என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 170253
நீங்கள் தேடியது "லல்லு"
தளபதியுடன் திரையில் தோன்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, சர்கார் படத்தில் தன்னை நடிக்க வைத்த ஏ.ஆர்.முருகதாசுக்கு நன்றி என்று நடிகர் லல்லு தெரிவித்துள்ளார். #Sarkar #Vijay
கவுதம் கார்த்திக்கின் `ரங்கூன்' மற்றும் `8 தோட்டாக்கள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் லல்லு. இவர் தற்போது விஜய்யின் `சர்கார்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சர்கார் படத்தில் நடித்தது குறித்து லல்லு அவரது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
`சர்கார் படத்தில் அற்புதமான வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு மிகப்பெரிய நன்றிகள். தளபதியுடன் திரையில் இணைந்து நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது கனவு நிறைவேறிவிட்டது.' என்று தெரிவித்துள்ளார்.
A big thanks to @ARMurugadoss sir for giving me an amazing opportunity to work in sarkar. Never did I imagine I'd share screen space with my #Thalapathy❤️
— Lallu (@lalluTweets) September 15, 2018
It's a dream come true moment for me.#Sarkar#Thalapathy62pic.twitter.com/4t9FbLMn5J
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் லாஸ் வேகாஸ் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாக இருக்கிறது.
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #Lallu
SARKAR Thalapathy 62 Vijay 62 Varalakshmi Sarathkumar Keerthy Suresh AR Rahman Yogi Babu Vijay AR Murugadoss Sun pictures girish gangatharan Lyricist Vivek Lallu விஜய் விஜய் 62 ஏ.ஆர்.முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தளபதி 62 கிரீஸ் கங்காதரன் ஏ.ஆர்.ரஹ்மான் யோகி பாபு ஸ்ரீகர் பிரசாத் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி தளபதி 62 சர்கார் பாடலாசிரியர் விவேக் லல்லு தளபதி 62 தளபதி 62
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X