search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சென்னையில் நடந்த செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
    சென்னை:

    செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்.

    செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    சுவாமி விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான் கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். சுமார் 45 சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன் மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சுமார் ஒரு மாதகால கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். #SchoolsReopend
    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால், மாணவ மாணவிகள் விடுமுறையை கொண்டாடிவிட்டு பள்ளிக்கு இன்று உற்சாகமாக வருகை தந்தனர். இன்றே, பாடபுத்தகம், சீருடை உள்ளிட்டவை வழங்க பள்ளிக்கல்வித்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங்கும் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை இறை வணக்கத்திற்கு பின்னர் மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். 
    காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.#CauveryManagementAuthority #CauveryIssue
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

    அதன்படி நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.



    இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என கூறியிருந்தது.

    திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய்ந்து தீர்ப்பு இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு செயல் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், உடனே இதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயல் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா தாக்கல் செய்த மனுவை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    திருத்தப்பட்ட செயல் திட்ட அறிக்கையில், தினந்தோறும் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை, மேலாண்மை ஆணையம் மாதம் தோறும் கணக்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.#CauveryIssue #CauveryDraftScheme #CauveryManagementAuthority 
    காவிரி பிரச்சனையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.



    இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

    இதையடுத்து தீர்ப்பு நாளை மாலை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #CauveryIssue #CauveryDraftScheme #CauveryManagementAuthority 
    கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 91 நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொதுமக்களின் போராட்டத்தை கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வரும் 22-ந்தேதி தூத்துக்குடியில் அனைத்து மக்களும் இணைந்து முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு நாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்.

    கூடங்குளத்தில் அணு உலை கழிவுகள் வளாகத்திலேயே கொட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர். இது தென்மாவட்டங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து மக்களை பாதுகாக்க அணு உலையில் மின்சார உற்பத்தியை நிறுத்த வேண்டும். கர்நாடக தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு நன்மை கிடைக்காது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×