search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுகம்"

    • சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
    • குளச்சல் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் “கொழி சாளை” மீன்கள் பிடிப்பட்டிருந்தன.

    கன்னியாகுமரி :

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள். கடந்த இரண்டு மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கழிந்த வாரம் முதல் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர்.

    குளச்சல் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் "கொழி சாளை" மீன்கள் பிடிப்பட்டிருந்தன.

    இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில் மீன்களின் விலையும் கணிசமாக குறைந்த நிலையில் இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் ஆர்வம் காட்டி குவிந்தனர்.

    ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக ரூ.50 முதல் ரூ.60 வரை விலை போகும் நிலையில் இன்று ரூ.20க்கு விலை போனது.

    • போதை பழக்கத்தை தட்டிக் கேட்டதால் மகன் கொலை
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெற்றோர் புகார்

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கீழ முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அல்மாண்ட்ஸ். இவரது மனைவி சகாயராணி. இவர்களது மகன் நிக்சன் (வயது 29).

    இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முட்டம் துறைமுகத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வெள்ளி சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக அல்மாண்ட்ஸ், அவரது மனைவி சகாயராணி ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு நிக்சன் என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி எனது மகன் வீட்டில் இருந்தபோது அவரை ஒரு சிலர் அழைத்து சென்றனர். பின்னர் அவர் இரவு வீட்டிற்கு வரவில்லை.

    மறுநாள் காலையில் முட்டம் துறைமுகத்தில் எனது மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். எங்கள் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தோம். இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    போதை பழக்கத்தை தட்டி கேட்ட காரணத்திற்காக அவரை கொலை செய்து விட்டனர். அதற்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

    வடகிழக்கு மாநிலங்களுக்கு எளிதாக சரக்குகளை கொண்டு செல்வதற்காக வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #Bangladesh #India
    டாக்கா:

    நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள 7 மாநிலங்களை இணைக்க ஒரே ஒரு தரை வழி மட்டுமே உள்ளது. இதனால், அங்குள்ள திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.

    இந்த நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா துறைமுகங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம், இந்திய துறைமுகங்களில் இருந்து மேற்கண்ட இரண்டு துறைமுகங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சாலைகள், நீர்வழி மூலம் எளிதாக இந்திய பகுதிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    இந்த ஒப்பந்தத்தின் வரைவுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கும் இந்த துறைமுகம் மூலம் சரக்குகள் அனுப்பலாம் எனவும் வரைவில் கூறப்பட்டுள்ளது. 
    ×