search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 167928"

    டெல்லியில் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று சந்திக்க முடியாமல் சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #ADMK #OPS
    சென்னை:

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தனது டெல்லி வருகை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், ‘இந்த பயணம் முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் சகோதரர் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ராணுவ விமானம் அளித்தனர். எனவே, இதற்கு நன்றி தெரிவிக்க மட்டுமே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை’ என தெரிவித்திருந்தார்.

    ஆனால், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது. அதிமுக எம்.பி மைத்ரேயனை சந்திப்பதற்காக மட்டும் நிர்மலா சீதாராமன், இன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ஓ.பன்னீர் செல்வம் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர் செல்வத்திடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா கூறியுள்ளார்’ என ஒற்றை வரியில் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.  #OPS #NirmalaSitharaman
    சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 7 அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு செல்லாத நிலையில், இரு அணிகளுக்கு இடையே மீண்டும் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ADMK #EPS #OPS
    பெரியகுளம்:

    ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் துணை முதல்வராக தற்போது இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு சசிகலா குடும்பத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தார்.

    கடந்த சில நாட்களாக அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் விடுக்கப்பட வில்லை என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கொடைக்கானல் மலர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் என்று புறக்கணித்தார்.

    கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடந்தால் ஓ.பன்னீர்செல்வம் தவறாமல் பங்கேற்று விடுவார். ஆனால் இந்த ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கொடைக்கானல் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இன்று காலைதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் மதுரை வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார். அப்போது எடப்பாடி அணியினர் வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோட்டில் அவரை வழியனுப்பி வைக்க திரண்டு இருந்தனர். ஆனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை.

    இது குறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறுகையில் இதுவரை 7 அரசு விழாக்கள் நடந்து முடிந்துள்ளது. ஆனால், துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அந்த விழாக்களுக்கு அவரும் செல்லவில்லை என்றனர்.
    ×