search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று சிஆர்பிஎப் வேன் மோதி போராட்டம் நடத்திய இளைஞர் பலியான விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், சிஆர்பிஎப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #CRPF #Kashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று இளைஞர்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் எழுப்பினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது இளைஞர்கள் கல் எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது சிஆர்பிஎப் வேன் ஒன்று மோதியதில் ஒரு இளைஞர் பலியானார்.

    மேலும், ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். வீரர்கள் தங்களை தற்காத்து கொள்ளவே வாகனத்தை திருப்பினர். ஆனால், அதில் இளைஞர்கள் சிக்கிவிட்டதாக சிஆர்பிஎப் விளக்கமளித்திருந்தது.

    இந்நிலையில், காஷ்மீர் போலீசார் சிஆர்பிஎப் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
    காஷ்மீரில் இளைஞரை ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்று பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ மேஜர், ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைய முயன்று ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஓட்டல் நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை அடுத்து, கோகோய் மற்றும் அவரது டிரைவர் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

    பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், கோகோயை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
    காங்கிரஸ் - மஜத கூட்டணி புனிதமில்லாதது என பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், காஷ்மிரில் பாஜக-பிடிபி கூட்டணி மட்டும் புனிதமானதா? என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். #OmarAbdullah
    ஸ்ரீநகர்:

    கர்நாடகாவில் போதிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் எடியூரப்பா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணியை புனிதமில்லாத கூட்டணி என பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “எப்போதும் பாஜகவில் இருந்து ஒருவர் காங்கிரஸ் - மஜத கூட்டணி புனிதமில்லாதது என அழைக்கிறார். காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி எப்படிப்பட்டது என அவர்கள் (பாஜக) விளக்கமளித்தால் முன்னே கூறியது சரியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார். #OmarAbdullah
    ரமலான் மாதத்தை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #KashmirCeaseFire
    புதுடெல்லி:

    நாளை முதல் ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள் (தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை) எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஜம்மு காஷ்மீரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிஜ்பெகாரா பகுதியில், போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பிலால் அகமது என்ற காவல்துறை அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து, பயங்கரவாதிகளை கண்டறிந்து களையெடுக்க, அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #militantattack #policemanshoted
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார். #CeaseFireViolation #BSF #SambaSector
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் அருகே எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை தாக்கியது. துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை காவலர் தேவேந்திர குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×