search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குணதிலகா"

    ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த தனுஷ்கா குணதிலகா முதுகு வலி காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்காக இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலகா இடம் பிடித்திருந்தார். இவர் முகுது வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.



    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த அவர் உடனடியாக இலங்கை திரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஷெஹன் ஜெயசூர்யா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் முன்னணி வீரரான தினேஷ் சண்டிமல் கைவிரல் முறிவு காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தனுஷ்கா குணதிலகாவிற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. #Gunathilaka
    இலங்கை அணியின் இடது கை பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இன்றுடன் முடிவடைந்த தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விளையாட்டின் தேசிய ஆட்சிக்குழு சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு தடைவிதித்துள்ளது.



    எதற்காக தடைவிதிக்கப்பட்டது என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால், அவருடைய நண்பர் ஒருவர் ஹோட்டல் அறையில் குணதிலகா முன்பு வைத்து நர்வே பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறியதால் இந்த தடைவிதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
    கொழும்பில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 365 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. #SLvSA #Karunaratne
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை, முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் அதிகபட்சமாக 9 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அகிலா தனஞ்ஜெயா (5 விக்கெட்), தில்ருவான் பெரேரா (4) ஆகியோரின் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது.

    214 ரன்கள் முன்னிலைப் பெற்றாலும் பாலோ-ஆன் கொடுக்காமல் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் அசைரதம் அடித்த தொடக்க வீரர்களான குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் அடித்தனர்.

    குணதிலகா 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 18 ரன்னில் வெளியேறினார்.


    குணதிலகா

    4-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் 2-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 365 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 3-வது நாளில் எவ்வளவு பேட்டிங் செய்ய இயலுமோ, அவ்வளவு நேரம் பேட்டிங் செய்யும். சுழற்பந்து வீச்சுக்க சாதகமான இந்த ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்கா 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இயலாத காரியம். இதனால் தென்ஆப்பிரிக்கா ஒயிட்வாஷ் ஆகிறது. #Gunathilaka #Karunaratne
    ×