search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூயார்க்"

    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டனின் முடிவை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க்கிடம் இழந்துள்ளது. #NewYorkovertakes #topfinancialcentre
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்கும் நாடுகளுடன் முன்னர் இருந்ததுபோல் இனி வர்த்தக உறவுகளை இனி பிரிட்டன் தொடர முடியாது என கருதப்படுகிறது. எனவே, உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.

    அவ்வகையில், முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை  நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது.


    இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. பொருளாதார ரீதியாக சிறப்பிடம் பிடித்துள்ள 100  நகரங்களில் முதலாம் இடத்தில் நியூயார்க், இரண்டாம் இடத்தில் லண்டன் மற்றும் அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. #NewYorkovertakes #topfinancialcentre
    அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    நியூயார்க்:

    அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.

    இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.



    இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா. 

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. #YogaDay #NewYork
    நியூயார்க்:

    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராஜ்ய பிரதிநிதிகள், ஆன்மிக தலைவர்கள், குழந்தைகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் அமினா முகமது பேசுகையில், “இன்றைய உலகம் நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானது. நமது முக்கிய மதிப்புகள் அழிந்து கொண்டிருக்கிற சவாலை சந்தித்து வருகிறோம். நமது வாழ்க்கையில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதையெல்லாம் கடந்து நின்று இன்றைய தினம் இளைய தலைமுறையினர் யோகாவில் ஈடுபட்டு உள்ளனர். நமது உடல், உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அதில் யோகா மிக முக்கியமான, சரியான பங்களிப்பு செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், இந்தியாவில் தோன்றிய யோகா கலையின் பாரம்பரிய பெருமைகளை விளக்கினார். அவரும் யோகா பயிற்சி செய்தார்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தையொட்டி வெளியிட்டு இருந்த செய்தி கொண்ட வீடியோ திரையிட்டு காட்டப் பட்டது.  #YogaDay #NewYork #Tamilnews
    நியூயார்க் நகரில் ஓடும் காரில் 2 பெண்கள் அடிக்கடி முத்தம் கொடுத்து எல்லை மீறி நடந்து கொண்டதால் அந்த ஜோடியை காரில் இருந்து டிரைவர் கீழே இறக்கி விட்டார்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘உபர்’ கால் டாக்ஸியில் டிரைவராக பணிபுரிபவர் அகமத்- இல்- பவுதாரி. இவரது டாக்ஸியில் நேற்று 2 பெண்கள் பயணம் செய்தனர்.

    ஓடும் காரில் 2 பெண்களும் அடிக்கடி முத்தம் கொடுத்து வந்தனர். அதன் பிறகு இருவரும் காரிலேயே அத்து மீறலில் ஈடுபட்டனர்.

    இதனை டிரைவர் கவனித்து எச்சரித்தார். தொடர்ந்து இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டனர். அந்த பெண்கள் லெஸ்பியன் என தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் இருவரையும் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.

    ஒரு பெண்ணின் பெயர் அலெக்ஸ் லோவின் (26) மற்றொரு பெண் எம்மா பிச்ல் (24) இருவரும் 2 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தற்போது மின்கட்டன் நகரில் தங்களது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இவ்வாறு நடந்து கொண்டனர்.

    ஆனால் இருபெண்களும் உபர் டாக்ஸி நிறுவனத்திடம் டிரைவர் மீது புகார் செய்தனர். கால் டாக்ஸி விதியை மீறி தங்களை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியேற்றியதாக கூறினார்கள். இதையடுத்து டிரைவரின் லைசென்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #tamilnews

    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer
    நியூயார்க்:

    அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வாரம் தான் நியூயார்க் போலீஸ் அகாடமியில் படித்து முடித்தார்.

    இந் நிலையில் அவர் நியூயார்க் நகர துணை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பது அங்கு உள்ள சீக்கிய மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்து உள்ளது.



    இதுபற்றி சீக்கிய அதிகாரிகள் சங்கம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவில், “நியூயார்க் நகரில் தலைப்பாகை அணிந்த முதல் பெண் துணை போலீஸ் அதிகாரியை வரவேற்கிறோம். அவரை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் இந்தப் பதவியில் அமர்வது, இதே போன்று சட்ட அமலாக்கல் துறையில் நாமும் அமர வேண்டும் என்ற உந்துதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது” என கூறப்பட்டு உள்ளது.  #GursoachKaur #TurbanedPoliceOfficer

    ×