search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெக்சாஸ்"

    டெக்சாஸ் நாட்டில் சிறைக்கைதிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட வாழைப்பழ பெட்டிகளுக்குள் இருந்து 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Cocaine #Texas
    ஆஸ்டின்:

    டெக்சாஸில் உள்ள ஹோஸ்டான் நகரில் உள்ள சிறைச்சாலைக்கு வாழைப்பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 50--க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் வாங்கி பெட்டிக்குள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.

    அப்போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை கண்ட அதிகாரிகள், சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தியபோது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Cocaine #Texas
    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #TexasSchool #Shooting
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் மர்ம நபர் இன்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

    இந்த தாக்குதலில் பல மாணவர்கள் பலியாகி உள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார். #TexasSchool #Shooting
    அமெரிக்காவில் 2003-ம் ஆண்டில் ராப் பாடகர் கார்சியா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடந்த 2003-ம் ஆண்டு ராப் பாடகர் கார்சியா தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது நடைபெற்ற கொள்ளை முயற்சியில் கார்சியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த சம்பவத்தில் கார்சியாவின் காதலிக்கும் தொடர்பு உள்ளதை கண்டறிந்து, அவரது காதலி உட்பட அனைவரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கார்சியாவை சுட்டுக் கொன்ற முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட கேஸ்டில்லோவுக்கு, விஷ ஊசி மூலம் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இந்த வருடத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் 6-வது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது. #Texas #executesmurderer
    ×