search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166567"

    • வீடுகள் ஒதுக்கீடு பெற புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமத்துவபுரங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை அரசாணைப்படி தகுதியற்ற பயனாளிகளுக்குப் பதிலாக புதிய பயனாளிகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏதுவாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனங்களின் அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அதன் விவரம் பின்வருமாறு:- சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிச்செவல் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் 3 வீடுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் 5 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 1 வீடு என மொத்தம் 9 வீடுகள்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்கோட்டை ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் பிற்படுத்த–ப்பட்ட வகுப்பு பிரிவில் 1 வீடு மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் ஆதிதி–ராவிடர் பிரிவில் 5 வீடுகள், இதர பிரிவில் 19 வீடுகள், என மொத்தம் 24 வீடுகள்.

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர் மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் 34 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

    மேற்கண்ட சமத்துவபுர வீடுகள் தொடர்பான விவரங்களை சம்பந்த–ப்பட்ட ஊராட்சி ஒன்றி–யத்தினை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம்-செகந்திராபாத் ரெயில் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    ராமேசுவரம்-செகந்திராபாத் ரெயில் சேவை ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அந்த ரெயிலின் புறப்படும் நேரம், இயக்கப்படும் நாட்கள், செல்லும் வழி ஆகியவையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    ராமேசுவரத்தில் இருந்து ஆகஸ்ட் 26-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் காலை 8.50 மணிக்கு புறப்படும் ரெயில், சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் செல்லும். மறுமார்க்கத்தில் செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை புதன் கிழமைகளில் இரவு 7.05 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு ராமேசுவரம் செல்லும்.

    இந்த ரெயில்கள் ராமநாதபுரம், மானாம துரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், சட்டெனப்பள்ளி, மிரியால்குடா, நலகொண்டாவில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • உலக செஸ் ஒலிம்பியாட் ஜோதி 26-ந்தேதி வருகை தருவதாக கலெக்டர் கூறினார்.
    • மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 26-ந்தேதி மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முன்னோடியாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து பொது இடங்களில் எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் செஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்து மக்களும் இந்த செஸ் ஒலிம்பியாட்டை கொண்டாட வேண்டும். செஸ் விளையாட்டு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்
    • எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது.

    திருப்பூர்:

    சென்னை அண்ணா நிர்வாக பணி பயிற்சி கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பயிற்சி முகாம் 2 நாட்கள் திருப்பூரில் நடந்தது. அரசுத்துறை அலுவலர்கள், பொது தகவல் அலுவலராக செயல்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி கல்லூரி கூடுதல் இயக்குனர் ராஜேந்திரன் அளித்த பயிற்சியில் அறிவுறுத்தியதாவது:-

    பொது தகவல் அலுவலர்கள், கைவசம் உள்ள தகவல்களை அப்படியே வழங்கலாம். வழங்க முடியாதபட்சத்தில், அந்த காரணத்தையும் கூற வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தகவல்களை அளிக்கலாம்.கேள்விகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் தகவல் அளிக்க தேவையில்லை. பொதுமக்கள் மட்டுமல்ல, அரசு அலுவலர்களும் இச்சட்டத்தில் தகவல் கேட்கலாம். விண்ணப்பத்தில் 10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தகவல் அளித்து மீண்டும் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தலாம்.

    எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது. ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே விண்ணப்பத்தில் கேட்டால், தகவல் அளிக்க கூடாது. தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்ப காரணம் கூற வேண்டியதில்லை. கேட்கவும் கூடாது. இருக்கும் தகவலை அப்படியே வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

    • ஆமணக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படுகிறது.
    • விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்திருந்து பெற்றுக்கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் உணவு எண்ணை பயிர்களுக்கான தேசிய இயக்கத்தில் ஆமணக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.3000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான வீரிய ஆமணக்கு விதைகள் வேளாண்மை அறிவியல் நிலையம் நாமக்கல்லில் இருப்பு உள்ளது.

    விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்திருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டம் பற்றிய விரிவான விவரங்களுக்கு பரமத்திவேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • பாக்டீரியா நோய்க்கிருமிகள் பாசன நீர் மூலமாகவும், காற்று மூலமாகவும், விதைகள் மூலமாகவும் பயிரில் வேகமாக பரவும் தன்மை கொண்டது.
    • நோய் அதிகம் இருந்தால் ஸ்டெரெப்டோ மைசின் சல்பேட் 300 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைட் 1250 கிராம் ஒரு எக்டேருக்கு என்ற முறையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி வட்டாரத்தில் தற்போது முன்கார் பருவ நெல் சாகுபடி சுமார் 1,900 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.

    தற்போது நெற்பயிர்கள் தூர்கட்டும் பருவத்தில் உள்ள நிலையில் நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது. இவற்றின் அறிகுறி மற்றும் கட்டுப்படுத்தல் முறைகள் குறித்து ஆழ்வார் திருநகரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அல்லி ராணி தெரிவித்துள்ளதாவது:-

    பாக்டீரியா, இலைகருகல் நடவுசெய்த 3-4 வாரத்தில் பயிரில் தோன்றுகிறது. இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருகியது போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகிறது.

    இந்த பாக்டீரியா நோய்க்கிருமிகள் பாசன நீர் மூலமாகவும், காற்று மூலமாகவும், விதைகள் மூலமாகவும் பயிரில் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனை கட்டுப்படுத்திட விதைகளை விதைக்கும் முன்னர் சூடோமோனாஸ் 10 கிராம் ஒரு கிலோ நெல் விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.

    நாற்றுகளின் வேர்களை சூடோமோனாஸ் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.

    பரிந்துரை செய்யப்பட்ட யூரியா உரத்தினை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4: 1 எந்த விகிதத்தில் ஒரு நாள் கலந்து வைத்திருந்து வயலில் மேலுரமாக இடலாம்.

    வேப்பங்கொட்டை சாறு 5 சதம் அல்லது 3 சதம் வேப்பம் எண்ணைய் கரைசல் நோய் தோன்றும் போதும்.

    பின்னர் 10 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்கலாம். நோய் அதிகம் இருந்தால் ஸ்டெரெப்டோ மைசின் சல்பேட் 300 கிராம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைட் 1250 கிராம் ஒரு எக்டேருக்கு என்ற முறையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    மேலும் விவரங்களுக்கு தென்திருப்பேரை உதவி வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

    • விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில ஆணைய தலைவர் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் 4 உறுப்பி னர்களுடன் விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வருகிற 8-ந் தேதி நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் ஆணைய தலைவர், துணைத் தலைவர், உறுப்பி னர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கு பெற உள்ளனர். மேலும் விழிப்புணர்வு ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட சிறப்பு குற்றத்துறை அரசு வக்கீல்கள், ஆதி திராவி டர் மற்றும் பழங்குடி யினருக்காக பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் (மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை) ஆகியோர் பங்கு பெற உள்ளனர்.

    மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் பழங்குடியி னர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது.

    • நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்து ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் உற்பத்தியில் நிலம், நீர் மற்றும் இடுபொருட்களே அடிப்படை காரணிகளாக உள்ளன. இவற்றுள் பயிர் சாகுபடிக்கு கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.

    சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் 1200 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளை ஊக்குவித்திட துணைநிலை நீர் மேலாண்மை செயல்பா டுகள் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குறு வட்டங்களில் புதிய ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்க்கு ரூ.25,000/ எண் மானியத்தில் 475 எண்களும், டீசல் பம்பு செட்டு / மின்மோட்டார் அமைப்பதற்கு ரூ.15,000/ எண் மானியத்தில் 737 எண்களும், பாசன நீர் கொண்டு செல்லும் குழாய், அமைப்பதற்கு ரூ.10,000/எண் மானியத்தில் 499 எண்களும், நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்க்கு ரூ.40,000/எண் மானியத்தில் 211 எண்களும் வழங்கப்பட உள்ளது.

    மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்களுக்கு முன்னூரிமை வழங்கப்பட்டு 80 சதவீத இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்று, கணிணி சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், மண் மற்றும் நில பரிசோதனை ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன் விருதுநகர் மாவட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவ லகங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி பட்டதாரிகள் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.

    எனவே வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 8-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சரால் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது 2022 வழங்கப்பட உள்ளது.

    இந்த விருது பெறுவ தற்கு கீழ்காணும் தகுதிகளை யுடைய தமிழக அரசின் (https://awards.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பங்ளை (தமிழ மற்றும் ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தலா 2 நகல்கள் மற்றும் புகைப்படம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகதிதில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 60 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
    • இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தோ்வுகள் வெளியிடப்பட்ட நிலையில், பிளஸ் 1 தோ்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளி என மொத்தம் 159 பள்ளிகளைச் சோ்ந்த 7352 மாணவா்கள், 7762 மாணவிகள் என 15,114 போ் தோ்வு எழுதினா்.

    தோ்வு எழுதியவா்களில் 6622 மாணவா்களும், 7579 மாணவிகளும் என மொத்தம் 14,201 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 90.07 சதவீதமும், மாணவிகள் 97.64 சதவீதமும் என மொத்தம் 93.96 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.

    10-ம் வகுப்பில் மாநில அளவில் 5-வது இடமும், பிளஸ்-2 தோ்வில் மாநில அளவில் 3-வது இடத்தையும் ராமநாதபுரம் மாவட்டம் பிடித்துள்ளது. பிளஸ் -1 பொதுத்தோ்வு 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் ராமநாதபுரம் 16-வது இடத்தையும், 2019-ம் ஆண்டில் 7-வது இடத்தையும், 2020 -ம் ஆண்டில் 14-வது இடத்தையும், 2020 கொரோனா தடுப்பு நடவடி க்கையாக முழு தோ்ச்சியும் அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    பிளஸ்-1 தோ்வில் 70 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 5898 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 5309 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி 83.44 சதவீதம் மாணவா்களும், 96.44 சதவீதம் மாணவிகளும் என 90.01 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 37 உதவி பெறும் பள்ளிகளில் 94.63 சதவீதம் பேரும், 52 தனியாா் பள்ளிகளில் 99.68 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

    பிளஸ்-1 தோ்வில் அரசுப் பள்ளிகளில் 8 பள்ளிகளும், உதவி பெறும் பள்ளிகளில் 6 பள்ளிகளும், தனியாா் பள்ளிகளில் 46 பள்ளிகளும் என மொத்தம் 60 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. அறிவியல் பிரிவுகளில் தாவரவியல், விலங்கியல் பாடங்களிலும், கலையியல் பிரிவுகளில் வரலாறு, வணிகவியல், பொருளாதாரம் ஆகிய வற்றிலும் அதிக மானோா் தோல்வியடைந்துள்ளனா்.

    இந்த தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தெரிவித்தார்.

    • ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.
    • டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள குமராபண்ணையூர், செல்வன்புதியனூர் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், ஆத்தூர் புன்னைக்காயல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர் மெயின் பஜாரில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் திருச்செந்தூர்- தூத்துக்குடி போக்குவரத்து முடங்கியது. ஏரல், குரும்பூர் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை வரை போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து ஆத்தூர் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.

    ஆத்தூா்-புன்னைக்காயல் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையை வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுமென்றும், அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிகமாக இயங்குமென்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    மேலும் சாலை அமைப்பதற்கான பணிகள் ஜூலை 15-ந் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×