search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரடோனா"

    மெக்சிகோ 2-வது டிவிஷன் அணியான டோராடோஸ் ஜாம்பவான் மரடோனாவை பயிற்சியாளராக நிமியத்துள்ளதாக அறிவித்துள்ளது. #Maradona
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் டியகோ மரடோனா. கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார். இவர் 1986-ல் அர்ஜென்டினா உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

    இவரை மெக்சிகோ இரண்டாவது டிவிஷன் அணியான டோராடோஸ் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டோராடோஸ் தனது சமூக வலைதளத்தில் ‘Welcome Diego’, and ‘Make it a 10’ என்று குறிப்பிட்டுள்ளது.
    இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தில் நடுவருக்கு எதிராக கருத்தை விமர்சித்த மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிபு கேட்டுள்ளார். #Maradona #FIFA2018
    கால்பந்து ஜாம்பவான் மரடோனா (அர்ஜென்டினா) உலககோப்பை கால்பந்து போட்டியின் போது அர்ஜென்டினா விளையாடிய ஆட்டத்தை நேரில் பார்த்தபோது அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டனார்.

    நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றபோது ஆபாச சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தை மரடோனா விமர்சனம் செய்தார். இதில் இங்கிலாந்து பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றியை திருடிவிட்டது என்றும் நடுவர் ஜிஜெர் நடவடிக்கை ஒரு தலைபட்சமாக இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து மரடோனாவுக்கு சர்வதேச கால் பந்து சம்மேளனம் (பிபா) கடும் கண்டனம் தெரிவித்தது.



    இந்த நிலையில் மரடோனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் சொன்ன கருத்து ஏற்று கொள்ள முடியாதது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். நடுவர்களின் பணியை நான் மிகவும் மதிக்கிறேன். நடுவர்களாக செயல்படுவது என்பது சாதாரணமான வேலை அல்ல என்று கூறியுள்ளார். #Maradona #FIFA2018
    நடுவருக்கு எதிரான கருத்தை விமர்சித்த மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. #Maradona
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் இடையிலான 2-வது சுற்று ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ‘இந்த ஆட்டத்தில் நடுவர் ஜிஜெர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். அவரது சில முடிவுகள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருந்தன’ என்று கொலம்பியா கேப்டன் ராடமெல் பால்காவ் சாடியிருந்தார்.

    அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா, ‘இங்கிலாந்து நினைவுகூரத்தக்க ஒரு வழிப்பறியை செய்து விட்டது’ என்று விமர்சித்தார். இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், கொலம்பியா வீரர் கார்லஸ் சாஞ்சசை பவுல் செய்ததற்காக கொலம்பியாவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்பது மரடோனாவின் எண்ணமாகும். ‘இங்கு ஒரு ‘ஜென்டில்மேன்’ தீர்ப்பளிக்கிறார். அவர் தான் போட்டி நடுவர். அவரை போன்ற ‘நேர்மையான நடுவர்’ கூகுளில் தேடிப்பார்த்தாலும் கிடைக்கமாட்டார். அந்த நடுவர் ஜிஜெர் ஒரு அமெரிக்கர்.... என்னவொரு எதிர்பாராத பொருத்தம்’ என்றும் கிண்டலடித்து இருந்தார்.

    இந்த நிலையில் மரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. நடுவருக்கு எதிரான அவரது கருத்து முற்றிலும் நியாயமற்றது என்று பிபா கூறியுள்ளது. இதையடுத்து தனது கருத்துக்கு மரடோனா வருத்தம் தெரிவித்துள்ளார். 
    உலக கோப்பை கால்பந்து லீக் தொடரில் நைஜீரியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற உற்சாகத்தில் கால்பந்து ஜாம்பவான் மரடோனா தவறி விழுந்து காயம் அடைந்தார். #WorldCup #NGAARG #Maradona
    கால்பந்து ஜாம்பவானான அர்ஜென்டினாவின் மரடோனா நேற்று அர்ஜென்டினா- நைஜீரியா மோதிய ஆட்டத்தை பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

    14-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்சி கோல் அடித்தவுடன் மரடோனாவிடம் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நாற்காலியில் இருந்து எழுந்து துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    அதன்பின் நைஜீரியா பதில் கோல் போட்டவுடன் மரடோனா தலை தொங்கிய படி சோகத்துடன் இருந்தார். அர்ஜென்டினா வீரர்கள் கோல் கம்பத்துக்கு அருகே செல்லும்போதெல்லாம் கோல் அடிப்பார்கள் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.


    ஆனால் நேரம் செல்ல செல்ல கோல் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்து அர்ஜென்டினா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போய் விடுமோ என்ற கவலை அவர் முகத்தில் தெரிந்தது.

    அந்த வேளையில் கடைசி நேரத்தில் அர்ஜென்டினா 2-வது கோலை போட்டது. இதனால் சோகத்தில் இருந்த மரடோனா மீண்டும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். அப்போது நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததில் லேசான காயம் அடைந்தார்.

    இதையடுத்து போட்டி முடிந்ததும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அர்ஜென்டினா 2-வது கோலை போட்டபோது மரடோனா கையில் ஆபாச சைகை காட்டினார். #WorldCup #WorldCup2018 #NGAARG #Maradona #DiegoMaradona
    உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் மரடோனா புகை பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார். #Maradona #Argentina
    கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா புகழின் உச்சத்தில் இருந்த அவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டவர். ஊக்க மருந்து உள்பட பல விவகாரங்களில் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனாலும் அவரை கால்பந்து ரசிகர்கள் வெகுவாக நேசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மரடோனா புதிய சர்ச்சையில் சிக்கினார். அர்ஜென்டினா- ஐஸ்லாந்து மோதிய ஆட்டத்தை அவர் நேரில் ரசித்தார். பார்வையாளர் மாடத்தில் இருந்த மரடோனா புகையை பிடித்தவாறு போட்டியை ரசித்தார். உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் 12 மைதானங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மரடோனா அதையும் மீறி புகை பிடித்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து மரடோனா தனது முகநூல் பக்கத்தில் புகை பிடித்ததற்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்.   #Maradona #Argentina
    அர்ஜென்டினா அணி ஐஸ்லாந்திடம் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார். #DiegoMarodona #Argentina
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.



    இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,

    ‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார்.  #DiegoMarodona #Argentina
    ×