search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதஞ்சலி"

    பதஞ்சலி நிறுவனம் சார்பில் ரூ.1000 கோடிக்கு பசும்பால் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனை 1 லட்சம் விவசாயிகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதாகவும் பாபா ராம்தேவ் கூறினார். #BabaRamdev #Patanjali
    புவனேஸ்வர்:

    யோகா குரு பாபா ராம் தேவ் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதஞ்சலி ஆய்வுக்கூடத்தில் ஆயுர்வேத பொருட்களுடன், வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறார்.

    நாடு முழுவதும் பதஞ்சலி பொருட்களை நேரடியாகவும், டீலர்கள் மூலமும் விற்பனை செய்து வருகிறார். மற்ற சர்வதேச கம்பெனிகளுடன் போட்டி போடும் அளவுக்கு பதஞ்சலி பொருட்கள் சந்தையில் பேசப்பட்டு வருகிறது.

    அடுத்து அன்றாடம் உபயோகப்படுத்தும் பால் பொருட்கள் விற்பனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே பசு நெய்யை பதஞ்சலி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து பசும்பால், தயிர், வெண்ணெய், பால் பிஸ்கட், பால் நூடுல்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

    சந்தையில் உள்ள மற்ற பால்கள் போல் பதஞ்சலி பசும்பாலும் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. முதல்கட்டமாக டெல்லி மற்றும் புறநகர் பகுதி ராஜஸ்தான், அரியானா, மராட்டிய மாநிலங்களில் பசும்பால் விற்பனைக்கு வருகிறது.



    இதுபற்றி ராம்தேவ் கூறுகையில், ‘‘பதஞ்சலி நிறுவனம் முதலில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பசும்பால் விற்பனை செய்யும். தொடர்ந்து 10 லட்சம் லிட்டர் வரை பசும்பால் விற்பனை செய்யப்படும்’’ என்றார்.

    2020-ம் ஆண்டில் ரூ.1000 கோடி அளவுக்கு பசும்பால் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக 1 லட்சம் விவசாயிகளுடன் இணைந்து இது செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    பதஞ்சலி பாக்கெட் பால் லிட்டர் ரூ.40-க்கு கிடைக்கும். இதுமற்ற பால்களைவிட ரூ.2 குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #BabaRamdev #Patanjali

    ×