என் மலர்
நீங்கள் தேடியது "உடல்நலக்குறைவு"
- ஏ.ஆர். ரகுமானுக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக அவரை டாக்டர்கள் பரிசோதித்தார்கள்.
அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் இசை அமைத்து வருவதால் ஐதரா பாத், மும்பை, லண்டன் என்று சுற்றிக் கொண்டி ருப்பார்.
அந்த வகையில் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து அவரது மகன் அமீன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எங்களது ரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு பிரார்த்தனை ஆதரவு எல்லாவற்றிற்கும் ரொம்ப நன்றி. என் அப்பா நலமுடன் இருக்கிறார் என்பதை உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்தவர் துரை.கோவிந்தராஜன் (வயது 90). இவர் தமிழக அரசின் முன்னாள் கொறடா ஆவார்.
இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் துரை.கோவிந்தராஜனின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை காவேரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க. துணை பொதுசெயலாளர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் மனோகரன், அமைப்பு செயலாளர் சீனிவாசன், வேங்கை கணேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, திராவிடர் கழக மண்டல தலைவர் அய்யனார், திருச்சி மாவட்ட த.மா.கா. தலைவர் குணா, தஞ்சை தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்க ளை அ.ம.மு.க. மருத்துவபிரிவு இணை செயலாளர் துரை.கோ.கருணாநிதி, வடக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் துரை.கோ.பாண்டியன், திராவிடமணி பால்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.
- முதல் கட்ட சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள புதிய ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் உணவு உண்ட 43 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு, பழச்சாறு சாப்பிட்ட பிறகு சுமார் 43 பேர் வாந்தி எடுத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் பி.எம்.சௌஹன் தெரிவித்தார்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் கூறினார். அவர்களில் பெரும்பாலோர் ஆரம்ப சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
- அன்பழகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
- வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அருகே மணக்காடு பிடாரிக்கட்ட ளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த 7-ந் தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- வேலைக்கு அமர்த்தியவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரனின் மகள் பர்வீன். இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், 'எனது தாயார் ஜெயபிரியா கடந்த ஜனவரி மாதம் குவைத் நாட்டுக்கு, வீட்டு வேலை செய்வதற்காக முகவர்கள் மூலமாக சென்றார். அவருக்கு கடந்த 7-ந் தேதி முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சொந்த ஊருக்கு வர விரும்புகிறார். ஆனால் வேலைக்கு அமர்த்திவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். எனவே எனது தாயாரை இந்தியாவுக்கு அழைத்து வர உதவ வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து மனு கொடுத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.
- மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர்.
- தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் ஒரு சிலர் வீடுகளில் படுத்தபடுக்கையில் தொடர் சிகிச்சையிலும், மருத்துவ கண்காணப்பிலும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த முத்து (வயது 59). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தார், அவரை மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்த சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த முத்து நேற்று மாலை இறந்துவிட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, விஷ சாராயம் குடித்ததால் தான் முத்து இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தார் புகார் அளித்தனர். இதன் பேரில் மரக்காணம் வருவாய்த்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எதனால் இறந்தார் என தெரிய வரும் என்று போலீசார் கூறி, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களை அனுப்பி வைத்தனர்.
- முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
- உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.
இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் கலந்துக் கொள்ள திட்டம்.
- உடல்நலக் குறைவால் நடை பயணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவால் உ.பி.யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் அவர் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடைபயணத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், "உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளேன். யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
- விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
- மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூங்காவில் உள்ள 21 வயது உடைய விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அது உணவு உண்பதை குறைத்து சோர்வாக காணப்படுகிறது.
இதை த்தொடர்ந்து வங்கப்பு புலியின் உடல்நிலையை பூங்காவில் உள்ள மருத்துவ குழு வினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பூங்காவில் பராமரிக்கப் பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளு தலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது. புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. இருப்பினும் வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்படுகிறது. மேலும் பூங்கா மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது.
- புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது.
வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி இன்று காலை உயிரிழந்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளுதலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது.
புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று ஆண் புலி உயிரிழந்துள்ளது.
- திருவெண்ணைநல்லூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். அவரது மனைவி சாந்தி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இன்று காலை இறந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.
- கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி காந்திமதி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகளும், ஒருமகனும் உள்ளனர். கடந்த சிலநாட்களாக காந்திமதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் அவர் இருந்தார். நேற்று இரவு வீட்டில் குழந்ைதகள் கண்அயர்ந்து தூங்கினர். அப்போது காந்திமதி திடீர் வீட்டினை உள்புறமாக பூட்டினார். பின்னர் கயிறால் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
காலையில் எழுந்து பார்த்த குழந்தைகள் காந்திமதி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். கதவை திறந்து பார்த்த போது காந்திமதி பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து காந்திமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.