search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஸ்கெட்"

    குழந்தைகளுக்கு சாக்லெட் குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லெட் குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பவுடர் - 1/4 கப்,
    வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    சாக்லெட் சிப்ஸ் - 1 டீஸ்பூன்,
    பொடித்த பிரவுன் சுகர் - 2 டீஸ்பூன்,
    பால் - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பிரவுன் சுகர், பால், வெனிலா எசென்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் அதில் பாதாம் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து குக்கீஸ்களாக தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து பரிமாறவும்.

    குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் குக்கீஸ் ரெடி.

    குறிப்பு...

    பாதாம் பவுடர் செய்ய பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு இரவு முழுவதும் காயவிட்டு மிக்சியில் பவுடராக பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிடித்தமான பிஸ்கெட்டுகளை எளிய முறையில் வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இன்று தேங்காய் பிஸ்கெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 100 கிராம்
    வெண்ணெய் - 80 கிராம்
    சர்க்கரை - 40 கிராம்
    வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
    வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
    பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
    உப்பு - சிட்டிகை



    செய்முறை :

    வெண்ணெயை உருக்கி கொள்ளவும்.

    உருக்கிய வெண்ணெயுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் சர்க்கரை, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பிசைந்த மாவை பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து குளிர்ச்சி தன்மை போனவுடன் சப்பாத்தி போல் சற்று தடிமனாக தேய்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும். அனைத்து மாவையும் இவ்வாறு செய்து கொள்ளவும்.

    செய்தவற்றை 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான தேங்காய் பிஸ்கெட் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரியாங்குப்பத்தில் பிஸ்கெட் என நினைத்து எலி கேக்கை தின்ற பெண் பரிதாபமாக இறந்து போனார்.

    அரியாங்குப்பம்:

    புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் முருகன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விமலா (வயது 44). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் எலி தொல்லை இருந்ததால் எலிகளை கொல்ல முருகன் எலி கேக் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று இதனை அறியாத விமலா பிஸ்கெட் என நினைத்து எலி கேக்கை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு விமலா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×