search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம்"

    • மதுரையில் வரும் 20-ம் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்.

    தருமபுரி,

    மதுரையில் வருகிற 20-ம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா என்ற தலைப்பில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தருமபுரியில் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்.

    தொடர்ந்து அவர் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மாநாடு குறித்த பேனர்கள் கட்டியும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், வக்கீல் அணி மாநில நிர்வாகி அசோக்குமார், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகரப் பொருளாளர் பார்த்திபன், நகர துணை செயலாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சக்திவேல், மாதையன், செந்தில்வேல், தொழிற்சங்க நிர்வாகி சிங்கராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போதை பொருள் கள்ள சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் போலி மதுபானம் மற்றும் போதை பொருட்கள், கள்ளச் சாரா யத்திற்கு எதிரான விழிப் புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் சிங்கம்புணரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவி கள் பங்கேற்றனர். இந்த போதை பொருள் விழிப் புணர்வு ஊர்வலத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி போதை பொருட் களை தமிழ் நாட்டில் வேரறுக்க மாணவ- மாணவிகளிடம் உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வு ஊர் வலம் நடைபெற்றது.

    • குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    தொண்டி

    தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணத்தில் குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. இதற்கான பிரசார வாகனத்தை திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசாரமானது மாவட்ட எல்லையான எஸ்.பி.பட்டிணத்தில் தொடங்கி காரங்காடு வரையிலான 14 பஞ்சாயத்திலுள்ள 64 கிராமங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் டி.சி.பி.யூ சமூகப்பணியாளர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சோழவந்தானில் தி.மு.க. சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
    • பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆலோசனையின்பேரில் சோழவந்தான் தி.மு.க. இளைஞரணி சார்பாக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, வாடிப் பட்டி ஒன்றிய செய லாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். சோழவந்தான் பேரூர் சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், சோழவந்தான் பேரூர் இளைஞரணி முட்டைகடை காளி வரவேற்றனர். தி.மு.க. பேச்சாளர் அலெக்சாண்டர் பேசினார்.

    இதில் பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், செல்வராணி, ஜெய ராமச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் லதா, கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், நிஷா கவுதம ராஜா, குருசாமி, முத்து செல்வி சதீஷ், நகர அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், மாணவரணி சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பால சுப்பிரமணியன், மேலக்கால் ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் ரவி, சங்கங்கோட்டை சந்திரன், தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
    • பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கமுதி பால்கடை அருகில் மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரசார கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நகர் செயலாளர் எஸ்.ஏ.ஹெச்.பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.

    இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இன்பா ரகு,மதுரை ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.நகர் இளைஞரணி அமைப்பாளர், கீழக்கரை நகர் மன்ற துணைத்தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளருமான வக்கீல் ஹமீது சுல்தான், நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ், பயாஸ்தீன், நயீம் உள்ளிட்டோர் வரவேற்று பேசுகிறார்கள்.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் 2 ஆண்டு சாதனை குறித்து பேசுகின்றனர்.இதில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது ஹனிபா, தொழி லாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் காதர், அவைத் தலைவர் ஜமால் பாரூக்,நகர் துணைச் செயலாளர்கள் ஜெய்னுதீன், முனீஸ்வரன், பாண்டியம்மாள்,நகர் பொருளாளர் சித்திக், மாவட்ட பிரதிநிதிகள் தவ்பீக் ராஜா, லதா கென்னடி, நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், முன்னாள் இளை ஞரணி துணை அமைப்பாளர் கெஜி (எ) கஜேந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி மரைக்கா யர் உள்ளிட்ட நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள்,வார்டு இளைஞரணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    முடிவில் நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் 17-வது வார்டு கவுன்சிலர் செய்யது முகம்மது பயாஸ்தீன் நன்றி கூறுகிறார். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு நகர் இளைஞரணி அமைப்பா ளர் வக்கீல் ஹமீது சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ஒவ்வொரு வீடாக சென்று விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை இடிகரை பேரூராட்சி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்க்க இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் இடிகரை, மணியகாரன்பாளையம், செங்காளிபாளையம், வட்டமலைபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு வீடாக அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். 

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெருமுனை பிரசாரம் நடைபெற்றது
    • இதற்கு ஒன்றிய செயலாளர் திலகர் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஆலங்குடி வடகாடு முக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பா.ஜ.க. ஆட்சியை கண்டித்தும், நாட்டையும், மக்களையும் காப்பாற்றுவோம் என்று தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் திலகர் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் முருகன், முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவாறு நடை முறைப்படுத்தப்படாதது குறித்து மக்களிடையே தெரிவிக்கும் விதமாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் இந்திராணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் இந்திராணி மற்றும் ஒன்றிய குழு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும்.
    • பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டின் ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம், மாற்றத்தை நோக்கி அனைத்து மக்களையும் அணி திரட்டுவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய பிரசார இயக்கம் நடந்து வருகிறது.

    அதன்படி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பயண பிரசார இயக்கம் இன்று 2-வது நாளாக நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி 2-ம் நாள் பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    ஏ.ஐ.டி.யு.சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் பிரசார இயக்கத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.

    இந்த பிரசார இயக்கத்தில், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஏழை மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

    இதில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாநகரத் துணைச் செயலாளர் முத்துக்குமரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, செல்வகுமார், மாநகர நிர்வாகிகள் மூர்த்தி, கல்யாணி, ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மாரிமுத்து, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா நன்றி கூறினார்.

    • பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
    • மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, கோவை போலீசார்கள், பெண்கள் அதிகம் கூடி நிற்கும் பஸ் நிறுத்தங்களுக்கு சென்று, காவல் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை பூ மார்க்கெட் பஸ் நிறுத்தத்தில் பெண்கள் அதிகமாக கூடியிருந்தனர்.

    அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். உதாரணமாக பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் 1098 என்ற எண்ணில் அழைக்கலாம். பொதுவான அழைப்புகளுக்கு 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதியோர்களுக்கு இது ஏதும் பிரச்சினை என்றால் 14567 என்ற எண்ணில் அழைக்கலாம்.

    மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பெண்கள் அனைவரும் விரும்பி கவனித்தனர்.

    • கீழக்கரை வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்குமாறு பா.ம.க. பிரசாரம் நடந்தது.
    • இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    கொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆணைக்கிணங்க கீழக்கரையில் நகரச்செயலாளர் லோகநாதன் தலைமையில் வணிக வளாகங்களில் அதன் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக்கோரி துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அக்கீம், தலைவர் சந்தனதாஸ் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட பசுமை தாயகத்தின் செயலாளர் கர்ண மகாராஜன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் செரிப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே பெருநாழியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நேதாஜி பஜாரில் தொடங்கிய பிரசாரத்தை காடமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவரும், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளருமான பெருநாழி போஸ் தொடங்கி வைத்தார்.

    ஊராட்சி மன்றத்தலைவர் ஆத்திமுத்து, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை மாரஎலிசெபத் மகாராணி, ஆசிரியர் பயிற்றுநர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள்கருணாகரன்,கணேசமூர்த்தி,இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரசாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் படிப்பதால் கிடைக்கும் இலவச திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இது குறித்த துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    • நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    ஊட்டி,

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ''அரசு பள்ளி களைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இதுதவிர ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நகராட்சியில் 10 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் உள்ளன.

    நீலகிரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. ஊட்டி ஏ.டி.சி பகுதியில் முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, இந்த வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சர்வ சிக்ச அபியான் திட்ட உதவி அலுவலர் அர்ஜூனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், பிரமோத், சுஜித், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் இம்மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    விழிப்புணர்வு வாகனம் மூலம் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    அரசு பள்ளிகளில் ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக்கொள் ளும் எண்ணும் எழுத்தும் திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் மாநில அளவிலான கலை திருவிழா, சிறார் திரைப்பட விழா, இலக்கிய திருவிழா, விளை யாட்டுப்போட்டிகள், வானவில் மன்ற போட்டி கள், வினாடி-வினா மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இல்லம் தேடி கல்வித் திட்டம், வானவில் மன்றம், தேன்சிட்டு, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1000 கல்வி உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள், காலை உணவு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படும்.இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதே ஆகும். எனவே பொதுமக்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்துபயன் பெறலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் ஊட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷீலா, ஆசிரியர் பயிற்றுநர்கள் எழிலரசன், விஜயராஜ், ஜமுனா ராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன் மற்றும் ஜெகதீஸ்குமார் மற்றும் இல்லம் தேடி கல்வியின் மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பிரமோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×