search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனர்"

    • தேவகோட்டையில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உஞ்சனை அரசு ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகருகே உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர்.

    அது படிப்படியாக சரிந்து கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளியில் 13 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

    பள்ளிகள் மூடும் நிலையில் இருந்தததால் ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முயன்று வருகின்றனர். மேலும் உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி 6 முதல் 10-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச மாக ஸ்மார்ட் போன், டேப் தருவதாக அறிவித்துள்ளார்.

    அதேபோல் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் தருவதாக தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர் லாசர் அறிவித்துள்ளார். மேலும் மங்கலம் என்ற கிராமத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்களுக்கு ஆட்டோ வாடகையும் ஆசிரியர்களே வழங்குகின்றனர். உயர்நிலைப்பள்ளியில் இணையத்துடன் கணினி வசதி, புரெஜெக்டர் போன்றவற்றையும் ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆசிரியர்கள் போட்டி போட்டு இலவசங்களை அறிவித்து வருவதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளியில் சேரும் மாணவர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொன்மனச்செம்மல் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் கிராமமக்கள் மாலை அணிவித்து வர வேற்கின்றனர். தற்போது இரு பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை 30-ஐ கடந்துள்ளது. மேலும் எண்ணிக்கை உயரும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    திண்டிவனத்தில் வக்கீல் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    ரோசனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 75). இவர் இன்று காலை திருமண விழாவுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கினர்.

    இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    படுகாயமடைந்த மூதாட்டி ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோன்று ராஜாராம் என்பவரது வீட்டை உடைத்து மர்மநபர்கள் புகுந்தனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    திண்டிவனம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரி. இவர் காற்று வாங்க வீட்டு முன்பகுதியில் தூங்கினார். இரவு நேரம் மர்மநபர்கள் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த 500 கிராம் வெள்ளி மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    ஒரே நாளில் திண்டிவனம் பகுதியில் 4 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏறபட்டது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திமுக ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் உதயநிதி படமும் இருக்க, தொண்டர் ஒருவர் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். #DMK #UdhayStalin
    சென்னை:

    திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் கொண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

    அதைப் பார்த்த திமுக தொண்டர் ஒருவர், ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்குப் பதிலளித்துள்ள உதயநிதி, ‘தவறு… மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார். 


    ×