என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 168225
நீங்கள் தேடியது "ஸ்விஃப்ட்"
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Swift
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 2018 ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்விஃப்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, ஸ்விஃப்ட் என்ட்ரி-லெவல் LXi மற்றும் LDi வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்விஃப்ட் காரின் ORVM காரின் நிறத்திலும், கதவு கைப்பிடிகள் மற்றும் வீல் கவர்கள் கருப்பு நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. காரின் உள்புறத்தில் சிங்கிள் DIN மியூசிக் சிஸ்டம், டூயல் முன்பக்க ஸ்பீக்கர்கள், பவர் வி்ண்டோக்கள், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பின்புற ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல் ஆறு வேரியன்ட்கள்: LXi, LDi, VXi, VDi, ZXi மற்றும் ZDi மற்றும் 14 டிரிம்களில் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் 1.2-லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் இன்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 115 என்.எம். டார்கியூ செயல்திறனும் டீசல் யூனிட் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் உடன் வருகிறது. எனினும், என்ட்ரி-லெவல் மாடல்களில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.
2018 ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல் முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் மாதம் 19,000 ஸ்விஃப்ட் யூனிட்கள் மாருதி சுசுகி விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் அறிமுகம் ஆனது முதல் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஸ்விஃப்ட் இருக்கிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X