழ் நாட்டிலுள்ள தொழிலாளர்களும், சகோதர சகோதரிகளாக ஒரே குடும்பத்தில் இருப்பது போன்று, பழகி சிறந்த முறையில் தொழில் வளர்வதற்கு அவர்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.மேலும் வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற செய்தியை வெளியிடுவோரின் கருத்துக்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம் .வெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் மிகச் சிறந்த முறையில் தமிழ் நாட்டை சார்ந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அதே முன்னுரிமையும் உரிமையையும் கொடுத்து சிறந்த முறையில் பாதுகாத்து வருகின்றோம். அவர்கள் பாதுகாப்புக்கு எந்த வித பங்கமும் இல்லை என்று உறுதியளிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலுள்ள மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்கு வதற்கும் அழகு சாதன வியல் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்கான பயிற்சியினை தாட்கோ சார்பில் அளிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் ஆதி திராவிடர், பழங்குடியி னத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும்.

    சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்கள் சிதைவுற்று பிணமாக கிடந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி உடல்கள் சிதைவுற்று பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இசையரசன், சுரேஷ், ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அதில் தஞ்சையில் இருந்து நாகைக்கு சென்ற ரெயில் என்ஜின் மோதி அந்தப் பெண் பலியானது தெரிய வந்தது. இருப்பினும் அவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை.இதையடுத்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் என்ஜின் மோதி அந்த பெண் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×