search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 172230"

    • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டு தனிைமயில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 700 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், ஜூன்.30-

    குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனாவால் 79 ஆயிரத்து 930 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    கடந்த சில மாதங்களாக பாதிப்பு குறைந்திருந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குமரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரளாவில் பாதிப்பு வேகமாக பரவியதால் குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டது.

    இருப்பினும் கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது நாகர்கோவில் மாநகர பகுதியிலும் கொேரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொேரானா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சிறையில் அவருடன் இருந்த வேறு கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் நாகர்கோ விலைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 டாக்டர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளான நிலையில் மேலும் ஒரு டாக்டர் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 1,040 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் 51 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதி யில் 12 பேரும், அகஸ்தீ ஸ்வரம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் தலா 4 பேரும், கிள்ளியூர், குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலா 3 பேரும், மேற்புறம், தோவாளை ஒன்றியத்தில் ஒருவரும், முஞ்சி றையில் 9 பேரும், திருவட்டாரில் 6 பேரும், தக்கலையில் 8 பேரும் பாதி ப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் 28 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள் ஆவார் கள். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தற்போது 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளது. சுகாதாரத்துறை அதிகா ரிகள் தடுப்பு நடவ டிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது வீட்டு தனிைம யில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 700 பேருக்கு கொேரானா தொற்று உறுதி செய்ய ப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அந்த பகுதில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    • அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன
    • பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100 நாட்களுக்கு பின் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மருத்துவ கல்லூரி தலைமை அரசு மருத்துவமனையில், 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு மீண்டும் அமைக்கப்பட்டது.

    மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்றுப்பரவலை சமாளிக்கும் வகையிலும், பாதித்தோருக்கு உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மீண்டும் உடுமலை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு 30 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது வரை கண்டறியப்பட்டு வருவது ஆரம்பகட்ட தொற்று நிலை தான். பாதிப்புக்கு உள்ளாகிறவரை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர், உடுமலை, பல்லடத்தில் கொரோனா தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும், ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகில் கீழக்கரைக்கு செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகள் குறித்தும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூடுதல் கட்டிடப் பணிகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் தலைமை மருத்துவ அலுவலர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் சுகாதார வளாகங்களை அமைப்பதற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தவும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, பொதுப் பணித்துறையின் (நீர் வள ஆதார அமைப்பு) கீழ் உள்ள ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென்கலுங்கினையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற் பொறியாளர் ஜெயத்துரை, வட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஞானக்குமார், மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சின்னாளபட்டி அரசு மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் நியமனம் செய்த பின்னரும் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியில் வட்டார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 32 படுக்கைகள் கொண்டு நவீன மருத்துவமனையாக மாற்றப்பட்டு ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட்ட இந்த மருத்துவ மனைக்கு ஒரு வட்டார மருத்துவ அதிகாரி, 3 மருத்துவர்கள், 1 சித்த மருத்துவர், 5-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 2 மருந்தாளுநர்கள் என போதிய அளவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    24 மணி நேர மருத்துவ மனையாக செயல்படும் இந்த மருத்துவ மனையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் ஆய்வு மேற்கொண்ட போது, மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து சிப்ட் முறையில் ஒரு மருத்துவர் 8 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும் என்றும், இவ்வாறு சிப்ட் முறையில் 3 மருத்துவர்கள் 8 மணி நேரம் சுழற்சி முறையில் 3 சிப்டுகளாக 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி சென்றார்.

    இதன் பயனாக 4 மாத காலம் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருந்தனர். இதனால் சின்னாளபட்டி பொது மக்கள் பிரசவம் உள்பட அனைத்து விதமாக சிகிச்சைக்கு எந்த நேரமும் இந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக மருத்துவர்கள் தாங்களாக சிப்ட் முறையை மாற்றி பழைய முறைப்படியே 3 மருத்துவர்கள் மற்றும் ஒரு வட்டார மருத்துவர் என 4 பேரும் காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பணியில் இருப்பதாகவும், பின்னர் வெளியில் சென்று விடுவதாகவும், பின்னர் ஒரு மருத்துவர் மட்டும் மாலை 4 மணிக்கு வந்து ஒரு மணி நேரம் பணியில் இருந்து விட்டு சென்று விடுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இரவு நேரங்களில் தெருநாய்கள் ஓயாமல் குரைத்து கொண்டு இருப்பதால் ஆஸ்பத்திரியில் தன்னால் தூங்க முடியவில்லை என்று லாலுபிரசாத் கூறி இருக்கிறார். #LaluPrasadYadav

    ராஞ்சி:

    கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் ஜெயில் தண்டனை பெற்றுள்ள ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ஜார்கண்ட் மாநிலம் ராய்பூர் ஜெயிலில அடைக்கப்பட்டார்.

    அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த வார்டு அருகே இரவு நேரங்களில் தெருநாய்கள் ஓயாமல் குரைத்து கொண்டு இருப்பதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று லாலுபிரசாத் கூறி இருக்கிறார். எனவே,வேறு வார்டு ஒதுக்கி தரும்படி அவர் கேட்டுள்ளார்.

    இது சம்பந்தமாக லல்லு பிரசாத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான போலா யாதவ் கூறியதாவது:-

    லாலுபிரசாத் சிகிச்சை பெறும் வார்டு அருகே தெரு நாய் குரைப்பதால் அவர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

    எனவே, கட்டண சிகிச்சை அளிக்கும் தனி வார்டுக்கு அவரை மாற்றும்படி கேட்டு இருக்கிறோம். இதற்காக கட்டணத்தை நாங்கள் செலுத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்.

    மேலும் அவர் தற்போது தங்கி உள்ள அறையில் கழிவறை மிக மோசமாக உள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கூறி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது சம்பந்தமாக ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஸ்ரீவஸ்வதா கூறும்போது, லாலுபிரசாத்திடம் இருந்து எங்களுக்கு வேண்டுகோள் கடிதம் வந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெயில் நிர்வாகத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்.

    அவர்கள் அளிக்கும் உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வோம் என்று கூறினார். #LaluPrasadYadav

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு லஞ்சம் கேட்ட துப்புரவு ஊழியரை சஸ்பெண்டு செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கோவை:

    கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

    தற்கொலை மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவ்வாறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஒரு உடலை பிணவறையில் இருந்து வெளியே எடுத்து வந்து உறவினர்களிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஊழியர் லஞ்சம் கேட்கும்போது அருகில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும்போது 2 ஆயிரம், 3 ஆயிரம் பணம் கேட்பதாக ஏற்கனவே புகார் வந்து இருந்தது.

    இந்த நிலையில் பிணத்தை ஒப்படைக்க போலீசார் முன்னிலையில் ஊழியர் லஞ்சம் கேட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தினார். அப்போது லஞ்சம் கேட்டது அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வரும் பரமசிவம்(42) என்பது தெரிய வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து டீன் அசோகன் உத்தரவிட்டார். பரமசிவம் லஞ்சம் கேட்டபோது அங்கு இருந்த போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    ×