search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்கா"

    • உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும்.
    • 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது.

    ராயபுரம்:

    கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் புகையிலை விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளிலும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வடசென்ைன பகுதியில் குட்கா, புகையிலை விற்பனை தடையை மீறி அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய வளா கத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வியாபாரி களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தர வின் படி வண்ணாரப் பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலை மையில் நடைபெற்றது.

    இதில் வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை போன்ற பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை, டீக்கடை, பழ வியாபாரிகள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது போலீசார் பேசும்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.தடையை மீறி விற்பனை செய்தால் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டு, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும். மேலும் கைது நடவடிக்கை எடுக்கப் படும்.

    பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது மக்களுக்கு போலீசாரின் உதவி செல்போன் எண்கள் ஆங்காங்கே வைக்கப்படும். ஏற்கனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேறு தொழில் செய்யவும் அல்லது வியா பாரம் செய்ய உதவி தேவைப்பட்டால் போலீசார் சார்பில் உதவி செய்து தரப்படும் என்று தெரி வித்தனர்.

    பின்னர் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நிருபர்களிடம் கூறும்போது, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, பழக்கடை போன்ற கடைக ளில் கஞ்சா, மாவா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது இதுவரை 42 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் 51 பேர் கைதாகி உள்ளனர்.

    இதில் 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கைது நடவடிக்கை யை தொடர்ந்து குண்டர் சட்டம் பாயும் என்றார்.

    • பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    • தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

    பூதப்பாண்டி :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன் களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்வது டன் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை காட்டுப்பு தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஓரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தினர். அப் போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காரை சோதனை செய்தனர்.

    அப்போது காரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது தெரிய வந்தது. காரில் மூட்டை மூட்டையாக இருந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 300 கிலோ குட்கா புகையிலை சிக்கியது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் காட்டுப்புதூர் புது காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 40) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் காற்றாடி விளையை சேர்ந்த ஜெயக்கு மார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கப்படுகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை மாநகர போலீசார் கடந்த 25-ந்தேதி முதல் 31-ந்தேதி 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க நடவடிக்வகை எடுத்தனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 743.9 கிலோ மாவா, பணம் ரூ.28,720/-, 1 செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    புகையிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வாரணவாசி பகுதியில் வாரணவாசி பகுதியில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
    • 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படிர் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து திருமானூர் ஒன்றியம் வாரணவாசி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பழனிச்சாமி, ராமசாமி, ரத்தினம் மற்றும் கீழப்பழுவூர் போலீசார் கலந்துகொண்டனர்.22 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பள்ளி அருகே 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 5 கிலோ அளவில் விற்பனை செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டுர் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் 2 கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தி உள்ளார்.

    • சொகுசு காரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாரை இடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோத னை சாவடி உள்ளது. இங்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ்சார் தேவர் ஜெயந்தியை முன்னி ட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். ஆய்வாளர் கவுதம் விஜி தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.

    அப்போது சென்னை பதிவு எண் கொண்ட சொகு சு கார் வேகமாக வந்தது அதை நிறுத்த சென்ற சார்பு ஆய்வாளர் கவுதம்விஜி மீது இடித்த விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை அறிந்த மற்ற போலீசார் அந்த காரை விரட்டி சென்ற னர். பின்னர் அந்த காரை சாத்தூரில் பிடித்து. போலீசார் சோதனை செய்த பொழுது காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பி லான குட்காவை கடத்தி சென்றது தெரியவந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ் தானை சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் பயன் படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
    • ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போதுபுதுப்பேட்டை அடுத்த கொத்தி கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டகுட்கா விற்பனை செய்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து ஜோதிலட்சுமி (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான பாக்கெட்குட்காக்களை பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று சிங்காரப்பேட்டை புறவழி சாலை நாயக்கனூர் பிரிவு ரோட்டில் அதிகாலை வந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர 15 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்காரப்பேட்டை போலீசார் காரை சோதனை செய்யும் போது அந்த காரில் தடை செய்யப்பட்ட குட்கா 12 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து நடந்த உடனே வண்டி ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விபத்துக்குள்ளான காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஊத்தங்கரையில் உள்ள பள்ளி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊத்தங்கரை வழியாக அடிக்கடி இதுபோன்று குட்கா கடத்தும் வாகனங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் வண்டலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர், சோழவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் படி மீஞ்சூரில் உள்ள கடைகளுக்கு குட்கா பதுக்கி விற்ற ஜெகன், வண்ணிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    • இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரா அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீ சார் அறிவழகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைகடலி மெயின் ரோட்டில் உள்ள ஒருவரின் கடைக்கு கடத்தியது தெரியவந்தது .

    இதனிடையே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, மணிமாறன் மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து கடத்தி வந்த தடை செய்யப்பட்ட 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து பெரம்பூர் காவல் துறையினரிடம் குற்றவா ளிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஆண்டிமடத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • போலீசாரின் திடீர் ஆய்வில் சிக்கியது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதிகளில் பெட்டிக்கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பதாக ஆண்டிமடம் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீரென கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு தடை செய்த ஹான்ஸ் 50 பண்டல் கூல் லீவ் 62 பண்டல் விமல் சைடு பாக்கு உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பொருளின் மதிப்பீடு சுமார் ரூ.40 ஆயிரத்திற்கு மேலாக இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் டவுன் பழைய வாணியம்பாடி ரோட்டில் உள்ள பெட்டி கடையில், முகமது நபிஸ் (வயது 42) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×