என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 168024
நீங்கள் தேடியது "அண்ணாமலையார்"
திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும்.
திருவண்ணாமலை கோவிலில் திரும்பிய திசை எல்லாம் லிங்கங்களை பார்க்கலாம். இந்த ஆலயத்தில் மொத்தம் 56 லிங்கங்கள் உள்ளன. இதில் 11 லிங்கங்கள் தனி சன்னதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது.
அந்த வரலாற்றை தெரிந்து கொள்வது என்பது மிக கடினமானது. முக்கிய லிங்கங்கள் பற்றி மட்டும் இப்போதும் செவி வழி செய்தியாக தகவல்கள் உள்ளன. இந்த லிங்கங்கள் ஆலயத்தின் எந்தெந்த பகுதிகளில் உள்ளன என்பதை தெரிந்து கொண்டால் வழிபாடு செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். ராஜகோபுரத்தை கடந்ததும் வரும் 5-ம் பிரகாரத்தில் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற 2 லிங்கங்கள் இருப்பதை பார்க்கலாம். அடுத்து 4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் எதிரே பிரம்ம லிங்கம், ஸ்ரீநளேஸ்வரர், வித்யாதேஸ்வரர் ஆகிய 3 லிங்கங்கள் உள்ளன.
3-ம் பிரகாரத்தில் மகிழ மரத்தடியில் ஜலகண்டேஸ்வரர், கல்யாண மண்டபத்தில் பீமேஸ்வரர், அருணகிரி யோகீஸ்வரர், ஸ்ரீகாளத்தீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனித்தனி சன்னதிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரகாரத்தில் அமைந்துள்ள லிங்கங்கள் பஞ்ச பூதங்களை பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் திருவண்ணாமலை தலத்தில் பஞ்ச பூதங்களும் அடங்கி இருப்பதை நமது முன்னோர்கள் உணர்த்தி உள்ளனர்.
2-ம் பிரகாரத்தில் அடுத்தடுத்து லிங்கங்கள் அணிவகுத்து இருக்கின்றன. இந்திர லிங்கம், சனகேஸ்வரர், சனந்தனேசுவரர், சனாதனேஸ்வரர், சனதீகுமாரேஸ்வரர், கவுசிகேசுவரர், குத்ஸரிஷி ஈஸ்வரர், வால்மீகிசுவரர், அக்னி லிங்கம், விக்னேசுவரர், விஸ்வநாத ஈஸ்வரர், ஸ்ரீநாரதேசுவரர், ஸ்ரீகாசி லிங்கம், ஸ்ரீகாசி லிங்கம், வைசம் பாயனேசுவரர், ஸ்ரீவாமரீஷிசுவரர், எம லிங்கம், காசி லிங்கம், காசிலிங்கம், காசி லிங்கம், காசி லிங்கம், ஸ்ரீதும்புரேஸ்வரர், ஸ்ரீநிருதலிங்கம், ஸ்ரீ வருணலிங்கம், வியாசலிங்கம், ஸ்ரீவிக்ர பாண்டீ சுவரர், ஸ்ரீவணிஷ் டலிங்கம், ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீவாயுலிங்கம், ஸ்ரீகுபேர லிங்கம், விசுவாமித்ஸ்வரர், ஸ்ரீபதஞ்சலீசுவரர், ஸ்ரீவியாக்கிரபாதேசுவரர், 108 லிங்கம், ஸ்ரீஅகஸ்தீசுவரர், ஸ்ரீஜீரஹரேசுவரர், ஈசானலிங்கம் என 37 லிங்கங்கள் இந்த பிரகாரத்தில் உள்ளன.
இந்த 37 லிங்கங்களும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் கொண்டவை. எனவே இந்த லிங்கங்களை மிக பொறுமையாக வழிபாடு செய்தால் பல உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். மிக உன்னிப்பாக கவனித்தால் கிரிவலப்பாதையில் நாம் வழிபடும் அஷ்டலிங்கங்களும் இங்கு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஒரே கல்லில் 1008 லிங்கம் இருப்பதை பார்க்கலாம். இந்த லிங்கங்களில் பெரும்பாலானவை ரிஷிகளால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து கருவறையில் இருக்கும் மூலவரான அண்ணா மலையார் லிங்கத்தை பார்க்கலாம். 5-ம் பிரகாரத்தில் இருந்து ஒவ்வொரு லிங்கமாக நாம் கணக்கிட்டு வந்தால் மிகச்சரியாக 50-வது லிங்கமாக கருவறை லிங்கம் திகழ்கிறது. இந்த லிங்கத்திற்கு அக்னி லிங்கம் என்று பெயர். சிவப்பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வடிவமாக திகழ்கிறார். அதை உணர்த்தவே காஞ்சீபுரத்தில் மண்லிங்கம், திருவானைகாவலில் நீர் லிங்கம், ஸ்ரீகாளகஸ்தீயில் வாயு லிங்கம், சிதம்பரத்தில் ஆகாய லிங்கம் இருக்கின்றன. அதேபோன்று திருவண்ணாமலையில் அக்னி லிங்கம் திகழ்கிறது.
முன் ஒரு காலத்தில் சிவபெருமானை நோக்கி பார்வதி தேவி கடும் தவம் இருந்தாள். அவளுக்கு காட்சி கொடுப்பதற்காக சிவபெருமான் அக்னி வடிவம் எடுத்து வந்தார். பார்வதியும் பரமசிவனும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஆக மாறி அக்னி மண்டலத்தின் நடுவில் நடனம் புரிந்தனர். பிறகு சிவலிங்கமாக மாறினார்கள். அந்த லிங்கம்தான் அக்னி லிங்கமாக போற்றப்படுகிறது.
அக்னி லிங்கம் மிகுந்த ஆற்றல் உடையது. நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் தரும் சிறப்புடையது. திருவண்ணாமலை தலத்திற்கு செல்பவர்கள் அக்னி லிங்கமாக வீற்றிருக்கும் அண்ணாமலையாரிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும். அக்னி லிங்கத்தை வழிபடும்போது நமது மனம் இலவம்பஞ்சு போல லேசாகி விடும். நம் மன பாரத்தை எல்லாம் அக்னி லிங்கமாக இருக்கும் அண்ணாமலையார் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தோன்றும். சுருக்கமாக சொல்வது என்றால் நம் மனது நிர்விகல்பம் ஆகி விடும். அக்னி லிங்கத்திடம் நம் மனதை ஆத்மார்த்தமாக செலுத்தினால் மட்டுமே இந்த நிலையை நாம் பெற முடியும்.
இத்தகைய சிறப்புடைய அக்னி லிங்கத்தை வழிபட்ட பிறகு வெளியில் வந்து முதல் பிரகாரத்தை சுற்றி வரலாம். அங்கு லிங்கோத்பவர் உள்ளார். அடுத்து உண்ணாமலையம்மன் சன்னதியிலும் லிங் கங்கள் உள்ளன. அங்குள்ள அஷ்ட லட்சுமி மண்டபத்தில் சோழலிங்கம், சேரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் நிறுவி வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த லிங்கங்கள் தவிர அடிமுடி அறியாதவர், லிங்கம், ஸ்ரீசோமேசுவரர் உள்ளனர்.
இவ்வளவு லிங்கங்கள் இருந்தாலும் தனி சன்னதிகளில் உள்ள லிங்கங்களுக்கு வெவ்வேறு சிறப்புகள் உள்ளன. 5-ம் பிரகாரத்தில் உள்ள பாதாளலிங்கம் ரமணர் காலத்தில் புகழ்பெற்றது. இந்த பாதாள லிங்கம் ஆயிரம்கால் மண்டபத்தில் ஒரு பகுதியில் பாதாளத்தில் அமைந்துள்ளது. ரமணர் சிறுவயதில் திருவண்ணாமலைக்கு வந்த போது குகை போன்று இருந்த இந்த பாதாளத்திற்குள் சென்று தவம் இருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரமணரை கண்டுபிடித்து வெளியில் அழைத்து வந்தனர். அதன் பிறகு இந்த பாதாள லிங்கத்திற்கு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த லிங்கம் இருக்கும் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்தால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இந்த பிரகாரத்திலேயே கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. அங்கு கிழக்கு திசையை நோக்கி ஈஸ்வரர் அமர்ந்து உள்ளார். அவரை சாட்சியாக வைத்து அந்த சன்னதியில் திருமணம் நடத்தப்படுகிறது. சிவராத்திரி தினத்தன்று இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
நான்காம் பிரகாரத்தில் நளேஸ்வரர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியின் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. சேதி நாட்டு இளவரசி தமயந்தி நிடத நாட்டு மன்னன் நளன் என்பவனை திருமணம் செய்ய முடிவு செய்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனி பகவானை தூண்டி விட்டு நளனை துன்புறுத்த செய்தனர். உடனே நளன் சிவபெருமானை வேண்டி வணங்கி தனது துன்பத்தில் இருந்து விடுபட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நளன் இத்தலத்துக்கு வந்து இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் இந்த லிங்கம் நளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நளேஸ்வரரை வழிபட்டால் களத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
இந்த சன்னதி அருகிலேயே வித்யாதேஸ்வரர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வியில் சிறப்புகளை பெறலாம் என்பது ஐதீகமாகும். அடுத்து அதே வரிசையில் பிரம்மலிங்கம் தனி சன்னதியில் இருப்பதை காணலாம். பிரம்மா இத்தலத்தில் அண்ணாமலையாரை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரம்மா எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டு இருப்பார்.
இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கத்திலும் நான்கு முகங்கள் உள்ளன. அக்னி, வாயு, மண், தண்ணீர் ஆகியவற்றை குறிப்பதால் இந்த நான்கு முக லிங்கத்தை சதுர்முக லிங்கம் என்று சொல்கிறார்கள். உச்சியில் ஐந்தாவது முகமும் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த முகத்துக்கு ஆகாசம் என்று பெயர். இதனால் இந்த லிங்கம் பஞ்சமுக லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
அதே பிரகாரத்தில் அடிமுடி காணா அண்ணாமலையார் சன்னதி உள்ளது. அண்ணாமலையார் பாதம் அருகே அமைந்துள்ள இந்த சன்னதியில் சிவபெருமானும் பார்வதியும் சேர்ந்து காட்சி அளிக்கிறார்கள். திருவண்ணாமலை தலத்தில் இந்த சன்னதி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழம் மரம் அருகே கல்யாண மண்டபத்திற்குள் பீமேஸ்வரர் சன்னதி உள்ளது.
பஞ்ச பாண்டவர்கள் மகாபாரதபோரில் வெற்றி பெறுவதற்காக ஒன்றாகவும் தனித்தனியாகவும் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபட்டனர். அந்த வகையில் பீமன் திருவண்ணாமலை தலத்துக்கு வந்து அண்ணாமலையாரை வழிபட்டு பலன் பெற்றார். அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதி அமைந்துள்ளது. சிலர் இந்த சன்னதி அமைந்துள்ள இடத்தில் தான் அண்ணாமலையாரை பீமன் நேரில் கண்டு தரிசித்ததாக சொல்கிறார்கள்.
இந்த சன்னதியை கடந்துசென்றால் மேற்கு பகுதியில் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபத்தை காணலாம். நான்கு துண்களுடன் அமைந்துள்ள இந்த சன்னதியில் அருணகிரி நாதர் சிலை அமைந்துள்ளது. ஆனால் உண்மையில் அண்ணாமலையார் அங்கு யோகியாக வீற்றிருப்பதாக சான்றோர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்த மண்டபம் அருணகிரி யோகீஸ்வரர் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
சித்தர்கள் இந்த இடத்தில் தியானம் செய்து பலன் பெற்றுள்ளனர். எனவே இந்த மண்டபம் பகுதியில் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்தால் ஆத்ம ஞானம் பெறலாம் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதே மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அகத்தீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சிதம் பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதி கள் சிவபெருமான் பஞ்சபூதங்களாக இத்தலத்தில் இருப்பதை பிரதிபலிக்கின்றன.
இரண்டாம் பிரகாரத்தில் 37 லிங்கங்கள் அணிவகுக்கின்றன. அந்த லிங்கங்களின் பெயரிலேயே அவற்றின் வரலாறு உள்ளது. நேரம் இருப்பவர்கள் இந்த லிங்கங்களின் வரலாறை தெரிந்து கொண்டு வழிபட்டால் அந்த வழிபாடு முழுமையானதாக இருக்கும். திருவண்ணாமலை தலத்தில் மற்ற இறை சன்னதிகள் போல நந்திக்கும் பல்வேறு சன்னதிகள் உள்ளன. அந்த சன்னதிகளிலும் ரகசியங்கள் மறைந்துள்ளன.

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-
1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.
1. ராஜகோபுரம்
திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.
கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.
அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. பேய்க்கோபுரம்
ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார்.
இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.
3. திருமஞ்சன கோபுரம்
திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.
ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது.
4. வல்லாள மகாராஜா கோபுரம்
இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.
இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
5. கிளி கோபுரம்
திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.
6. தெற்கு கட்டை கோபுரம்
திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.
7. மேற்கு கட்டை கோபுரம்
பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.
8. வடக்கு கட்டை கோபுரம்
அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
9. அம்மணியம்மாள் கோபுரம்
திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

திருவண்ணாமலை ஆலயத்தில் பஞ்ச பருவ பூஜைகள் சிறப்பு பெற்றுள்ளன. இந்த பூஜைகள் வரும் நாட்கள் மற்றும் நேரத்தை தெரிந்து கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றால் மிகவும் புண்ணியம் கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள பழமையான ஆலயங்களில் இன்றும் கால பூஜைகள் தினமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. சில ஆலயங்களில் 5 கால பூஜைகள் நடப்பதுண்டு. சில ஆலயங்களில் 6 கால பூஜைகள் நடைபெறும். திருவண்ணாமலை ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. தினசரி நடக்கும் பூஜைக்கு நித்திய கிரியை என்று பெயர். அப்படி அல்லாமல் விசேஷமாக நடத்தப்படும் பூஜைகளுக்கு நைமித்திக பூஜைகள் என்று பெயர். இதில் நித்திய பூஜைகளை எந்தெந்த காலங்களில் நடத்த வேண்டும் என்று ஆகமங்களில் நம் முன்னோர்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
6 கால பூஜை என்பது உஷத் காலம், கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தஜாமம் ஆகியவற்றை குறிக்கும். சூரிய உதயத்தை கணக்கிட்டு நாழிகை அடிப்படையில் இந்த பூஜைகளை செய்வார்கள். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும்.
உஷத் காலம் என்பது சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பு தொடங்கி சூரிய உதயம் வரை உள்ள காலம் ஆகும். கால சந்தி என்பது சூரிய உதயம் முதல் 10 நாழிகை உள்ள காலமாகும். உச்சிகாலம் என்பது மதியம் 11.30 மணி முதல் 12.30 மணி வரை உள்ள காலம் ஆகும். சாய ரட்சை என்பது சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை உள்ள நேரத்தை குறிக்கும். இரண்டாம் காலம் என்பது சூரியன் மறைவிலிருந்து மூன்றே முக்கால் நாழிகை வரை உள்ள காலம் ஆகும். அர்த்த ஜாமம் என்பது கோவில் நடைஅடைக்கும் சமயத்தில் நடத்தப்படும் பூஜை ஆகும்.
பொதுவாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடையை திறந்து இரவு 9 மணிக்கு அடைத்து விட வேண்டும் என்பது ஆகம விதியாகும். திருவண்ணாமலை ஆலயம் மற்ற ஆலயங்களை விட பெரிய ஆலயம் என்பதாலும் நிறைய சன்னதிகளை கொண்டு இருப்பதாலும் மற்ற சிவாலயங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பூஜை வகைகளை கொண்டுள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை ஆலயத்தில் பஞ்ச பருவ பூஜைகள் சிறப்பு பெற்றுள்ளன. மாத பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம், சோமவாரம், சுக்கிரவாரம், கிருத்திகை, சதுர்த்தி, சஷ்டி ஆகியவை பஞ்ச பருவ பூஜைகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பூஜைகள் வரும் நாட்கள் மற்றும் நேரத்தை தெரிந்து கொண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு சென்றால் மிகவும் புண்ணியம் பெறும் வகையில் வழிபாடுகள் செய்து விட்டு வரலாம்.
தமிழ் மாத பிறப்பு வழிபாடு
ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்றும் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறுவது பழங்காலத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்தது. தற்போது அது குறைந்து பவுர்ணமிக்கு கிரிவலம் செல்வது அதிகரித்து உள்ளது. தமிழ் மாத பிறப்பு அன்று திருவண்ணாமலையில் பஞ்ச மூர்த்திகளுக்கும் அபிஷேக சிறப்பு ஆராதனைகள் நடத்துவார்கள். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின்போது பஞ்ச மூர்த்திகளையும் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள மாத பிறப்பு மண்டபத்துக்கு எழுந்தருள செய்வார்கள்.
அந்த மாத பிறப்பு மண்டபம் மிக மிக பழமையானது. அந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளையும் அலங்காரத்துடன் பார்ப்பது கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும்.
பவுர்ணமி
பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் திரள்வது உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்பதில்லை. அன்றைய தினம் மாலை உற்சவ மூர்த்தியான சந்திரசேகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். பிறகு அவர் அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப் படும். இதை நேரில் கண்டுகளிப்பது மிகுந்த பலன் தருவதாக கருதப்படுகிறது.
அமாவாசை
பவுர்ணமி போன்றே அமாவாசை தினத்தன்றும் இரண்டாம் கால பூஜையின்போது உற்சவர் சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். நான்காவது பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள அமாவாசை மண்டபத்தில் சந்திரசேகரை எழுந்தருள செய்வார்கள். அங்கு அவருக்கு தூப தீப ஆராதனைகள் மிகவும் விமர்சையாக நடைபெறும். அந்த ஆராதனை முடிந்த பிறகு அவர் ஆலயத்துக்குள் செல்வார்.
அமாவாசை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையை காண ஏராளமானோர் அமாவாசை மண்டபத்தில் திரள்வது உண்டு. இந்த பூஜையை நேரில் கண்டால் பித்ருக்களை வழிபட்டதற்கு சமமாக கருதப்படுகிறது. எனவே மறைந்த முன்னோர்களின் ஆசியை பெற விரும்புபவர்கள் இந்த அமாவாசை பஞ்ச பருவ பூஜையை தவற விடுவதில்லை. இறையருள் மட்டுமின்றி பித்ருக்களின் ஆசியையும் பெற்று தரும் அமாவாசை பருவ பூஜையை மற்ற தலங்களில் காண இயலாது.
கிருத்திகை
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது வள்ளி&தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். பிறகு முருகப்பெருமான் அலங்காரத்துடன் நான்காம் பிரகாரத்தின் வடமேற்கு திசையில் உள்ள கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டுவார்கள். இந்த பூஜையில் பங்கேற்றால் வாழ்வில் ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.
பிரதோஷம்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரதோஷ பூஜையில் பக்தர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். திருவண்ணாமலை தலத்திலும் அதேநிலை தான் இருந்தது. பிரதோஷ பூஜை தினத்தன்று அந்த காலத்தில் 50 பேர் வந்தாலே அதிகம். ஆனால் இப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளுகிறார்கள் என்று திருவண்ணாமலையில் வாழும் பழம்பெரும் சிவாச்சாரியாரான தியாகராஜ சிவாச்சாரியார் நினைவு கூர்ந்தார்.
சமீப காலமாக திருவண்ணாமலையில் பிரதோஷ தினத்தன்று வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் அன்றையதினம் விரதம் இருந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை பழக்கத்தில் வைத்துள்ளனர். அன்றையதினம் மாலை நந்திக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்.
நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும். மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளுவார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் அரோகரா என்று முழக்கிமிடுவார்கள். அந்த சமயத்தில் சிவபுராணம் மற்றும் நந்தி புராணம் படித்தால் அளவற்ற பலன்கள் தேடி வரும் என்பது ஐதீகம் ஆகும்.
சோமாவாரம்
திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமாவார பூஜை வித்தியாசமானது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும். அதற்கு விரதங்கள் உதவியாக உள்ளன. விரதங்களில் சோமாவாரம் விரதம் அதிக பலன்களை தரக்கூடியது. திருமணம், குழந்தை பாக்கியம், நோய் தீர, எதிரிகளை வெல்ல, நினைத்தது நடக்க சோமாவார விரதமும், பூஜையும் கைகொடுக்கும்.
திருவண்ணாமலையில் சோமாவார பூஜையை கடந்த சுமார் 43 ஆண்டுகளாக ஒரு அமைப்பு நடத்தி வருகிறது. இந்த அமைப்பினர் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலையில் சோமாவார பூஜையை பொறுப்பேற்று நடத்துகிறார்கள். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது உற்சவ மூர்த்தியான சந்திரசேகரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள். இந்த அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடத்தப்படும். அதை கண்டு வழிபடுவதே தனி ஆனந்தத்தை தரும்.
அதன்பிறகு உற்சவ மூர்த்தியை அலங்காரம் செய்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்வார்கள். அங்கு அவருக்கு தீபாராதனைகள் நடத்தப்படும்.
சுக்ரவாரம்
சோமாவார பூஜை திங்கட்கிழமை நடத்தப்படுவது போல சுக்ரவார பூஜை வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படுகிறது. அன்றையதினம் மாலை இரண்டாம் கால பூஜையின் போது ஸ்ரீ பராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து எழுந்தருள செய்வார்கள். அதைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடி மரம் அருகே ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படும். அன்னையை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டுவார்கள்.
ஸ்ரீ பராசக்தி அம்மனின் ஆனந்த ஊஞ்சல் உற்சவத்துக்கு ஏற்ப நாதஸ்வர கலைஞர்கள் இசை அமைப்பார்கள். கண்களுக்கும், காதுகளுக்கும் இந்த ஊஞ்சல் உற்சவம் விருந்து படைப்பதாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் திட்டமிட்டு தங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால் இந்த ஊஞ்சல் உற்சவத்தை பார்த்துவிட்டு வரலாம்.
சஷ்டி, சதுர்த்தி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பஞ்ச பருவ பூஜைகளின் போது உற்சவ மூர்த்திகள் எந்தெந்த வாகனங்களில் எடுத்து செல்லப்படும் என்பதை முன்னோர்கள் முறைப்படி அமைத்துள்ளனர். இந்த உற்சவங்களின் போது சுவாமிக்கு எத்தகைய அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்பதும் திருவண்ணாமலை தலத்தில் தனித்துவமாக உள்ளது. அந்தமாதிரி அலங்கார ஆராதனைகளை வேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாது.
சில பூஜை முறைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும். அந்த பூஜைகள் அனைத்தும் இப்போதும் மரபு மாறாமல் நடந்து வருகிறது. அவற்றை பார்த்தாலே பரவசம் மட்டுமல்ல, பலன்களும் தேடிவரும். எனவே அடுத்த முறை திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் முன்பு பஞ்ச பருவ பூஜைகள் ஏதேனும் உள்ளதா? என்பதை அறிந்து சென்றால் அதிக பலனை பெற முடியும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.
திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.
பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் இடைக்காடர் தவக்கோலத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
ஆனால் இடைக்காடர் திருவண்ணாமலையில்தான் அடங்கி இருக்கிறார் என்பது 99 சதவீத சித்த ஆய்வாளர்களின் கருத்தாகும். நிஜானந்த போதம் என்னும் நூலில் இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் திருவண்ணாமலையில் இடைக்காடரின் ஜீவ சமாதி உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி அல்லது ஒளி சமாதி எங்கு உள்ளது என்பதில்தான் மாறுபட்ட தகவல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன. திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி 5 இடங்களில் இருப்பதாக பேசப்படுகிறது.
1. அண்ணாமலையாரின் கருவறையே இடைக்காடரின் ஜீவ சமாதி என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். திருவண்ணாமலை கோவிலின் கருவறை 4-ம் நூற்றாண்டில் உருவானது. அந்த கருவறை சுற்றுச் சுவர்களில் ஏராளமான ஆடுகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த கருவறைக்குள்தான் இடைக்காடர் அடங்கி இருப்பதாக நம்புகிறார்கள்.
2. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி நுழைவாயில் இருபுறமும் இரண்டு பெரிய அறைகள் உள்ளன. வடக்கு புறம் உள்ள அறையின் அருகே ஒரு சுரங்க பாதை செல்கிறது. அந்த சுரங்க பாதை மலைக்குள் ஊடுருவி செல்வதாகவும், அந்த சுரங்கப் பாதைக்குள்தான் இடைக்காடரின் ஜீவ சமாதி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
3. திருவண்ணாமலை கோவிலின் 3--ம் பிரகாரத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துக்கு அருணை யோகீஸ்வரர் மண்டபம் என்று பெயர். அந்த மண்டபம்தான் இடைக்காடர் ஜீவசமாதி என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மண்டபத்தின் கீழ் இடைக்காடரின் சிலை உள்ளது. எனவே அவர் அந்த மண்டபத்தில் சூட்சும வடிவில் புதைந்திருப்பதாக கருதப்படுகிறது.
4. திருவண்ணாமலை மலையின் மேற்கு பகுதியில் இடைக்காடர் ஜீவசமாதி இருப்பதாக மற்றொரு கருத்து உள்ளது. அங்கு பாத வடிவம் உள்ளது. எனவே அதுதான் இடைக்காடர் ஜீவசமாதியான இடம் என்று சொல்கிறார்கள்.
5. திருவண்ணாமலை ஆலயத்தில் 6-வது பிரகாரத்தில் பிரம்மலிங்கம் பின்புறம் சுற்றுச்சுவரில் ஒரு பெரிய குகை போன்ற அமைப்பு உள்ளது. 7 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட அந்த இடம்தான் இடைக்காடர் சித்தர் ஒளிசமாதி பெற்ற இடமாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த இடம் தான் இடைக்காடரின் ஒளிசமாதி அமைந்து இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்ல தொடங்கி உள்ளனர்.
திருவண்ணா மலையில் இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கும் இடமாக இந்த இடம்தான் சமீபத்தில் அதிகமான ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. எனவே இந்த இடத்துக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
திருவண்ணாமலை பெரிய தெருவில் இடைக்காடர் சித்தர் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இடைக்காடர் சித்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை நிறுவிய கோவிந்தராஜ் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று இடைக்காட்டுக்கு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இடைக்காடர் ஒளிசமாதியாக அமைந்திருப்பது பற்றி அவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து நிறைய தகவல்களை சேகரித்து உள்ளார். அவர் சொல்கிறார்....
இடைக்காடர் சித்தரால்தான் திருவண்ணாமலை கோவில் உருவானது. அதற்கான சான்றுகள் ஆலயம் முழுக்க பரவலாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இருக்கும் தூண்களில் காணப்படும் சிற்பங்களை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் நிறைய இடங்களில் ஆடுகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதை காண முடியும். திருமஞ்சன கோபுரத்தில் நிறைய ஆடுகள் சிற்பம் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். அவையெல்லாம் இடைக்காடரை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.
திருவண்ணாமலை மலை உச்சியில் இருக்கும் அல்லிக்குளம் அருகேதான் இடைக்காடர் முதன் முதலில் தியானம் செய்த இடம் உள்ளது. ஆண்டுக்கு ஒருதடவை நாங்கள் அங்கு சென்று பூஜை நடத்தி வருவதை வழக்கத்தில் வைத்து உள்ளோம்.
திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கோசாலை அருகே இருக்கும் இடம்தான் இடைக்காடர் ஒளிசமாதி ஆன இடமாகும். அங்கு தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.
இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே திருவாதிரை தினத்தன்று பலரும் அங்கு வந்து வழிபடுவதை காணலாம். சமீப காலமாக திருவாதிரை நட்சத்திரகாரர்களும் இங்கு தேடி வந்து வழிபடுகிறார்கள்.
இடைக்காடரின் இந்த ஒளிசமாதியில் ஒரே ஒரு நெய்தீபம் ஏற்றி வைத்து மனமுருக வழிபட்டாலே நீங்கள் கேட்டதை எல்லாம் இடைக்காடர் நிச்சயம் தருவார். புரட்டாசி மாதம் திருவாதிரை தினத்தன்று இங்கு பூஜைகள் நடத்தும்போது ஜோதி தானாக எரியும் அதிசயம் நடைபெறும். அதோடு அன்றைய தினம் மழை பெய்யும். இவையெல்லாம் இடைக்காடர் இப்போதும் இருக்கிறார் என்பதற்கான உதாரணங்களாகும்.
திருவண்ணாமலை தளத்தில் இடைக்காடர் செய்திருக்கும் திருப்பணிகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கின்றன. கருவறை லிங்கம் 160 அடி ஆழத்துக்கு ஒரே தூணால் அமைந்துள்ளது. இதை ஏற்படுத்தியதே இடைக்காடர்தான்.
திருவண்ணாமலையில் மலையை சுற்றி கிரிவலம் வரும்போது இடுக்கு பிள்ளையார் கோவிலை பார்த்திருப்பீர்கள். இந்த இடுக்கு பிள்ளையார் ஏராளமானவர்களின் உடல் பிரச்சினையை தீர்த்து வருகிறார். இதை உருவாக்கியது இடைக்காடர் சித்தர்தான். இதுபோன்று ஏராளமானவற்றை இடைக்காடர் உருவாக்கி தந்துள்ளார்.
சித்தப்புருசர்கள் ஒரு இடத்தில் தோன்றி, இன்னொரு இடத்தில் தங்களை அடக்கி கொள்வார்கள். அந்த வகையில் இடைக்காட்டூரில் தோன்றிய இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் அடங்கி அருள் பாலித்து வருகிறார்.
இடைக்காடர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். எனவே இவரை முறைப்படி வழிபட்டால் ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்கள் கிட்டும். வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள் இடைக்காடரை வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி பலன் பெற முடியும். இடைக்காடருக்கு பிடித்தது பச்சை நிறமாகும். எனவே அவருக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபடலாம்.
இடைக்காடரை புதன்கிழமை வழிபட்டால் எளிதில் அவரின் அருளை பெற முடியும். அதுவும் அவர் ஒளிசமாதியாகி இருக்குமிடத்தில் புதன்கிழமை வழிபட்டால் பரிபூரண அருளை பெறலாம்.
பவுர்ணமி நாட்களில் இப்போதும் இடைக்காடர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். நமக்கு எதிரே வலது பக்கமாக அவர் வருவார். எனவே நாம் இடைக்காடரை நினைத்தபடி கிரிவலம் சென்றால் அவரை எந்த ரூபத்திலாவது பார்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இடைக்காடர் இதுவரை ஒரு கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீப தரிசனம் செய்துள்ளார் என்று குறிப்புகள் உள்ளன. அப்படியானால் இவர் எத்தனை தடவை கிரிவலம் சென்றிருப்பார் என்பதை யூகித்துக் கொள்ளலாம். அந்த சித்தப்புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம்மீது பட்டால் நாம் தோஷங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெற முடியும் என்பது ஐதீகம் ஆகும்.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த இடைக்காடரின் அருளை பெற சில குறிப்பிட்ட வழிபாடுகள் உள்ளன. திருவண்ணாமலை தளத்துக்கு செல்பவர்களில் 99 சதவீதம் பேருக்கு அந்த ரகசிய வழிபாடு இதுவரை தெரியாமலேயே உள்ளது. அதை தெரிந்து கொண்டு இடைக்காடரை வழிபட்டால் இமாலய அளவுக்கு பலன்கள் பெற முடியும்.

நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும்.
நாம் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்கள் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே தீர்த்து விடுவது நல்லது. இல்லையெனில் அந்த பாவங்கள் மூட்டையாக சேர்ந்து அடுத்தப்பிறவியிலும் தொடரக்கூடும்.
அதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. சரி.... இந்த ஜென்மத்து பாவங்களையும், கடந்த பிறவிகளில் செய்த பாவங்களையும் எப்படி போக்குவது? இதற்காக நிறைய பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மிக, மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. திருவண்ணாமலைக்குச் சென்று அருணாசலேஸ்வரரை சரண் அடைவதே அந்த எளிய வழி.
திருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட இயலாது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோரும் திருவண்ணாமலை வந்த பிறகே தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது.
அந்த வரலாறுகளை எல்லாம் சைவ எல்லப்ப நாவலர் தான் எழுதிய “அருணாசல புராணம்” நூலில் பாவம் தீர்த்த சருக்கம் எனும் பகுதியில் மிக விளக்கமாக எழுதியுள்ளார். அதை படித்தால்தான் திருவண்ணாமலை தலம் எந்த அளவுக்கு பாவம் போக்கும் எளிய தலமாக உள்ளது என்ற அதிசயமும் ரகசியமும் உங்களுக்குத் தெரியவரும்.
ஒரு தடவை பிரம்மனிடம் சென்ற அஷ்ட வசுக்கள், தாங்கள் தவம் இருந்து வரம் பெற்றது பற்றி பெருமையாகப் பேசினார்கள். அதைக் கேட்டதும் பிரம்மனுக்கு கோபம் வந்து விட்டது. “உங்களை துன்பம் பிடிக்கும்” என்று சாபமிட்டார். இதனால் வேதனை அடைந்த அஷ்ட வசுக்கள், தங்கள் மீதான இந்த சாபம் எப்போது தீரும் என்று கேட்டனர். அதற்கு பிரம்மா, “சிவபெருமானால் உங்கள் சாபம் தீரும்” என்றார்.
இதையடுத்து அஷ்ட வசுக்கள் கங்கை கரைக்கு சென்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவர்கள் முன்பு தோன்றிய சிவபெருமான், “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அஷ்ட வசுக்கள் தங்களுக்கு பிரம்மன் விதித்த சாபம் பற்றி கூறினார்கள். உடனே சிவபெருமான் அவர்களிடம், “திருவண்ணாமலைக்கு செல்லுங்கள். அங்குள்ள மலையின் மீது ஆளுக்கொரு பக்கமாக 8 திசைகளிலும் அமர்ந்து தவம் செய்யுங்கள். ஒருநாள் உங்களுக்கு அந்த மலை 8 முக வடிவத்துடன் காட்சித் தரும். அந்த காட்சியைப் பார்த்ததும் உங்கள் சாபம், பாவம் எல்லாம் தீர்ந்து விடும்” என்றார்.
அதன்படி அஷ்ட வசுக்கள் திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்து தங்களது சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டனர். பிரம்மனிடம், ஒரு தடவை இந்திரன் ஒரு வேண்டுகோள் வைத்தான். உலகில் உள்ள எல்லா அழகான பெண்களையும் ஒன்று சேர்த்து மிகவும் பேரழகு வாய்ந்த பெண்ணை படைத்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அதன்படி பேரழகு வாய்ந்த பெண்ணை பிரம்மன் படைத்தான். அந்த பெண்ணுக்கு “திலோத்தமை” என்று பெயரிட்டனர். அவளது அழகைப் பார்த்து, படைத்த பிரமமனுக்கே ஆசை வந்து விட்டது. காமத்தில் மூழ்கிய பிரம்மன் தனது அறிவை இழந்தார். திலோத்தமையை விரட்டினார். பிரம்மனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினாள். ஆனால் பிரம்மன் விடாமல் துரத்தினார். இதனால் திலோத்தமை வேறு, வேறு வடிவம் எடுத்து பிரம்மன் பார்வையில் இருந்து தப்பினாள்.
ஒரு கட்டத்தில் அவள் மான் வடிவம் எடுத்து துள்ளி, துள்ளி ஓடினாள். அவளை கண்டு கொண்ட பிரம்மா, கலைமான் வடிவம் எடுத்து பின் தொடர்ந்தார். இதையடுத்து திலோத்தமை கிளியாக மாறிப் பறந்தார். உடனே பிரம்மாவும் ஆண் கிளியாக மாறிப் பின்னே பறந்தார். இதனால் அவள் தவித்தாள். அடுத்து என்ன வடிவம் எடுப்பது என்று திலோத்தமை யோசித்தப் போது, அவள் கண்ணில் திருவண்ணாமலை மலை தெரிந்தது.
“அண்ணாமலையாரே.... காப்பாற்றும்” என்று தஞ்சம் அடைந்தாள். அடுத்த நிமிடம், மலை வெடித்தது. உள்ளே இருந்து ஈசன் வெளியில் வந்தார். வில் ஏந்திய கோலத்தில் வேடன் போன்று நின்ற அண்ணா மலையாரை சுற்றி வந்து திலோத்தமை சரண் அடைந்தாள். அவளை விரட்டி வந்த பிரம்மன், திடீரென தன் எதிரே ஈசன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தார்.
திலோத்தமை மீது கொண்ட மையல் அவரிடம் இருந்து நீங்கியது. அண்ணாமலையாரை வணங்கினார். அப்போது சிவபெருமான் அவரிடம், “நீ படைத்த பெண் மீது நீயே மையல் கொண்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். கற்ப கோடி காலம் தாண்டினாலும் அந்த பாவம் தீராது. ஆனாலும் இந்த மலையை வணங்கியதால் உன் பாவம் நீங்கியது” என்று அருளினார்.
இதே போன்றுதான் ஒரு தடவை விஷ்ணுவின் பாவத்தையும் அண்ணாமலையார் நீக்கினார். ஊழிக்காலம் முடிந்து இருள் நீங்கிய பிறகு அனைவரும் சிவபெருமான் ஒளியால் உறக்கத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் விஷ்ணு மட்டும் உறக்கத்தில் இருந்து எழாமல் இருந்தார். அவர் எழுந்து பிரம்மனை படைத்தால்தான் உலகைப் படைக்க முடியும். அதை செய்யாமல் தூங்கி விட்டதால், தன்னை பாவம் பிடித்து விட்டதாக விஷ்ணு கருதினார்.
அந்த பாவத்தை போக்குவதற்காக அண்ணாமலையாரை நினைத்தார். அடுத்த வினாடி வெண்ணிற எருதின் மீது சிவபெருமான் தோன்றினார். திருவண்ணாமலைக்கு சென்று வழிபடும்படி கூறினார்.அதை ஏற்று விஷ்ணு திருவண்ணாமலைக்கு வந்து பூஜைகள் செய்து தன் மீதான வினைகளைத் தீர்த்துக் கொண்டார்.
சந்திரன் 27 நட்சத்திரங்களையும் திருமணம் செய்தார். அந்த 27 பேரில் ரோகிணி மீது மட்டும் அவர் மிக, மிக விருப்பம் உடையவராக இருந்தார். இதனால் மற்ற 26 நட்சத்திரங்களும் வேதனை அடைந்தன. இது சந்திரனுக்கு பாவமாக மாறியது. அது மட்டுமின்றி தச்சன் கொடுத்த சாபமும் பலித்தது. அந்த சாபத்தால் சந்திரன் 15 நாள் வளர்வதாகவும், 15 நாள் தேய்வதாகவும் இருந்தான்.
திருவண்ணாமலைக்கு வந்து வழிபட்ட பிறகே தன் மீதான சாபத்தையும், பாவத்தையும் சந்திரனால் போக்கிக் கொள்ள முடிந்தது. ஒரு தடவை சூரிய பகவான் தனது தேரை திருவண்ணாமலை நேர் விண்ணில் செலுத்திக் கொண்டிருந்தான். அப்போது அண்ணாமலையார் கோபத்தில் மலையை வெடித்துக் கொண்டு வெளியில் வந்தார். இதனால் சூரிய பகவானின் தேர் எரிந்து சாம்பலானது.
அதன் பிறகே சூரிய பகவானுக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. ஈசன் தலை உச்சி மீது தேரை செலுத்தியதால் பாவம் ஏற்பட்டதாக உணர்ந்தான். திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் செய்து தனது பாவத்தை போக்கினார். அன்று முதல் சூரியன் அண்ணாமலையார் உச்சி மீது வருவதில்லை. சுற்றியே செல்கிறார்.
இப்படி திருவண்ணாமலை தலத்துக்கு வந்து தங்களது பாவத்தை தீர்த்துக் கொண்டவர்கள் ஏராளம். தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் மட்டுமல்ல சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். பதினென் சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் திருவண்ணாமலையில் வாழ்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். அதோடு இன்றும் அவர் அங்கேயே உறைந்துள்ளார்.

தப்பு செய்தால்... அண்ணாமலையார் நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை தலம் சிவபெருமானே விரும்பி வந்து அமர்ந்துள்ள தலமாகும். அங்குள்ள மலையை வெறும் கல்லும், மண்ணும், மரமுமாக பார்க்காதீர்கள். அந்த மலைதான் சிவபெருமான். இதை சிவபெருமானே பலருக்கு பல தடவை உணர்த்தி உள்ளார்.
உலகில் வேறு எந்த ஒரு மலைக்கும் இந்த சிறப்பு கிடையாது. ஈசன் உறைந்து இருப்பதாக கூறப்படும் இமயமலைக்கு கூட திருவண்ணாமலைக்கு நிகரான மகத்துவங்கள் இல்லை. எனவேதான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் அருள் ஒளி வீசி பக்தர்களை அழைத்து அரவணைக்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்ந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலைக்கு செல்பவர்களில் பலர் நல்லது செய்கிறார்கள். சிவனடியார்களுக்கு தானம் செய்கிறார்கள். புண்ணியத்தை சேகரித்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். சிவன் சொத்து குலம் நாசம் என்று சொல்வார்கள். என்றாலும் ஈசனுக்கு உரியதை தங்களுக்கு உரியதாக நினைத்து மனம் துணிந்து அதர்மமாக செயல்படுகிறார்கள்.
நீங்கள் திருவண்ணாமலையில் நல்லது செய்தால் அண்ணாமலையார் உங்களை அன்போடு அரும் மழையில் நனையச் செய்து, தமது காலடி நிழலில் ஓய்வு எடுக்கச் செய்யும் வகையில் ஆசி வழங்குவார். தப்பு செய்தாலோ... நிச்சயமாக தண்டனை தருவார். இதற்கு அருணாசல புராணத்தில் எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. சில உதாரணங்கள் அற்புதம் வாய்ந்தவை.
காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தவன் பிரதத்த மன்னன். இவனது பெயரை கேட்டாலே மற்ற நாட்டு மன்னர்கள் அலறினார்கள். அந்த அளவுக்கு அவன் படைபலம் மிக்கவனாக இருந்தான். ஒரு தடவை அவன் தென்நாடு நோக்கி யாத்திரை வந்தான். நிறைய ஆலயங்களுக்கு சென்றுவிட்டு திருவண்ணா மலை தலத்துக்கு வந்தான். அண்ணாமலை யாரை பார்த்ததும் அவன் மனம் அமைதி அடைந்தது. திருவண்ணாமலையில் தங்கியிருந்து விதம் விதமாக மலர்களை சமர்ப்பித்து அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வழிபட்டு வந்தான்.
ஒருநாள் அவன் அண்ணாமலையாரை வழிபட சென்றபோது ஆலயத்தில் பாட்டுபாடி ஆடும் இளம் தாசிப்பெண் ஒருத்தியும் வந்திருந்தாள். இனிமையான குரலில் அண்ணாமலையாரை புகழ்ந்து அவள் பாடிய பாடல் அனைவரையும் சொக்க வைத்தது. பிரதத்த மன்னனும் சொக்கி போனான். அந்த தாசிப் பெண்ணின் அழகும், அறிவும் பிரதத்த மன்னனின் மனதை பாடாய் படுத்தியது. அவளை தனது அந்தபுரத்தில் ஒருத்தியாக வைத்துக்கொள்ள அவன் ஆசைப்பட்டான். அந்த பெண்ணிடம் சென்று, “என்னோடு நீ காசிக்கு வந்துவிடு. உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன்” என்றான்.
அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் என்னை அழைப்பது நியாயமல்ல என்று அந்த பெண் மறுத்தாள். என்றாலும் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல மன்னன் முயற்சி செய்தான். அப்போது அண்ணாமலையார் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை மன்னனுக்கு அளித்தார். பிரதத்த மன்னனின் முகம் குரங்கு முகம்போல் மாறிப் போனது. ஆலயத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மன்னனை பார்த்து கேலி செய்தனர்.
செய்வதறியாது திகைத்து போன மன்னன் தனது தவறை உணர்ந்தான். அண்ணாமலையாருக்கு பணிவிடை செய்யும் பெண்ணை கவர முயன்றதுதான் தன் முக மாற்றத்துக்கு காரணம் என்பது தெரிந்து துடித்தான். அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த பொருளையும் திருவண்ணாமலையில் இருந்து எடுத்து செல்ல முடியாது என்ற உண்மையை அறிந்து கொண்டான்.
தனது தவறுக்கு பிராயசித்தம் தேட முடிவு செய்தான். மகான்களிடம் சென்று நடந்ததை கூறி, என்ன செய்தால் ஈசன் என்னை மன்னிப்பார் என்று கேட்டான். அவனுக்கு வழிபாடு வழிவகைகளை மகான்கள் சொல்லி கொடுத்தனர். அதன்படி தனது யானை படை, குதிரை படை அத்தனையையும் அவன் அண்ணாமலையார் கோவிலுக்கு ஒப்படைத்தான்.
அவனது தேர் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த தேரையும் அண்ணாமலையாருக்கு கொடுத்தான். பிறகு அண்ணாமலையாரே கதி என்று கோவிலிலேயே கிடந்தான். இடைவிடாமல் அண்ணாமலையாரை வணங்கினான். தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு அண்ணாமலை யாருக்கு மலர்மாலைகள் சாத்தி வழிபட்டான். அவனது உண்மையான பக்தியையும், வழிபாடுகளையும் கண்டு சிவபெருமான் இரக்கம் கொண்டார். மன்னனுக்கு நேரில் காட்சி கொடுத்தார். அதோடு அவனது குரங்கு முகத்தை மாற்றி பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.
அண்ணாமலையாரின் இந்த திருவிளையாடலால் மனம் நெகிழ்ந்த பிரதத்த மன்னன் அனைத்து பொருட்களையும் திருவண்ணாமலை ஆலயத்துக்கு காணிக்கை ஆக்கிவிட்டு காசிக்கு புறப்பட்டு சென்றான். அன்று முதல் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு சொந்தமான எந்த ஒரு பொருளை யார் களவாடினாலும் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்ற பயம் எல்லோரது மனதிலும் நிலை கொண்டது. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எமலோகத்துக்கு போய் அக்கினி குழியில் விழுந்து அவஸ்தை படுவார்கள் என்பது உலகுக்கு தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி இருள் நிறைந்த 28 கோடி நரகங்களிலும் விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு மறுபிறவி கிடைக்கும்போது பூமியில் புழுவாய் பிறப்பார்கள். அவர்களது தவறுகளுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் இத்தகைய தண்டனைதான் கிடைக்கும் என்று சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
திருவண்ணா மலை ஆலயத்தில் திருட வேண்டும் என்று மனதால் நினைத்தாலே போதுமாம், அவர்களை மரணம் விடாது துரத்தும். நிழல் போல தொடரும். திருவண்ணா மலைக்கு வரும் சிவ பக்தர்களுடைய பொருட்களை திருடினால் அவர்களுக்கு அந்த கணத்திலேயே தண்டனை உண்டு என்றும் அருணாசல புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.
சில சமயம் அண்ணாமலையார் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் கூட தவறு செய்வதுண்டு. அவர்களுக்கும் தண்டனை கொடுக்க அண்ணாமலையார் தவறியதில்லை. அதற்கும் ஒரு கதை இருக்கிறது.
புளகாதிபன் என்று ஒரு அசுரன் இருந்தான். அவனுக்கு நினைத்த நேரத்தில் நினைத்தபடி உருவம் எடுக்கும் சக்தி இருந்தது. ஒருநாள் அவன் புனுகுப் பூனையாக வடிவம் எடுத்தான்.திருவண்ணாமலை மலை மீது பூனை வடிவில் அவன் உலவினான். அப்போது மலை முழுக்க அந்த பூனையில் இருந்து புனுகு சிதறியது.
புனுகின் வாசனையால் அண்ணாமலை முழுவதும் வாசனை யாக மாறியது.
இதன் காரணமாக அண்ணா மலையாரின் அருளை புளகாதிபன் அசுரன் பெற்றான். இதனால் அவனுக்கு கூடுதல் பலம் கிடைத்தது. அந்த பலம் அவனுக்குள் ஆணவத்தை யும், அகந்தையை யும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் அவன் திருவண்ணா மலையில் இருந்த முனிவர் களையும், மகான் களையும் மிகவும் கஷ்டப் படுத்தினான். அவனது தொல்லை தாங்காமல் சிவனடியார்கள் கதறினார்கள்.
ஒருநாள் அந்த சிவனடியார்கள் ஈசனிடம் புளகாதிபன் அசுரன் செய்யும் தொல்லைகளை சொல்லி அழுதனர். இதனால் அண்ணாமலையார் இந்த பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தார்.
அருணாசல மலையில் புளகாதிபன் அசுரன் புனுகு பூனையாக அலைந்தபோது நிறைய புனுகை சிதற வைத்து வாசனை ஏற்படுத்தியதால் அவனை எளிதில் அழிக்க முடியாது. எனவே அவனுக்கு மோட்சம் கொடுத்து விடுகிறேன் என்று அண்ணாமலையார் தெரிவித்தார். புளகாதிபனை அழைத்த அண்ணாமலையார், “அசுரனே உனது பிறவி முடிந்தது. உனக்கு மோட்சம் அளிக்க உள்ளேன். எனவே உனது உயிரை விட்டுவிடு” என்றார். அதை கேட்ட அசுரன் ஒரே ஒரு வேண்டுகோளை அண்ணாமலையாரிடம் தெரிவித்தான். பூனைகளிடம் இருந்து கிடைக்கும் புனுகை அணிந்து அனைவருக்கும் அருள்புரிய வேண்டும். அதோடு உங்களுக்கு “புனுகணி ஈசன்” என்ற பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அண்ணாமலையார் அவனது கோரிக்கையை ஏற்றார். இதையடுத்து அந்த அசுரன் தனது உயிரை விட்டு அண்ணா மலையாரின் திருவடிகளை சென்று அடைந்தான். இதன் மூலம் தனக்கு பணிவிடை செய்பவர்கள் அசுரனாக இருந்தாலும் அவர்களுக்கு ஈசன் மோட்சம் அளிப்பது தெரிய வருகிறது.
அதுமட்டுல்ல திருவண்ணாமலையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அண்ணாமலையாரின் அருள் ஆசி கிடைக்கும். ஒரு தடவை திருவண்ணாமலை ஆலய பலிபீடத்தில் இருந்த நைவேத்தியத்தை ஒரு காக்கை எடுத்து உண்டது. அப்போது அந்த காக்கை தனது சிறகுகளை மிக வேகமாக அடித்தது.
இதன் காரணமாக பலிபீடத்தில் இருந்த அழுக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதை பார்த்த அண்ணாமலையார் மகிழ்ச்சி அடைந்தார். பலிபீடத்தை சுத்தப்படுத்திய காக்கைக்கு இந்திர பதவி வழங்கி அருள் புரிந்தார்.
மற்றொரு தடவை ஒரு சிலந்தி வலை பின்னியது. அதை பார்த்த அண்ணாமலையார் நமக்கு அந்த சிலந்தி ஆடை தயாரிப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். உடனே அந்த சிலந்தியை அரசனாக பிறக்க செய்து ஆசி வழங்கினார். அதுபோல ஒரு தடவை பெருச்சாளிக்கு மோட்சம் அண்ணாமலையார் வழங்கி அருள் புரிந்தார்.
திருவண்ணாமலையை வலம் வந்தாலே நம்மை பிடித்த பாவங்கள், தோஷங்கள் உடனடியாக விலகி விடும். இது திருவண்ணாமலை தலத்தில் எப்போது சிவபெருமான் அடிமுடி காண முடியாத அளவுக்கு அருள்பாலித்து மலையாக அமர்ந்தாரோ அன்று முதல் நடந்து வருகிறது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், சந்திரன், எண் வசுக்கள் உள்பட பலர் திருவண்ணாமலைக்கு வந்து தங்கள் பாவத்தை நிவர்த்தி செய்து இருக்கிறார்கள்.

×

X