என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளிகள்"
- 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார்.
- அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.
புதுடெல்லி:
மக்களவையில் நேற்று பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி துர்காதாஸ் உய்கி பதிலளித்தார். அப்போது தொடக்கப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடந்த 2023-24-ம் கல்வி ஆண்டில் குறைந்திருப்பதாக கூறினார்.
குறிப்பாக 2021-22-ல் 103.4 சதவீதமாக இருந்த மொத்த சேர்க்கை விகிதம், 2023-24-ல் 97.1 ஆக சரிந்திருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் ஒப்பீட்டளவில் அனைத்து சமூக மாணவர்களும் தொடக்கப்பள்ளிகளில் சேரும் விகிதம் 100.13 சதவீதத்தில் (2021-22) இருந்து 91.7 (2023-24) ஆக குறைந்திருக்கிறது.
உயர்நிலைப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர் சேர்க்கை 78.1 சதவீதத்தில் இருந்து 76.9 ஆகவும், அனைத்து பிரிவினரின் விகிதம் 79.56-ல் இருந்து 77.4 ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் பழங்குடியினர் மாணவர் சேர்க்கை விகிதம் 52-ல் இருந்து 48.7 ஆகவும், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கை 57.56-ல் இருந்து 56.2 ஆகவும் சரிந்திருக்கிறது.
முன்னதாக பள்ளிகளில் சமீபத்திய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி மக்களவையில் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக மோடி அரசை குறை கூறியிருந்த அவர், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் பார்ப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.
2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் இத்திரைப்படம் குழந்தைகள் தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகுதி வாரியாக பிரித்து இந்த வார இறுதி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காணாமல் போன சிட்டுக்குருவியை, இரு குழந்தைகள் தேடும் போது அவர்களின் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து இப்படம் விளக்குவதாக உள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட வேண்டும்.
திருப்பூர் :
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து அரையாண்டு தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். பொது வினாத்தாள் பாணியில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில் பாடங்களை முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியிருந்தால், உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியை தழுவியோருக்கு பாடங்களை பகுதி பகுதியாக பிரித்து, சிறு சிறு தேர்வுகள் நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அரையாண்டு தேர்வு நெருங்கியுள்ள நிலையில் பாடத்திட்ட அழுத்தம் காரணமாக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், படிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். புளூ பிரின்ட் வெளியிடாததால் முக்கிய பகுதிகளை மட்டும் படிக்க வைக்க முடிவதில்லை. குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
- ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
- பள்ளிகள் திறப்பு குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை:
தொடர் மழை பெய்தபோது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை விடப்பட்டது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அவ்வகையில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (டிசம்பர் 3) வேலை நாள் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
- திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
- திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் 2021 - 22ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக 5 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.இதற்கான பாராட்டு விழா தமிழக அரசின் கல்வித்துறை ஆணையரகம் சார்பில் சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உத்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி, கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மெரின் மற்றும் எலையமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 2023 - 24-ம் நிதியாண்டிற்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 5-ந் தேதி தொடக்கம்
- தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்
நாகர்கோவில்:
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 1 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடந்து முடிந்தது. பின்னர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி இன்று (2-ந்தேதி) முதல் 4 -ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ந்தேதி திறக்கப்படும். மேலும் இந்த நாட்களில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் இடம்பெறாதவர்கள் பள்ளிகளில் உள்ள அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நீட்டிப்பு மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகளுக்கான விடுமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே இன்று (2-ந்தேதி) அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
- தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன.
- அடுத்த வாரம் இறுதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் 11, 12 பொதுத்தேர்வு நடந்து முடிந்து உள்ளன. அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 20-ந் தேதி முடிகிறது.
1 முதல் 9-ம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடியும் நிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 18-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு தொடங்குகிறது.
அரசு, உதவிபெறும் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 28-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் வகுப்பு வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது.
தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன.
அடுத்த வாரம் இறுதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டப்படி எவ்வித மாற்றமும் இல்லாமல் இறுதித்தேர்வு நடைபெறுகிறது.
அரசு பள்ளிகளுக்கு 28-ந்தேதி கடைசி வேலை நாளாகும். 29-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ந்தேதி திறக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. கோடை வெப்பம் அப்போது அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளி திறப்பதை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு 220 வேலை நாட்கள் இந்த ஆண்டில் பள்ளிகள் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.
- நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 249 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,922 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.
இதற்காக இணையதளம் வழியாக 4,963 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதியில் செயல்படும் 249 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதன்மைக்கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் இணையதளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் 24-ந் தேதி வெளியிடப்படும். இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.
2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.
- பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.
பணகுடி:
தமிழகம் முழுவதும் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிவடைய உள்ள தருவாயில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகர் மற்றும் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறப்பு தேதி மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வாட்ஸ்-அப் மூலமாக தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.
வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள மத்திய அரசு இதுதொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது. ஆனால் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் அந்த நோட்டுக்களை வாங்க மறுப்பதால் பெரும்பாலானவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்கப்படாது என்ற நிர்வாகங்களின் அறிவிப்பால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
- நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடலூர்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.
மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு
- பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில், ஜூன்.11-
நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா கோவிலுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை எனில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். காலையில் இருந்து மாலை வரை கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார் கள். பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். மேலும் பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர்.
மேலும் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் பெரும்பாலான பெற்றோர் பள்ளி செல்லும் தங்களது குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாணவ-மாணவிகளும் கோவிலுக்கு வந்து நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டி சாமி கும்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.