search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஐஜி"

    திருமலை அருகே போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இன்ஸ்பெக்டரை டிஐஜி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரு பகுதியை சேர்ந்தவர் சம்யுக்தா (வயது 27). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை நிலவியது. இதனால் கணவரின் குடும்பத்தார் மீது பீலேரு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சம்யுக்தா புகார் அளித்தார்.

    அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் தேஜோமூர்த்தி இருந்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் இளம்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி கொண்டார்.

    அதன் பின்பு இளம்பெண்ணுக்கு போனில் பேசிய இன்ஸ்பெக்டர் உனக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று செல்போனில் பேசி வந்தார். வாட்ஸ்- அப்பிலும் தகவல் அனுப்பியுள்ளார். வீட்டுக்கும் சென்று அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட தேஜோமூர்த்தி திருமலை பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். அதனால் எனக்கு இங்கு ரூம் கொடுத்து உள்ளனர். உடனே புறப்பட்டு திருமலைக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார்.

    இன்ஸ்பெக்டரின் தொல்லை அதிகரித்ததால் ஆவேசமடைந்த சம்யுக்தா திருப்பதிக்கு வந்து டி.ஐ.ஜி. சீனிவாசராவை சந்தித்து இன்ஸ்பெக்டர் செல்போனில் பேசிய ஆடியோ மற்றும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவலை கொடுத்து புகார் செய்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. சீனிவாசராவ் இன்ஸ்பெக்டர் தேஜோ மூர்த்தியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார். #tamilnews
    ×