search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவேசம்"

    ரஷிய ராணுவ ஒத்துழைப்பில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் கூறியுள்ளார்
    பீஜிங்:

    ரஷிய நாட்டிடம் இருந்து சீனா அதிநவீன போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கி குவித்து உள்ளது.

    இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை அளித்திருக்கிறது. இதன் காரணமாக சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

    ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் நேற்று ஆவேச கருத்து வெளியிட்டார்.

    அப்போது அவர், “ரஷியாவிடம் இருந்து சீனா போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்க முடிவு எடுத்தது, வழக்கமான நடவடிக்கைதான். இறையாண்மை கொண்ட இரு நாடுகள் இடையேயான ஒரு ஒத்துழைப்பு செயல்தான். இதில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கூறினார்.

    மேலும், “அமெரிக்காவின் அணுகுமுறையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளின் ஒரு அப்பட்டமான மீறல் ஆகும். ஒரு மேலாதிக்கத்தின் முழுமையான வெளிப்பாடும் ஆகும். இரு நாடுகள் மற்றும் இரு ராணுவங்கள் இடையேயான உறவுகளில் கடுமையான மீறலும்கூட” எனவும் தெரிவித்தார். 
    ×