search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168306"

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • தே.மு.தி.க. மூத்த நிர்வாகியான பார்த்தசாரதி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகியான பார்த்த சாரதி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பகுதி, பேரூர் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார்.
    • இந்த ஆலோசனை கூட்டம் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தே.மு.தி.க.வை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தே.மு.தி.க. தொடர்பான முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வருகிறார்.

    2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரேமலதா செயல்பட்டு வருகிறார்.

    இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    அவர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா மக்கள் பிரச்சினைகளுக்கு தே.மு.தி.க.வினர் தங்களது பகுதியில் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கை பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.

    கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர்கள் பலர் தே.மு.தி.க. செயல் தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இளைஞர் அணியை வழி நடத்தும் பொறுப்பை விஜயபிரபாகரனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக முடிவு எடுத்து தே.மு.தி.க. தலைமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தே.மு.தி.க. நகர, ஒன்றிய செயலாளர்களுடன் பகுதி, பேரூர் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த ஆலோசனை கூட்டம் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தொடர்ச்சியாக 3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் பின்னர் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக கைது நடவடிக்கையை எடுப்பது கண்டிக்கத்தக்கது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #Karunas #Vijayakant
    சென்னை:

    முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸ் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதுக்கு பல அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். தமிழக அரசு நடுநிலையாக  இருக்கவேண்டும்.  தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது! 

    என விஜய காந்த் பதிவிட்டுள்ளார்.
    உடற் பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது வீடு திரும்பி உள்ளார். #Vijayakanth #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதையடுத்து விஜயகாந்துக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விரைவில் அவர் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் தெரிவித்தது.

    இதே போல் விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் உருக்கமாக பேசிய வீடியோவை வெளியிட்டார். அதில், விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.

    அமெரிக்காவில் முதல்கட்ட சிகிச்சையை முடித்துவிட்டார். அடுத்த கட்ட சிகிச்சைக்காக 4 மாதத்தில் செல்ல உள்ளார். வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று கூறி இருந்தார்.

    இதற்கிடையே இன்று காலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுக்கும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.  #Vijayakanth #DMDK
    மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார். #OPS #ADMK #VijayaKanth #MKStalin
    கோவை:

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது உங்களது யூகம். அதற்கு பதில் கூற முடியாது.

    மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், முதல்வருடன் கலந்து ஆலோசித்து செல்வோம் 

    என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 
    ×