search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர்"

    கலைஞரின் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துக் கொண்ட வெற்றிமாறன், மக்களிடத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டு சென்ற பெரிய படைப்பாளி கலைஞர் என்று கூறியுள்ளார். #Vetrimaran
    தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். 

    இதில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது:-

    கலைஞரின் கடின உழைப்பு எப்போதுமே நாங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் வி‌ஷயம். கலைஞரின் தொடக்க காலத்தில் சில படங்களில் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த சூழலில் ஏற்கனவே 20 நிமிடம் எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு வசனம் எழுத சொன்னார்கள்.

    எம்.ஜி.ஆர் நடித்த மருத நாட்டு இளவரசி படம் தான் அது. இந்தியாவின் முதல் சாகச வீரன் பற்றிய படம். அங்கு இருந்து தான் எம்ஜிஆர் தனது சினிமா வாழ்க்கையை தொடங்குகிறார். கலைஞருக்கு முன்பு சினிமா நேரடியாக மக்களிடம் பேச முடியாத சூழலில் இருந்தது.

    அந்த சூழலில் சினிமாவின் மூலம் மக்களிடத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டு சென்ற பெரிய படைப்பாளி அவர். சினிமாவை ஆயுதமாக பயன்படுத்தி மக்களை ஒடுக்கு முறையில் இருந்து மீட்டெடுத்தது கலைஞர். சினிமாவில் தற்போது மீண்டும் ஒடுக்கப்பட்டவர்கள் குரல் கேட்க தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி செலுத்தி, மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். #கலைஞர் #DMK #RIPKarunanidhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலில் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    அவ்வகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 7.45 மணியளவில் ராஜாஜி அரங்கத்திற்கு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கனிமொழி உடனிருந்தார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்ல இரங்கல் தெரிவித்துள்ளார். #கலைஞர் #RIPKarunanidhi
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இருக்கும் விஜயகாந்த் கருணாநிதி மரணம் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் கருப்பு சட்டை அணிந்து வீடியோ மூலம் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் தனது வீடியோ இரங்கல் செய்தியில் ‘‘கருணாநிதி மறைந்தார் என்பது என்னால் நம்ப முடியவில்லை. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். என்னுடைய நினைவுகளும், எண்ணங்களும் கருணாநிதியுடனேயே இருக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். #RIPKalaignar #கலைஞர் #DMK
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின் சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

    காலை 6.45 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜர் மற்றும் சபாநாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினார்கள். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #TTVDinakaran
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்த்ன் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது ஆதரவாளர்களும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK ##TTVDinakaran
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Rajinikanth
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் லதா ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Rajinikanth
    திமுக தலைவர் கருணாநிதி உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர். அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், சிஐடி காலனி இல்லத்தில் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பிறகு திமுக தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் சென்றனர். ராஜாஜி அரங்கத்தை அடைந்த கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சி.ஐ.டி காலனி இல்லத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் கட்சி தலைவருமான ப.சிதம்பரம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Chidambaram
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர். அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், சிஐடி காலனி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரசின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Chidambaram
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உலக பத்திரிகைகள் பலதும் செய்திகள் வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளன. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின், சிஐடி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு உலகின் முன்னணி பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் செய்திக்ள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 5 முறை முதல்வரான அவர் 19 ஆண்டுகள் ஆட்சி செய்ததை பாராட்டியுள்ளனர்.

    இதேபோல், பிரிட்டனை சேர்ந்த கார்டியன் டைம்ஸ், கல்ப் டைம்ஸ் மற்றும் பிபிசியில் கருணாநிதியின் மறைவு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் டான் பத்திரிகையிலும் கருணாநிதி மறைவு குறித்து செய்தி வெளியாகியுள்ளது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #ARRahman
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்
    .
    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறுகையில், பூமியை விட்டு நீங்கள் சென்றிருக்கலாம். ஆனால், தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலைத்திருக்கும் எனபதிவிட்டுள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #ARRahman
    திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Kamalhaasan
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    கருணாநிதி உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு சிஐடி காலனி வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் ஆம்புலன்சின் முன்னும் பின்னும் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் நடந்து சென்றனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா இருந்தபோது கழகம் காத்திட இருந்த தம்பிகள் எம்.ஜி.ஆரும் கலைஞரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கத்துக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர். இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார் என தெரிவித்துள்ளார். #karunandhi #RIPKarunanidhi #கலைஞர் #DMK #Kamalhaasan
    ×