search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174171"

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூடுகிறது. #TNGovt #Release7Innocents
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் விடுதலை செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

    இதனை அடுத்து, 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. #RajivMurderCase
    புதுடெல்லி:

    முன்னாள் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

    இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது. 
    ×