search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
    • பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    திருப்பூர்

    திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பாக பொறியாளர்கள் தின விழா சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் செயலாளர் ஆர்.பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். சங்கத்தலைவர் ஜெயராமன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில கூட்டமைப்பின் தலைவர் பொறியாளர் ராஜேஷ் தமிழரசன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

    சங்க மாநில செயலாளர் பொறியாளர் காந்தி, மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னாள் தலைவர்கள் கலைச்செல்வன்,குமார்,ரமேஷ், பொன்னுச்சாமி, ரத்னசபாபதி, மணிகண்டன், முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பெண் குழந்தைகள் இல்லத்தில் பா.ஜ.க பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்தநாள் விழா இன்று குமரி மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாள் விழா

    நாகர்கோவில் செட்டி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பேரில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பிரதமரின் 73 வயதை குறிக்கும் வகையில் 73 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், தொழி லதிபர் என்ஜினீயர் ஜெயக் குமார், மாநகர தலைவர் ராஜன், கவுன்சி லர்கள் ரமேஷ், தினகரன், நாகர்கோ வில் தெற்கு மாநகர் முன் னாள் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஊட்டுவாழ் மடத்தில் உள்ள பெண் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட பாரதியஜனதா பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. இதில் சந்திர சேகர், விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் இனிப்பு வழங்கப்பட்டது.

    • அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.

    சாயல்குடி

    சாயல்குடியில் இந்தியா கூட்டணி மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் அண்ணா பிறந்த தின விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகை தீன் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர் பாஸ்கரன் வரவேற்றார்.

    மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் கணே சன், சாயல்குடி தி.மு.க. பேரூர் செயலாளர் வெங்க டேஷ்ராஜ், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை பாக்கியராஜ், தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    த.மு.மு.க. தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், புரட்சிகர இளைஞர் மாவட்ட பொருளாளர் தமிழ் முருகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் காமராஜ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டி, மாவட்ட பிரதிநிதி புனித ராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    அண்ணாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மனிதநேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி நன்றி கூறினார்.

    • அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • சுற்றுச்சூழல் அணி சார்பில் ஜெசி என்ற ஜெயசிங்கராயர் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் நெல்பேட்டையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு அண்ணா வின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாநகர் மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் ஜெசி என்ற ஜெயசிங்கராயர் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தணிக்கை குழு உறுப்பினர் வேல்சாமி, முன்னாள் மேயர் குழந்தை வேலு, மாநில தீர்மான குழு அக்ரி கணேசன், அவைத்தலைவர் ஒச்சு பாலு, தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் போஸ் முத்தையா, வட்டச் செய லாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன் ஆர்.ஆர்.மகேந்திரன், புதூர் வேலு, வி.சி.மாதவன், அழகுசுந்தரம், உழவர் சந்தை திராவிட மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் வ.உ.சி. பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் மாலை அணிவித்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் வ.உ. சிதம்பரனார் சிலை உள்ளது. அவரது 152-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் வெங்கடேசன் எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச் செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர் பசும் பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூ ராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன், பேரூர் இணை செயலாளர் ஸ்டா லின், ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் மாலை அணிவித்தனர். முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர் காளிதாஸ், யூனியன் சேர்மன் மகா லட்சுமி ராஜேஷ் கண்ணா, மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி, நகர செயலாளர் முருகேசன், கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன், டீக்கடை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன
    • ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தின விழாக் கொண்டாடப்பட்டது. அதற்குப் பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் தினத்தை கருப்பொருளாகக் கொண்டு கவிதை, நோக்க வுரை, நடனம், சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன. அதோடு மாணாக்கர்கள், ஆசிரியர்க ளாகவும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் போல் வேடம் புனைந்து மழலையர் பிரிவினரும் ஒவ்வொரு வகுப்பிற்கும்சென்று பாடம் நடத்தியது அனைவரும் பாராட்டும்விதமாக இரு ந்தது. குறிப்பாக, ஹை-டெக் வகுப்பறையில் லே ப்டாப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் கற்றதும்- கற்பித்ததும் சிறப்பாக இருந்தது.ஆசிரியர்களை மகிழ்வி ப்பதற்காக மாணா க்கர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதும், ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்புப் போடடிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளித் தலைவர் சிறப்பு பரிசுகள் வழங்கினார்.

    • ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார்
    • டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கா ன்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைைம தாங்கினார்.

    மாணவி வித்யா சரோஜினி வரவேற்று பேசினார். மாணவிகள் அதிதி, தர்ஷனா மற்றும் தனிகா வரவேற்பு நடனம் ஆடினார். மாணவி ஆஷிகா ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்றனி சுரேஷ் ஆசிரியர் தின உரையாற்றி ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி யினை நடத்தினார். பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார். மேலும் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    முடிவில் மாணவன் லிரிஷ் நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை மாணவி அத்வைதா மற்றும் மாணவன் பெரிஷ் மத்தியூ தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி டெல்பின் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், அஸ்ரபா, ஷீலா மற்றும் கல்வி ஒருங்கி ணைப்பாளர் முத்துசிவம் இணைந்து செய்திருந்தனர்.

    விழாவில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பூங்கொ த்து கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து கூறினர்.

    • ராஜபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் வ.உ.சி.152-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் நகர வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் சுதந்தி ரபோராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர வடக்கு செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலை மையில், தெற்கு செயலாளர் பரமசிவம் முன்னிலையில் ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோட்டில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகசேகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் ராணி மற்றும் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது.

    சேலம்:

    தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ேஹப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மற்றும் பணி புரியும் இளைஞர்கள், இளம்பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் ஏராளமானோர் இதில் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இைத தொடர்ந்து இன்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர் . பின்னர் அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்ப அவர்கள் உற்சாகமாக ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து டிரம்செட், பேண்ட் வாத்தியங்களும் அங்கு இசைக்கப்பட்டன. அந்த இசைக்கேற்ப அனைவரும் கைகளை உயர்திய படி ஆடி, பாடி அசத்தினர். மேலும் சர்ட்கள் அணிந்த படி ஆடி பாடிய இளைஞர்கள், இளம்பெண்கள் கலர் பேப்பர்களையும் வீசி, விசில் அடித்த படி உற்சாகத்துடன் துள்ளி குதித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இளம்பெண்கள் பலர் விசில்களை பறக்க விட்ட படி துள்ளி குதித்தது அனைவரையும் வியக்க வைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. சேலத்தில் முதல் நாளாக இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த பகுதியே களை கட்டியது.

    இதைெயாட்டி சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வணிகவரித்துறை அலுவலகம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளுக்கான மின் வயரில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது.

    இதனால் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு அந்த வயர்கள் சரி செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியதுடன் களை கட்டியது. மேலும் இந்த விழாவை மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடிவு செய்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். 

    • ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் அருகே உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் ஓணம் பண்டி கையை முன்னிட்டு கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் இ.எம். அப்துல்லா கலை யரங்கத்தில் மத நல்லிணக்க ஒற்றுமைகளை வெளிப் படுத்தும் அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி னர்.

    முன்னதாக கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல் தலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாலகி ருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றி, வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். இதில் சிறந்த கோலங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழ ங்கப்பட்டன. அதன் பின்னர் மாண விகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நிகழ்ச்சியை (ஐ.கி.யூ.ஏ.சி.) பிரிவின் தலைவர் அன்வர் ஷாகின் ஒருங்கி ணைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர். 

    • நேஷனல் அகாடமியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி யில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை வகித் தார். கல்லூரி ஆசிரியர்கள் மது, மோனிஷா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதக் கத்துல்லா வரவேற்றார். ஒணம் பண்டிகையொட்டி கல்லூரியில் மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கபட்டன. முடிவில் ஆசிரியர் பூவிழி நன்றி கூறினார்.

    • ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
    • மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள்.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. பள்ளித்தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். இயக்குநர் இலக்கியா, முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முன்னிலை வகித்தனர், கவுரவ விருந்தினர்களாக வெள்ளறடை ஆர்.எம். தேவி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் மோகன், தென்காசி எஸ்.எம்,ஏ கல்விக்குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், கரிக்ககம் ஸ்ரீ குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் டைட்டன்ஸ், ஒலிம்பியன்ஸ், ஸ்பார்டன்ஸ் என மூன்று குழுக்களாகப் பிரிந்து அத்தப்பூ கோலமிட்டார்கள். மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ×