search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகாகோ"

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சிகாகோ செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்த கருத்து உண்மையல்ல என வெளியுறவு துறை அறிவித்துள்ளது. #MamataBanarjee #Chicago #MEA
    புதுடெல்லி:

    சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்று உரையாற்றி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பேலூர் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எனது சிகாகோ பயணம் ரத்து செய்யப்பட்டதில் மத்திய அரசின் சதி அடங்கியிருக்கிறது என தெரிவித்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சிகாகோ செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்த கருத்து உண்மையல்ல என வெளியுறவு துறை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, வெளியுறவு துறை செயலாளர் ரவீஷ்குமார் கூறுகையில், மம்தா பானர்ஜியிடம் இருந்து சிகாகோ செல்வதற்கான எந்த வேண்டுகோளையும் பெறவில்லை. அவர் சிகாகோ செல்ல  அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார். #MamataBanarjee #Chicago #MEA
    அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உலகின் அனைத்து பொருளாதாரத்தையும் விட, இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu #USA

    அமெரிக்காவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்நாட்டில் உள்ள தெலுங்கு அமைப்புகள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். சிகாகோவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.



    அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய பலர் முன்வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து நாடுகளும் உற்று நோக்கி வருவதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, கடந்த 4 வருட கால மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், உலக பொருளாதாரம் மெதுவாக சரிந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் மட்டுமே மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
     
    இந்த நிகழ்ச்சி முழுவதுமே தெலுங்கு மொழியில் அவர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. #VenkaiahNaidu #USA
    சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1892-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இந்து சமயம் பற்றி ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. அந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி உலக இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் வருகிற 7-ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
     
    அகில உலக இந்து அமைப்புகள், உலக அளவிலான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உள்பட 3 அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்து சமயத்தை பின்பற்றி உலகம் முழுவதும் பணியாற்றும் பல்துறை வல்லுனர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஷ்வரன் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். தமிழகத்தில் இருந்து பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 2-வது உலக இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் உலக இந்து சமய மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chicago #WorldHinduCongress #VenkaiahNaidu
    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #ChicagoFireAccident
    சிகாகோ:

    அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் புறநகர் பகுதியான லிட்டில் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  இன்று அதிகாலை திடீரென தீ பற்றியது. இதில் இரண்டு வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChicagoFireAccident
    ×