search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சடலம்"

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

    10 பேர் தூக்கியில் தொங்கிய நிலையிலும், ஒரு 75 வயது வயது பெண் தரையில் கிடந்த படியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

    அவர்கள், தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்பது மர்மமாக இருப்பதால் அப்பகுதியில் பீதி நிலவுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. #RashtrapatiBhavan
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

    இதனை அடுத்து, அறையின் கதவை உடைத்து பார்த்த பின்னர் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு நான்காம் நிலை ஊழியராக இருக்கும் த்ரிலோகி சாந்த் என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

    இதனால், அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேகத்திற்குரிய மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியான நிலையில், அவர்களது சடலத்தை பெற உறவினர்களிடம் ரூ.200 லஞ்சம் கேட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. #VaranasiFlyoverCollapse
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நேற்று புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், மேம்பாலத்தின் கீழ் காரில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது சடலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பலியானவர்களின் உறவினர்கள் சடலத்தை பெற வந்த போது, அங்கிருந்த பிணவறை துப்புரவாளர் ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

    மேம்பால விபத்து தொடர்பாக இதுவரை நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
    ×