search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168087"

    • இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன். இவர்கள் இரு அணிகளாக இருந்து வருகின்றனர்.
    • வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் கடும் மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தில் நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன். இவர்கள் இரு அணிகளாக இருந்து வருகின்றனர். இன்று காலை நகர்மன்ற கூட்டத்தில் நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணனுக்கும், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகர செயலாளர் மணிவண்ணன் நகர தி.மு.க. அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போதுஉஇதன் காரணமாக இரு தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் சாலைகளில் திரண்டனர்.

    மேலும் வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் கடும் மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உங்களுக்குள் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் இரு தரப்பினரும் அமைதியாக செல்லுங்கள் என தெரிவித்ததை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்  இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    • அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
    • ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 27).

    இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது விஜய் திருச்சியில் திரைப்படத்துறையில் கலை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் கடந்த 2 தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் திருவாரூர் நகர போலீசார் இன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விஜயை கைது செய்வதற்காக சபாபதி முதலியார் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

    அப்பொழுது வீட்டிலிருந்த விஜயை கைது செய்து திருவாரூர் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது கழிவறைக்கு செல்வதாக விஜய் கூறிவிட்டு சென்றார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த எலி கேக்கை (விஷம்) எடுத்து தின்றார்.

    அதனை அவர் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    இந்த நிலையில் எலி கேக்கை தின்றவுடன் வெளியில் வந்து போலீசாரிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. தற்பொழுது வேலை பார்த்து வருகிறேன்.

    ஏன் என் மீது வழக்கு போடுகிறீர்கள். அதனால் நான் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து போலீசார் விஜயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தரையில் அமர்ந்து வியாபாரம் செய்பவர்களுக்குள்ளே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் ,
    • அலுவலர் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.,

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் உழவர் சந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உழவர் சந்தையில் புதிய கடைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தற்போது வழக்கத்தை விட அதிக விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறி, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகின்ற னர்  இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு சாலை ஓரங்களில் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விற்பனை செய்து வந்த வியாபாரிகள் உழவர் சந்தையில் சிமெண்ட் தரை அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை தரையில் அமர்ந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

    இதன் மூலம் தற்போது உழவர் சந்தை வெளியில் சாலை ஓரங்களில் வியாபாரிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உழவர் சந்தையில் வாரந்தோறும் விவசாயிகள் குலுக்கல் முறையில் அவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரியின் அனுமதி அளித்து வந்தனர். இதில் மூன்று பழ வியாபாரிகளுக்கு நிரந்தரமாக மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் வியாபாரம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்ட கடைகளில் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்யாமல், வெளியில் தரையில் அமர்ந்து பழங்களை வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஏற்கனவே தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டது இது சம்பந்தமாக வேளாண் அலுவலர் மகா தேவனிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேளாண் அலுவலர் மகாதேவன் பழ வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் அதற்கு உடன்பாடு ஏற்படவில்லை.  இதனை தொடர்ந்து இன்று காலை திருப்பாதிரிப்புலியூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேளாண் அலுவலர் மகாதேவன் முன்னிலையில் 3 பழ வியாபாரிகளிடம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் அமர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது இரண்டு பழ வியாபாரிகள் போலீசார் கூறியது போல் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    ஆனால் ஒரு பழ வியாபாரி, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேளாண் அலுவலர் மகாதேவன் இது சம்பந்தமாக தங்கள் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் நபர்களுக்கும், அவர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் இதற்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • கடையடைப்பு போஸ்டரால் ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது
    • கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று உள்ளது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற வில்லை. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும். பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 24-ம் தேதி கடையடைப்பு நடைபெறுவதாகவும், இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிக்க உள்ளதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆலங்குடி கல்லாலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


    • ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சார்பில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
    • இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    கடந்த 24-ந்தேதி எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்வர்ராஜா ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இன்று (17-ந்தேதி) எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் ஒட்டியுள்ள போஸ்டரில், தலைவா... நம் கட்சித் தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள்.

    நாங்கள் கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்... என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

     கோத்தகிரி

     கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் விநாயகர் கோவில் முன்புறம் கரடி உலா வந்தது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவு ஊர்க்காவல் படையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 43) ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் கரடி துரத்தியதில் தவறி கீழே விழுந்து கிறிஸ்டோபர் காயமடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    • அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது.
    • சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது. இந்த நிலையில் துப்புரவு பெண் ஊழியர் ஒருவர் காசநோய் மையம் வளாகத்தில் சுத்தம் செய்வதற்காக ஓரத்தில் இருந்த துடைப்பத்தை எடுப்பதற்கு சென்றார்.

    அப்போது சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் துப்புரவு ஊழியர் அலறி அடித்து ஓடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் வன ஆர்வலர் செல்லாவிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வன ஆர்வலர் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த சிறிய அளவிலான நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் முழுவதும் செடிகளும் முட்பு தர்களும் அதிக அளவில் உள்ளன. ஆகையால் மருத்துவமனை நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிக அளவில் வரக்கூடிய தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏதேனும் பாம்புகள் உள்ளதா? என்பதனை கண்டறிந்து அதனை பிடிப்பதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • போக்குவரத்து அதிகமுள்ள ரோட்டில் அதிகாலை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தது.
    • ரோட்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

    அவினாசி  :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆட்டையாம்பாளையத்திலிந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அடுத்தடுத்து வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து ரோட்டில் விழுந்தது. போக்குவரத்து அதிகமுள்ள அந்த ரோட்டில் அதிகாலை நேரத்தில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ரோட்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம்.
    • போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ெரயில் நிலையம் அருகே முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு ஏராளமான புதர்களும் உள்ளன.

    இதில் ஒரு புதர் அருகே சிலர் சென்ற போது, அங்கு மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதைப் பார்த்த ரெயில்வே பணியாளர்கள், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் மார்த் தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 5 ஆண்டுளுக்கு முன்பு இறந்தவருடையதாக இருக்கலாம். இருப்பினும் அது யார்? யாரையாவது கொலை செய்து உடலை இங்கு வீசியிருக்கலாமா? அல்லது தற்கொலை செய்தவர்கள் எலும்புக் கூடா? என விசாரணை நடக்கிறது.இதன் முடிவில் தான் உண்மை தெரியவரும், என்றனர். மார்த்தாண்டம் ரெயில் நிலையம் பகுதியில் எலும்புக்கூடு சிக்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • அப்போது இருந்து இந்த வேப்ப மரத்தில் பால் வடிந்து வருகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ். செல்லும் வழியில் உள்ளது சின்னக்குளம்.

    இந்த குளக்கரையின் ஏரியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் கடந்த சில நாட்களாக பால் வடிந்து வந்தது.

    இதனால் வெள்ளோடு மற்றும் சுற்றியுள்ள பகுதி களை சேர்ந்த திரளான பொதுமக்கள் அங்கு சென்று அந்த வேப்ப மரத்திற்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறும் போது,

    கடந்த வாரம் வெள்ளோட்டில் உள்ள மாரியம்மன் கோவி லில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது இருந்து இந்த வேப்ப மரத்தில் பால் வடிந்து வருகிறது.

    இந்த மரத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு வரு கிறார்கள் என்றனர்.

    • தக்கலை - ராமன்பரம்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
    • உண்ணாவிரதம் இருக்கலாம் ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்த போலீசாருடன் கடும் வாக்கு வாதம்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் நகரட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் தக்கலை - ராமன்பரம்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிபட்டு வந்தனர், சாலையை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கவுன்சிலர் கீதா பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை.

    இந்த நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தக்கலை பஸ் நிலையம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாரதிய ஜனதாவினர் பேராட்டத்திற்கு திரண்ட னர். உண்ணாவிரதம் இருப்பவர் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் பந்தல் அனுமதி கிடையாது என தெரிவித்தனர்.

    இதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை அகற்ற பாரதிய ஜனதாவினர் மறுத்தனர். தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்துக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவர் குமாரதாஸ், மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், டாக்டர் சுகுமாரன், ஷண்முகம், துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.
    • பைக்கில் வைத்திருந்த லைெசன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் காவல் சரகம், தேத்தாகுடி வடக்கு கிராமம், புது ரோடு மரமில் எதிரில் மாட்டு தீவன கடை நடத்தி வருபவர் சண்முகம். இவரது மகன் வேலவன்.

    இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக எலக்ட்ரிக் பைக் வைத்து பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.

    பின்னர் வெளியில் செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை சாவி போட்டு ஸ்டார்ட் செய்தார்.

    அப்போது திடீரென பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இந்த தீ விபத்தில் பைக் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    மேலும் பைக்கில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்கள், லைெசன்ஸ் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×