search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.பி.எஸ்."

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் யுடிராக் என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஜி.பி.எஸ். பயன்பாட்டிற்கு வருகிறது. #GPS

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது. யுடிராக் என பெயரிடப்பட்டுள்ள இந்திய ஜி.பி.எஸ். சேவை இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பில் இருக்கும் விவரங்களை கொண்டு இயங்குகிறது.

    யுடிராக் ஜி.பி.எஸ். சேவை முழுக்க முழுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்களின் திட்டமிடலில் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

    இந்தியாவுக்கென சொந்தமாக ஜி.பி.எஸ். சேவை துவங்குவதற்கு முதல் காரணம் அமெரிக்கா தான் எனலாம். கார்கில் போரின் போது குறிப்பிட்ட பகுதியின் ஜி.பி.எஸ். விவரங்களை வழங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. அமெரிக்கா இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், இந்தியாவுக்கென சொந்தமான ஜி.பி.எஸ். சேவை துவங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.



    இதுவரை பல்வேறு ஜி.பி.எஸ். செயலிகள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜி.பி.எஸ். அமைப்புகளை சார்ந்து இயங்குகிறது. இந்தியாவின் யுடிராக் சேவையை கொண்டு ராணுவம் மற்றும் கடற்சார் சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு இருவித நேவிகேஷன் சேவைகளை வழங்குகிறது. ஒன்று அனைவருக்குமான ஸ்டான்டர்டு பொசிஷனிங் சேவைகள் மற்றொன்று என்க்ரிப்ட், தடை செய்யப்பட்ட சேவைகள் அனுமதி பெற்ற பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு L5 மற்றும் S ஃப்ரீக்வன்சி பேன்ட்களில் வேலை செய்கிறது. யுடிராக் சேவை மிகவும் துல்லியமாக வழிகாட்டும் என்பதால் பயணிகள் மற்றும் ஹைக்கர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அமைப்பு ரஷயாவின் GLONASS அமைப்புடன் இணையும் வசதி கொண்டுள்ளது.
    ×