search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஷப்"

    கேரள மாநிலத்தில் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரி மீது தேவாலயம் எடுத்திருந்த ஒழுங்கு நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

    பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு தற்போது அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    பாதிரியார் கைது செய்யப்பட்ட உடனே, கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இதையடுத்து நேற்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்திருந்தது. எந்த வித எழுத்துப்பூர்வ அறிவிப்பும் இன்றி வாய்மொழியாக தன்னை தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என நிர்வாகம் தெரிவித்ததாக லூசி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரி லூசி கலப்புரா மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேவாலய நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #Kerala #KeralaNun 
    கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் இயங்கும் தேவாலயங்களுக்கு வாடிகன் பிஷப்புகளை நியமித்து வரலாற்று சிறப்பு மிக்க புதிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. #China #Vatican
    பீஜிங்:

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான சீனா கம்யூனிச நாடாகவே அறியப்படுகிறது. இங்கு மதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதிக அளவில் புத்த மதமே இங்கு பின்பற்றப்படுகிறது.

    இந்நிலையில், வாடிகன் சீனாவுடன் புதிய வரலாற்று சிறப்பு மிக்க இணைப்பை, ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு வாடிகன் நேரடியாக பிஷப்புகளை நியமித்துள்ளது.



    இதன்மூலம், சீனாவுக்கும், வாடிகனுக்கும் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று வாடிகனில் இருந்து நியமிக்கப்பட்ட பிஷப்புகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய சீன கத்தோலிக்க தேவாலய பிஷப், சோசியலிச நாட்டுக்கு தகுந்த வகையில் தாங்கள் நடந்துகொள்வோம் எனவும், சீன அரசின் தலைமையிலேயே செயல்படுவோம் எனவும் உறுதி அளித்துள்ளனர். #China #Vatican
    கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரியை மீண்டும் பணியில் சேர்க்க வயநாடு தேவாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

    பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு 3 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    இதையடுத்து கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இதையடுத்து இன்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கன்னியாஸ்திரி லூசி, எந்த வித எழுத்துப்பூர்வமான அறிவிப்பும் அளிக்காமல், காரணங்களும் சொல்லாமல், தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என வாய்மொழியாக மட்டுமே கூறி, தம்மை வெளியேற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    தேவாலய நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. #Kerala #KeralaNun 
    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை அறிவித்திருந்து.

    தொடர்ந்து மூன்று நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.



    இதைத்தொடர்ந்து, சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிமன்ற விசாரணையின்போது, பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    கேரள மாநிலம் கோட்டையம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரியை பணியிடமாற்றம் செய்ததால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Kerala
    ×